கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை அரசு பேருந்து நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மகன் சஞ்சய் (15). இவர் கஸ்பாபேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறையால் சஞ்சய் வீட்டில் இருந்து உள்ளார். பின்னர் மதியம் ஒரு மணி அளவில் தனது நண்பர்களுடன் சஞ்சய் அதே பகுதியில் உள்ள சிவக்குமார் என்பவரின் கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது விளையாட்டு மிகுதியால் சஞ்சய் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாது எனவும் கூறப்படுகிறது.

அப்போது திடீரென சஞ்சய் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சய் தண்ணீரில் மூழ்கினார்.

இது குறிப்பு ஈரோடு தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றினர். பின்னர் சஞ்சய் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com