search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Buses"

    • வருகிற 8-ந்தேதி பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊருக்கு சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் செல்லும் நிலையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இந்த ஆண்டும் ஜனவரி 14, 15 ஆகிய தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.

    எனவே பொங்கல் பண்டிகைக்காக எத்தனை சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் இந்த ஆண்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கலாமா? என்பது தொடர்பாகவும் ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது.

    வருகிற 8-ந்தேதி பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊருக்கு சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

    • அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு 9445014452, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்றுவர ஏதுவாக சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 20 அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் 26-ந் தேதி (இன்று) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in, மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலி(ஆப்), ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு 9445014452, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதை தவிர்த்து, அனைவரும் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக வருகிற 22-ந்தேதி 350 பஸ்களும் 23-ந்தேதி 290 பஸ்களும் என மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், முக்கியமான பண்டிகைகள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையானது சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்களோடு இணைந்து வருகிறது.

    எனவே, பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதை தவிர்த்து, அனைவரும் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் கூடுதலாக வருகிற 22-ந்தேதி 350 பஸ்களும் 23-ந்தேதி 290 பஸ்களும் என மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • 2 ஆயிரத்து 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன
    • நகரத்திற்குள் செல்ல இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது

    வேங்கிக்கால்:

    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்கு வரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் இயக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

    பின்னர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து நகரத்திற்குள் செல்ல இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன், பொது மேலாளர் செந்தில், தொ.மு.ச. பேரவை செயலாளர் சவுந்தரராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • நாளை முதல் 27-ந் தேதி வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அண்ணா மலையார் தகோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 26-ந் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

    இதேபோல் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.

    இந்த விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாளை முதல் (சனிக்கிழமை) 27-ந் தேதி (திங்கட்கிழமை) வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக மினிபஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் மற்றும் பக்தர்கள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • கந்தசஷ்டி விழா கடந்த 13ந் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

    திருப்பூர் : 

    கந்த சஷ்டி, சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு தினசரி இரவு திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு கந்தசஷ்டி விழா கடந்த 13ந் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று சூரசம்ஹாரமும், 21-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

    திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகம் வாயிலாக இயக்கப்படுகிறது. தினமும் இரவு 7மணி முதல் 10 மணி வரை கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் இயங்கும். தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும். பஸ்சில் பயணி ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், இந்த ஆண்டும் நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் (யூ.டி.) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (என்.எஸ்.எஸ்.) சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.

    சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

    30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பஸ்களுக்கு ஆன்-லைன் மூலமாக, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ செயலி (ஆப்) ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரை இச்சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கபடும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, அவரவர் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு பயணம் செய்ய ஏதுவாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொ ண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய  இடங்களிலிருந்து சென்னைக்கு நாளை 50 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    13-ந் தேதி 500 கூடுதல் பஸ்களும், 14-ந் தேதி 250 கூடுதல் பஸ்களும், மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை 100 கூடுதல் பஸ்களும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் 200 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்பி செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்த ப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையொட்டி ஏற்பாடு
    • பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

    இதனை கொண்டாட வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை பூந்தமல்லியில் இருந்து ஒசூருக்கு 10 பஸ்கள், பூந்தமல்லியில் விருந்து வேலூருக்கு 50, திருப்பத்தூருக்கு 30, ஆற்காட்டிற்கு 20, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டுக்கு 10 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 மற்றும் பெங்களூருக்கு 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெள்ளிக்கி ழமையான நேற்று முதலே ஏராள மானோர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து இன்றும் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் திரும்பி செல்ல ஏதுவாக வரும் 13-ந் தேதி திங்கள் கிழமை மதியம் முதல் 14 மற்றும் 15-ந் தேதி வரை வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம், திருச்சி, ஒசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், உடுமலை பிரதான வழித்தடமாக உள்ளது.
    • திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகளின் தலமும் அமைந்துள்ளதால் பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    உடுமலை:

    கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், உடுமலை பிரதான வழித்தடமாக உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், பாலக்காடு போன்ற பிற மாநிலத்தை சேர்ந்த பகுதிகளில் இருந்தும், இங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.

    திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகளின் தலமும் அமைந்துள்ளதால் பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது வழக்கமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்ற விகிதத்தில், பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு நாட்களில் கூடுதல் பஸ்கள் இல்லாததால், வெளியூரிலிருந்து வரும் பயணிகள் சரியான பஸ் நேரமும் தெரியாமல், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். எனவே, தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி உடுமலை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை அரசு போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மதுரை மண்டல மேலாண் இயக்கு நர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), மதுரை போக்கு வரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு இன்று முதல் 11-ந்தேதி வரை 565 பேருந்து களும், பண்டிகைக்கு பின்பு 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை 485 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

    மதுரை, திண்டுக்கல், தேனி, பழனி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பேருந்து நிலையங்க ளிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச் செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணி களின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது.

    இப்போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக் கானல், கொல்லம், மூணாறு, திருப்பூர், கோவை, மேட்டுப் பாளையம், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருசெந்தூர், நெய்வேலி, திருவண்ணா மலை, விழுப்புரம், சென்னை, மன்னார்குடி, கடலூர், நாகூர் மற்றும் நெடுந்தூர பயணிகள் சிரம மின்றி பயணிக்கவும், முன் பதிவில்லா பேருந்துக ளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரி சலையும், கால நேர விர யத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்கு வரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையலாம். மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏது வாக பயணிகளுக்கு வழி காட்டவும் சிறப்பு பேருந்து களை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலை யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு சென்னை நகருக்குள் அனுமதி மறுக்கப்படும்.
    • ஆந்திரா போன்ற மாநிலம் செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.

    சென்னை:

    தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    போலீஸ் கமிஷனர் உத்தரவுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    சென்னை நகரில் புரசைவாக்கம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் தியாகராயநகர் ஆகிய பகுதிகளில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 இடங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லவேண்டும்.

    என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு செல்பவர்கள் பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லலாம். தியாகராயநகருக்கு செல்பவர்கள், ஜி.என். செட்டி ரோடு, வெங்கட்நாராயணா ரோடு போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவிட்டு செல்லவேண்டும்.

    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு சென்னை நகருக்குள் அனுமதி மறுக்கப்படும். வணிக உபயோகத்துக்காக சரக்குகளை ஏற்றிச்செல்லும் மினி கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால், மினி கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படும். கனரக வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும்.

    தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 10 ஆயிரம் அரசு பஸ்கள் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரை இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் எத்தனை இயக்கப்படும் என்பது குறித்து அதன் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    சென்னையில் கே.கே.நகர், தாம்பரம், கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 5 இடங்களில் இருந்து இந்த 10 ஆயிரம் அரசு பஸ்களும் புறப்பட்டுச் செல்லும். ஈ.சி.ஆர்.சாலை வழியாக செல்லும் பஸ்கள் கே.கே.நகரில் இருந்தும், திண்டிவனம் வழியாக செல்லும் பஸ்கள் தாம்பரத்தில் இருந்தும், நெல்லை, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லியில் இருந்தும், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.

    இதுதொடர்பாக ஏற்கனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர்செய்ய பணியில் இருப்பார்கள். குறிப்பாக வெளி இடங்களுக்கு பஸ்கள் புறப்பட்டுச் செல்லும் இந்த 5 இடங்கள் உள்ள பகுதிகளில் 150 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஆலந்தூர் பகுதிகளில் சாலையோரமாக நின்று பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது என்று ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு பஸ்களை நிறுத்தி ஏற்றிச்செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம். ஏதாவது பிரச்சினை என்றால், போலீசார் உடனடியாக விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×