search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling"

    • வேப்ப மரங்கள் பலவற்றை சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 20க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.
    • அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 20க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார், மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில், ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டவுடன் அந்தப் பகுதியில் இருந்த சிலர் எழுந்து ஓட முயற்சித்த போது அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள், மாதப்பூர் ஊராட்சி விஐபி., நகரில் 20-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் மாதப்பூர் கதர்க்கடை வீதியைச் சேர்ந்த கருப்பையா மகன் வீரமணி(33) ,அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மகாலிங்கம்,(34) ,பெரியசாமி மகன் திருமலைச்சாமி(25), ஆறுமுகம் மகன் வெங்கடாசலம்(43), தனலிங்கசாமி,(28) ,சக்திவேல்(57) ஆகிய 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
    • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.79.12 லட்சம் மதிப்பிலான 1.338 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • 3 விமானங்களில் கடத்தப்பட்டு வந்த தங்கம் குறித்து போலீசார் 8 பயணிகளிடம் விசாரணை

    கே.கே.நகர்,

    மலேசிய தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்களில் வந்த, பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் வெளியேற அனுமதித்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 8 பயணிகளை தனியே அழைத்து சென்று அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் கொண்டு வந்திருந்த செண்ட் பாட்டில்கள், பெண்கள் கைப்பை ஆகியவற்றை சோதனையிட்ட போது அதில் தகடு வடிவிலும், குச்சி வடிவிலும் தங்கம் பதுக்கி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இவ்வாறு கடத்தி வரப்பட்ட ரூ.79.12 லட்சம் மதிப்பிலான 1338 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சமூக விரோதிகள் சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் ஆய்வு செய்த போது 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை முழுமையாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கிருந்த சில மரங்களின் பெரிய, பெரிய கிளைகளையும் வெட்டி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் கூறியதாவது;-

    இந்த வீட்டுமனை இடத்தில் மாதப்பூர் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் எண்ணற்ற மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வருவாய் ஆய்வாளருக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை கண்டறிந்து போலீசார் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சியில் முறைகேடாக கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது
    • கடத்தல் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    திருச்சி,

    தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் காமினி உத்தரவின்பேரில் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், திருச்சி கோட்டை பகுதியில் கரூர் சாலை, குடமுருட்டி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியின் அருகில், போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை (லோடு வேன்) நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் வந்த 3 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருச்சி, கீழரண்சாலை பகுதியைச் சேர்ந்த பெரியண்ணசாமி (30), முத்தரசநல்லூரை சேர்ந்த விஜய் (24), பாலசுப்பிரமணியன் (23) என்பதும், அவர்கள் முறைகேடாக 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து, அரசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • கோலாலம்பூரில் இருந்து ஆமைகள் கடத்தி வந்தவரிடம் விசாரணை

    திருச்சி,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.இதே போன்று திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வெளிநாட்டு பணத்தாள்களை கடத்திச் செல்வதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்வதும் அதிகளவில் அரங்கேறி வருகிறது.இந்தநிலையில், நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி இருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் மர்ம பொருளை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.இதனைத்தொடர்ந்து அவர்கள் அந்த உடமையை சோதனை செய்த போது அதில் சுமார் 5 ஆயிரம் எண்ணிக்கையில் நட்சத்திர ஆமை இருந்தது. அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆமையின் மதிப்பு மற்றும் அதனை கையாளும் விதம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பின்னர் ஆமை குறித்த அறிக்கை விரைவில் சுங்கத்துறை மற்றும் வனத்துறையினரின் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு ஆமை கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதேபோல், திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்றனர்.அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித்குமார் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.

    அந்த தீர்ப்பில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    • திருச்சி விமான நிலையத்தில்ரூ .19.12 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • பெண்களுக்கான ஹேண்ட்பேக்கில் மறைத்து கடத்தி வந்தவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் வெளியேற அனுமதி அளித்தனர். அப்போது துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பெண்களுக்கான கைப்பையில் ரூ.19.12 லட்சம் மதிப்பிலான 318 கிராம் குச்சி வடிவிலான தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி, தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    • தொட்டியம் அருகே எம்.புதூரில் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது
    • தப்பி ஓடிய இருவருக்கு போலீசார் வலைவீச்சு

    தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் போலீஸார் தொட்டியம் - காட்டுப்புத்தூர் சாலை,எம். புத்தூர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியினை சோதனைக்காக நிறுத்தி உள்ளனர். போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு, டிரைவரும் உடன் வந்த நபரும் தப்பி ஓடினர். அந்த லாரியை போலீசார் சோதனையிட்டபோது, அதில் அனுமதி இன்றி மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், லாரியை விட்டு விட்டு தப்பியோடியவர்கள் ஏலூர்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், மாகாளிப்பட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

    • விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • பேஸ்ட் வடிவில் தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கேரளாவுக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் கேரளா வரும் விமானங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நெடும்பாச்சேரி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தை சோதனை செய்தனர். அப்போது பயணிகள் அமரும் இருக்கைக்கு அருகே ஒரு குழாய் கிடந்தது. அதில் பேஸ்ட் வடிவில் தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஒரு கிலோ தங்கம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், 2 ஆயிரம் கிலோ குருணை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது.
    • கோழி பண்ணை தீவனத்திற்காக மினி லாரியில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு செல்வதாக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் , 2000 கிலோ குருணை அரிசி மூட்டைகள் என மொத்தம் 2.3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து மினி லாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 24 ) என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள மீன் மற்றும் கோழிப் பண்ணை தீவனத்திற்காக மினி லாரியில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தி வந்த திருமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது.
    • இங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது. இங்கு பலா, சில்வர் ஓக், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    பட்டா நிலங்களில் உள்ள பல வருடங்கள் ஆன மரங்களை வெட்டி விற்க , நில உரிமையாளர்கள் விண்ணப்பித்தால் கலெக்டர், வன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, குறிப்பிட்ட மரங்களை மட்டும் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

    ஆனால், மரங்களை வெட்ட ஒரு பகுதியில் மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு, கொல்லிமலையில் பல இடங்களில் சட்ட விரோதமாக வியாபாரிகள் மரங்களை வெட்டி கடத்திச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு கொல்லிமலை பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டப்பட்ட மரங்களை 6 லாரிகளில் லோடு ஏற்றி, உள்ளே உள்ள மரங்கள் இருப்பது தெரியாமல், தார்பாய் போட்டு மூடி அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் நேற்று அதிகாலை, எவ்வித சோதனையுமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்க ள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா கூறுகையில், இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரை உடனடியாக விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலீசார் மூலம் கொல்லிமலையில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    ×