search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள்."

    • வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சமூக விரோதிகள் சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் ஆய்வு செய்த போது 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை முழுமையாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கிருந்த சில மரங்களின் பெரிய, பெரிய கிளைகளையும் வெட்டி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் கூறியதாவது;-

    இந்த வீட்டுமனை இடத்தில் மாதப்பூர் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் எண்ணற்ற மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வருவாய் ஆய்வாளருக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை கண்டறிந்து போலீசார் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×