search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling"

    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை 2 கி.மீ. தூரம் துரத்தி பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்
    • பிடிபட்டவரின் பார்சலில் இருந்து ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்

    கே.கே.நகர், 

    துபாயிலிருந்து நேற்று திருச்சி வந்த விமான பயணிகளை வான் நுண்ணறி பிரிவு சுங்கத்துறையினர் சோதனைக்கு பின்னர் வெளியேற அனுமதித்தனர். அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பி வைத்துவிட்டு திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள சென்ற போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களது பொருட்களை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடமைகளின் மீது துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக முற்பட்ட போது அந்த இரு நபர்களில் ஒருவர் முனைய வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனை கண்ட வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் துரத்தலுக்கு பின்னர் அவர் சுங்கத்துறையினரிடம் பிடிபட்டார். அவரை விமான நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த பயணிகள் இருவரும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களிடமிருந்து சுமார் 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55 .20 லட்சம் என தெரிய வருகிறது

    • நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

    போலீஸ் ரோந்து

    அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ரேசன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வாழப்பாடி அருகே உள்ள கீரிப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    6 பேர் கைது

    இது தொடர்பாக போலீசார் ஆத்தூர் பகுதியை சேர்ந்த விக்டர் ேஜம்ஸ், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா, வாழப்பாடியை சேர்ந்த சுப்பிரமணி, குகை பகுதியை சேர்ந்த நடேசன், ஒடிசாவை சேர்ந்த ஷாமால் கோம் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். லாரியில் 3 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு தயாராக இருந்தது.

    ஊழியர் தப்பி ஓட்டம்

    இந்த நிலையில் இந்த ரேசன் கடையின் ஊழியருக்கும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரம் என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டு ரேசன் அரிசி கடத்த முயன்றனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் பவுடர் வடிவில் ரூ.10½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது

     கே.கே.நகர், 

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை பிரிவு பகுதியில் கேட்பாரற்று ஒரு அட்டை பெட்டி கிடந்தது. அதனை அதிகாரிகள் சோதனை செய்ததில் பவுடர் வடிவிலான தங்கம் இருந்தது.வெளிநாட்டில்இருந்து கடத்தி வந்த யாேரா மர்ம ஆசாமிகள் அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விட்டு சென்றுள்ளனர். அந்த அட்டை பெட்டியில்இருந்து ரூ.10 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றனர்.
    • ரேசன் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தின் பல்வேறு இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்படும் சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் ஜெனிட்டா மேரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    தொடர்ந்து, நல்லத்துக்குடி ரேசன் கடையில் உள்ள அரிசி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு விரைந்தார்.

    பின்னர், கடையின் அருகில் 2 நபர்கள் தனித்தனி மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.

    விசாரணையில் அந்த அரிசி மூட்டைகள் நல்லத்துக்குடி ரேசன் கடையில் இருந்து வாங்கி சென்றது என்பது உறுதியானது.

    இதையடுத்து ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தனி தாசில்தார் ஜெனிட்டாமேரி பறிமுதல் செய்து அவற்றை நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் போல் நடித்து திருச்சி சமயபுரம் வியாபாரியை கடத்தி 30 பவுன் நகை பறிப்பு
    • விமான நிலையம் அருகே துணிகர சம்பவம்

    திருச்சி,

    திருச்சி சமயபுரம், ரகுபதி காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (வயது 47). வியாபாரியான இவர் திருச்சியில் இருந்து கோவை சென்றுள்ளார். அங்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கோவை வந்த நண்பர் ஒருவரிடம் இருந்து 6 தங்க சங்கிலிகள் என மொத்தம் 30 பவுன் நகைகள் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.அப்துல் ரசாக் அந்த பார்சலுடன் விமானநிலையம் அருகே இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீஸ் உடையில் வந்த 3 பேர் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காரில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.இதனால் அப்துல்ரசாக் அவர்களுடன் காரில் ஏறினார். கார் கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்றது. அப்போது போலீஸ் உடையில் இருந்த 3 பேரும் அவரிடம் இருந்த பார்சலை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பார்சலை கொடுக்க மறுத்துள்ளார்.அப்போது அவர்கள்கொலை செய்து விடுவதாக மிரட்டி, 30 பவுன் தங்க நகைகள் உள்ள பார்சலை பறித்துக்கொண்டனர். பின்னர் அப்துல் ரசாக்கை கொச்சி-சேலம் சாலையில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.இதனால் செய்வது அறியாமல் திகைத்து நின்ற அப்துல்ரசாக் நடந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விமான நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அப்துல் ரசாக் தங்க நகை பார்சலை கொண்டு வருவதை நோட்டமிட்டு, 3 பேர் கும்பல் இந்த கைவரிசை காட்டியுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திருமயத்தில் 1.4 டன் ரேஷன் அரிசி லோடு ஆட்டோவில் கடத்தப்பட்டது
    • அரிசி கடத்திய பெண் உள்பட இருவர் கைது

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திருமயம் தாலுகா கொசப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 28 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை கடத்திச் சென்ற வண்டியின் டிரைவர் திருமயம் வாரியப்பட்டியைச் சேர்ந்த தைனிஸ் (65) என்பவரையும் அந்த வாகனத்தில் இருந்த திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த மருதமுத்து மனைவி ரஞ்சிதம்(41) என்பவரையும் கைது செய்தனர்.

    • கறம்பக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • இருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாணை நடத்தி வருகினறனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்னி ஆற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். போலீசார் விசாரணையில் மணல் அள்ளி கொண்டு வந்த லோடு ஆட்டோவிற்கு அனுமதி இல்லை என்று தெரியவந்தது. லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சூரியகுமார் மோகன் ரமேஷ் குமார் மன்மத ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. பலமுறை போலீசார் நடவடிக்கை எடுத்தும் இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை .

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை சோதனை சாவடியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்யம் பத்ரா என்பவரது மகன் பிஸ்வாம்பர் பத்ரா(23) மற்றும் ஹோட்டாக்கர்மி என்பவரது மகன் ரஞ்சன் கர்மி(31) என தெரியவந்தது.

    2 பேரும் திருப்பூர் அருகே உள்ள இடுவம்பாளையம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மணல் கடத்திய சரக்கு வேன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
    • மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது

    புதுக்கோட்டை,

    கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் சிலர் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கறம்பக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி தட்டாரத்தெரு அருகே சென்ற சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கறம்பக்குடி கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின்பானு கொடுத்த புகாரின்பேரில் சூரியகுமார், ரமேஷ்குமார், மன்மத ராஜா, மோகன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணலுடன் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • பேஸ்ட் வடிவில் கடத்தப்பட்ட தங்கம்

    திருச்சி,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

    இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடைமையை சோதனை செய்ததில் பேஸ்ட் வடிவில் 145 கிராம் தங்கத்தையும், சங்கிலி வடிவில் 90 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.14.12 லட்சம் ஆகும்.

    • விராலிமலை அருகே காரில் கடத்தி வந்த 141 கிலோ கஞ்சா பறிமுதல்
    • 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை

    விராலிமலை,

    விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அனுமதியின்றி விற்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் விராலிமலை தாலுகா கொடும்பாளூர் அருகே உள்ள லஞ்சமேடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக எடுத்து சென்ற அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 141கிலோ 923கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி கொட்டவாடிப் பகுதியைச் சேர்ந்த கலியன் மகன் பெரியசாமி(வயது 41) மற்றும் விராலிமலை தாலுகா லஞ்சமேடு பகுதியைச் சேர்ந்த கருத்தக்கண்ணு மகன் பிரசன்ன வெங்கடேஷ்(28) ஆகிய இருவரையும் போலீசார் விராலிமலை போலீஸ் நிலையம் அழைத்து வந்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமிருந்தும் 3 செல்போன், புகையிலை பொருள்களுக்கான ரசீது மற்றும் ரொக்க பணம் ரூ.10ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×