search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling"

    • 2 பேர் கைது- கார் பறிமுதல்
    • காரில் 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் புதுச்சேரி மதுபாட்டில் களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்து தமிழகப் பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு-கிளியனூர் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டகுப்பம் கலால் துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மல்லி (வயது 38), மற்றும் ராம்மோகன் (வயது 45) என்பது தெரிய வந்தது. ஆந்திராவில் கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்பனை செய்ய புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய

    வந்தது. இதனையடுத்து இருவரையும் கலால் துறை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயிரம் மதுபாட்டில் களையும் காரையும் பறிமுதல் செய்தனர். 

    • திருச்சி விமான நிலையத்தில் ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
    • இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது ஒரு பயணி கொண்டு வந்த டிராவல் பேக் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தது.இதனை தொடர்ந்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் கம்பி வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது தெரிய வந்தது.இதேபோன்று மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.இந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட் கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தஞ்சை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.

    பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையங்கள், ரேஷன்கடைகள், ரெயில் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகம், டோல் கேட் மற்றும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வரு கின்றனர்.

    மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பெரம்பலூரில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
    • குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இலவச தொலைபேசி எண் 1800 599 5950 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பஸ்ஸ்டாப், ரேசன்கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் முக்கிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில்படும் படி இலவச எண் கொண்ட போஸ்டர், பேனர் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அகரம்சீகூர் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்
    • டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மங்களமேடு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி 4 -யூனிட் கிராவல் மண் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை மங்களமேடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும் டிப்பர் லாரி ஓட்டுனரான பிரம்மதேசம் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன்(49)என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக டிப்பர்லாரிகளை வழிமறித்து போலிஸார் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.14 கோடி மதிப்புள்ள என கடத்தல் தங்கம் பறிமுதல்
    • சுங்கத்துறை அதிகாரிகள், பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கத்துடன் சுங்கத்துறை டிரைவர் பிடிபட்டார்
    • கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக திடுக் தகவல் வெளியாகி உள்ளது

    திருச்சி,

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் ,ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட்டர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கி சேர்ந்த நடராஜன் (வயது43)பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்ற போது பிடிபட்டுள்ளார். இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும், இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடனடியாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடத்தலில் பங்கு பெற்ற மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொட்டியம் அருகே விபத்தில் சிக்கிய காருக்குள் 15 மூட்டை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • காரை ஒட்டி வந்த டிரைவர் தப்பியோட்டம்

    தொட்டியம்,

    தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம்புதூர் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ராமஜெயம் (18) என்பவர் தொட்டியம் வந்துவிட்டு காமலாபுரம் புதூருக்கு செல்வதற்காக திருச்சி சேலம் சாலையில் தொட்டியம் தாசில்தார் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ராமஜெயம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தொட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி உள்ளனர். தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பறிமுதல் செய்த போது காரின் உள்ளே தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 15- க்கும் மேற்பட்ட மூட்டைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
    • தஞ்சையை சேர்ந்த பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    கே.கே.நகர், 

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகளால் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பெண் பயணி ஒருவரை தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.இதில் அவர் தனது கைப்பையில் மறைத்து சங்கிலி வடிவில் ரூ.47 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அவர் தஞ்சையை சேர்ந்த ரேணுகா(வயது 25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம்.
    • புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, இலவச எண்ணில் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனைச்சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் புலனாய்வு அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனவர்கள் சக்திவேல், ஷஷாங் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    12 கிலோ சந்தன கட்டை

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரை ஏற்காடு வனச்சரகர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்தனர்.

    அப்போது அவர் ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த ரங்கராஜ் (59) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை விசாரித்ததில் ஏற்காடு குண்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் (42), மாரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி சிராய்புகளாய் தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் வெள்ளையன், வெங்கடேசன் ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இதில் கடந்த 16-ந் தேதி வெள்ளையனை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வெங்கடேசனுடன் சேர்ந்து சந்தனமரங்களை வெட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரங்கராஜ், வெள்ளையன் ஆகியோருக்கு சந்தன மரம் வெட்டி கடத்தியதற்காக மாவட்ட வன அலுவலர் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை வாழவந்தி பிரிவு வனவர் சஞ்சய் தலைமையிலான குழுவினர் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரும் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் வெங்கடேசன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டிற்கு சென்று ஒரு சந்தன மரத்தை 15 துண்டுகளாக வெட்டி சுமார் 7 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளாக்கி அதை ரங்கராஜூக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேசனுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்தார். இதுகுறித்து வனச்சரகர் முருகன் கூறுகையில் வனகுற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பொது விநியோக பொருள்களான கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்
    • புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    போரூர்:

    சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு :- பொது விநியோக பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும் இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×