அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி கடத்தல்

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.
அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி கடத்தல்
Published on

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com