search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slogan"

    • மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
    • சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீடாமங்கலம்:

    மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் வேலவன், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட பொருளாளர் இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், தினேஷ்குமார், ஸ்ரீதர், ஜோதிபாசு, அஜித்குமார் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நிலுவை தொகைகளை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.
    • 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    கும்பகோணம்:

    திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை அதற்கான வட்டியுடன் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க. காசிநாதன் தலைமை தாங்கினார்.

    முருகேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், துணை தலைவர்கள் கணேசன், கலைமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் கரும்பு விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    திருவாரூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு நிலையம் முகப்பு வாயிலில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேசும்போது கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது போன்ற பொய்யா வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. மேலும் பொருட்களின் விலைவாசி யையும் உயர்ந்து விட்டது.

    தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    கடைமடை வரை முறையாக நீர் பாயாததால் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது.

    பயிர்கள் கருகி வருகின்றன.

    குறுவை பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடியாவது நடை பெறுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் சிவா.ராஜமாணிக்கம், டாக்டர் கோபால் உள்பட மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர கிளைக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமான பெண்கள் பொதுமக்கள் ஆர்ப்பா ட்டத்தில் பங்கேற்றனர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கம்யூனிஸ்டு கட்சியின் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாரிமுத்து எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கேசவராஜ், மாவட்ட பொருளாளர் தவபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
    • புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

    சீர்காழி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பி. ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேட்டங்குடி சீனிவாசன் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க வேண்டும். தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப்பட்டன.

    இதில் பாரதிய கிசான் சங்க மாவட்ட செயலாளர் லிங்கேஸ்வரன், விவசாய சங்க தலைவர்கள் ரகு, ரவிச்சந்திரன், அசோகன், ராஜேந்திரன், வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

    • தி.மு.க. ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் வந்து விடுகிறது.
    • செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    திருவாரூர்:

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பா ட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

    திமுக ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் வந்து விடுகிறது. மின் கட்டனம் உயர்தியுள்ளனர், குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணி க்கம், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பி கே யு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரை கைது செய்ய வேண்டும்.
    • மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஐ.டி.யு.சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்.

    தஞ்சாவூர்:

    இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை கைது செய்ய வலியுறுத்தியும், வீராங்க னைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஏ.ஐ.டி.யு.சி தேசிய தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சார்பில் பழைய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர்கோ விந்தராஜன், வி.தொ.ச மூத்த தலைவர் கிருஷ்ணன், மின்வாரிய சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர்கோடீஸ்வரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர்கள் செல்வம், சிகப்பியம்மாள், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர் ஆலம்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி தமிழ் மாநில குழு சார்பில் இன்று காலை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. முடிவில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.

    இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் மணிமூர்த்தி, மின்வாரிய சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் தாமரைச் செல்வன், கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நா தன், உடலுழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா, உழைக்கும் பெண்கள் அமைப்பு செயலாளர் பரிமளா, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன், தஞ்சை நகர தொழிற்சங்க தலைவர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே ராகுல் காந்தியின் எம். பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேற்கு வட்டார தலைவர் ஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிஸ் கட்சி பொது செயலாளர் கணிவண்ணன், கிழக்கு வட்டாரத் தலைவர் பாலசுப்பிரமணியன், எஸ். சி.எஸ். டி. பிரிவின் மாவட்ட தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சித்ராசெல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய குழு துணைதலைவர் பானுசேகர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட செயலாளர்கள் தியாக கார்த்திகேயன், அசோக் கொள்ளிடம் நகர தலைவர் பிரகாசம், மாவட்ட பொருளாளர் காந்திமதி சிவராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
    • அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகியவை அடங்கிய சி.ஐ.டி.யூ. சார்பில் 15 நிமிடம் அனைத்து வாகங்களையும் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைச்செயலாளர் நபி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நிர்வாகிகள் பாஸ்கர், மனோகரன், அப்துல் ஹமீது, சுல்தான், நவாஸ்கான், புரோஸ்கான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கொரோனா காரணமாக பள்ளிகள் நடைபெறவில்லை இதனையடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும்.
    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப பள்ளிக்கு வந்தடைந்தது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகளில் பள்ளிகள் நடைபெறவில்லை இதனை யடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி என பல வகைகளில் நடைபெற்று வருகின்றது

    இதன் ஒரு பகுதியாக மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப அரசு ஆண்கள் பள்ளியில் முடிவடைந்தது

    இதில் சென்ற பள்ளி மாணவர்கள் சேர்ப்போம் சேர்ப்போம் பள்ளியில் சேர்ப்போம், கல்வி என்பது அடிப்படை உரிமை அதை யாரும் மறுத்தாள் அடைப்போம் சிறையில் அடைப்போம் என்று முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், ஆசிரியர்கள் மணிகண்டன், ஸ்ரீராம், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர் மேலும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியில் ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி உலகம் முழுவதும் உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியில், ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    ×