என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி
பேரணியில் ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர்.
நாகப்பட்டினம்:
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூன் 14ம் தேதி உலகம் முழுவதும் உலக ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியில், ரத்ததானம் வழங்குவதன் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, விழிப்புணர்வு முழக்கங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
Next Story






