search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Signal"

    • வாகனங்கள் குறுக்கு, மறுக்குமாக செல்லும்.
    • கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் பகுதியில் அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் உள்ளது.

    இந்த இடத்தின் வலது புறமும், இடது புறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. குறிப்பாக இடதுபுறத்தில் முருகா நகர், முத்தையா நகர், லோகநாத நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளது.

    வலது புறத்தில் செங்கப்ப கோனார் லே-அவுட், ஆறுமுக கவுண்டர் வீதி, மாச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. மேலே குறிப்பிட்ட பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதனால் 24 மணி நேரமும் இப்பகுதியில் வாகனங்கள் குறுக்கு, மறுக்குமாக செல்லும்.

    மேலும் இந்த அய்யர் ஆஸ்பத்திரி பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளதால் அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்லும். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பள்ளி, கல்லூரி வாகனங்களும் அதிகமாக இப்பகுதியில் ஆக்கிரமித்து வருவதை காண முடியும்.

    இங்கு சிக்னல் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் அவ்வப்போது விழுந்து எழும் நிலையும் காணப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே சிக்னல் அமைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் போக்குவரத்து போலீசார் தினம் அப்பகுதியில் நின்று கொண்டு வாகனங்களை சீர்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனம் கொண்டு செயல்பட்டால் சுந்தரபுரம் அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து சீராவதுடன் விபத்துகளும் தவிர்க்கப்படும் என தெரிவித்தனர்.

    • போக்குவரத்து போலீசாரின் இந்த ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

    வடவள்ளி

    கோவை தடாகம் சாலையில் லாலி ரோடு சிக்னல் உள்ளது. மருதமலை, தடாகம், காந்திபார்க், மேட்டுப ்பாளையம் சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இந்த பகுதி உள்ளது.

    இந்த சாலையில் கடக்கும் வாகனங்கள் சிக்னலில் மிக நீண்ட தூரம் காத்திருக்கின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

    இதனால் தடாகம்- மருதமலை, லாலி ேராடு பகுதிகளில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த பகுதிகளில் சிக்னல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சிறிய ரவுண்டானா போன்று அமைக்கப்பட்டது.

    இதன் மூலம் காந்தி பார்க் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மருதமலை செல்லவும், தடாகம் செல்லக்கூடிய வாகனங்கள் ெசல்லும் பாதையும் மாற்றி அமைக்கப்பட்டது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முன்பு போல் காத்திருக்காமல் உடனே செல்கின்றனர்.

    நேற்று மாலை முதல் தொடரப்பட்ட இந்த வெள்ளோட்டம் வெற்றி அடைந்திருப்பதாக போக்குவரத்து துறையும், நெடுஞ்சாலைத்துறை யினரும் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வெள்ளோட்ட பணியானது போக்குவரத்து துறை துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி ஆகியோர் ஏற்பாட்டில் நடை பெற்றது. இதே போன்று சிந்தாமணி பகுதியிலும் போக்குவரத்து வெள்ளோட்டம் பார்க்கப் பட்டு வருகிறது.

    • புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது.
    • 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சாவூர் மாநகராட்சியால் முழுமையாக மீட்கப்பட்ட 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதும் பல கோடி மதிப்பிலான யூனியன் கிளப் கட்டிடத்தில் நூலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வர உள்ளது. மாமன்னர் ராஜ ராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக அறிவித்த முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த மாமன்றம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

    இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி: தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திலேயே நிரம்பி வழிகிறது. இதனால் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஏறும் பயணிகள் இடம் கிடைக்க முடியாமல் அவதி அடைகின்றனர்.

    இதனால் பலர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று கும்பகோணம் பஸ்சில் ஏறும் சூழல் உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவது போல் பழைய பஸ் நிலையத்தில் ஆரம்ப மையமாகக் கொண்டு கும்பகோணத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும். இதேபோல் திருச்சிக்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க வேண்டும்.

    மண்டல குழு தலைவர் மேத்தா: சதய விழாவை அரசு

    விழாவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் காமராஜ் மார்க்கெட்டை திறந்து வைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    மணிகண்டன் : ரூ.500-க்கு கீழ் வருமானம் உள்ள அம்மா உணவகம் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏழைகளுக்கு பயன்படும் அம்மா உணவகத்தை மூடக்கூடாது ‌‌. தஞ்சை மாநகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை மாநகரில் உள்ள சாந்திவனம், ராஜகோரி, மாரிகுளம் ஆகிய மூன்று சுடுகாட்டில் உடல்களை எரிக்க தனியார் அமைப்புக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

    இதற்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் கூறும்போது, சுடுகாட்டில் உடல்களை இலவசமாக தகனம் செய்யப்படும் என்று நான் பதவி ஏற்றவுடன் திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினேன். கடந்த முறை உடல் தகனம் செய்ய பணம் வாங்கப்பட்டது. ஆனால் நான் மேயராக பதவி ஏற்றவுடன் முழுக்க முழுக்க இலவசமாக உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவித்தேன். இந்தத் திட்டத்தில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை.

    ஒருபோதும் முறைகேடு நடக்க விட மாட்டேன். ஒரு சுடுகாட்டுக்கு உடல்களை எரியூட்ட 27 டன் அளவுக்கு மரக்கட்டைகள், ரூ.12 ஆயிரம் வைக்கோல்கள் தேவைப்படுகிறது. மேலும் 2 உடலுக்கு 1 சிலிண்டர் எரியூட்ட தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் அறியாமல் கவுன்சிலர் எந்த விதத்தில் பேசுகிறார் என தெரியவில்லை. இருந்தாலும் முழுக்க முழுக்க உடல்கள் இலவசமாக மட்டும்தான் தகனம் செய்யப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்பட கூறுகிறேன். ஒருபோதும் முறேகேடு நடக்காது. மேலும் அம்மா உணவகம் மூடப்படாது என்றார்.

    தொடர்ந்து கவுன்சிலர் கோபால் பேசும் போது : 4 ராஜ வீதிகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க வேண்டும். தெற்கு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை சீரமைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    யு.என்.கேசவன்: 30-வது வார்டு சவுராஷ்ட்ரா கீழ ராஜ வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அதை தடுத்து அங்கு வேலி கட்ட வேண்டும். கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    ஜெய் சதீஷ்: எனது வார்டில் ரூ.49 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தமிழ்வாணன் : மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் கிடையாது. அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னலை வைத்து ஒழுங்குபடுத்த வேண்டும். அனைத்து: சாலைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

    காந்திமதி : தற்காலிக மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகே உள்ள ரேஷன் கடை பகுதிக்கு வருகிறது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதை தடுக்க வேண்டும். மேலும் மார்க்கெட் மற்றும் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    சரவணன் : சீனிவாசபுரம் அகழிபாலத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மாடுகள் அங்கேயே படுத்துக் கொள்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீலகண்டன் : பொது இடங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.

    ஸ்டெல்லா : கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிக்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர்.

    இதற்கு மேயர் சண்.ராமநாதன், கவுன்சிலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நிலக்கோட்டை நால் ரோட்டில் சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சிக்னலை நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தொடங்கி வைத்தார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோடு பகுதி நிலக்கோட்டை திண்டுக்கல் சாலை, மதுரை பெரியகுளம் சாலை, நிலக்கோட்டை அணைப்பட்டி சாலை ஆகிய 4 சாலைகளையும் இணைக்கும் பகுதியாகும்.

    இந்த நால் ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.

    சில நேரங்களில் நால் ரோட்டில் வாகனங்கள் இடித்துக்கொண்டு விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை போக்கும் விதமாக நிலக்கோட்டை பகுதி விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் நிலக்கோட்டை நால் ரோட்டில் சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று தற்போது தமிழக அரசு நான்கு புறங்களிலும் சிக்னல் வைத்து பணியை தொடங்கியுள்ளது. இப்பணியை நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது.
    • சிக்னல் உருவாக்கினால் போக்குவரத்து மிகவும் சீராகும்.

    குனியமுத்தூர்:

    கோவையின் பிரதான சாலைகளில் சிக்னல் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்லும் சூழலில், சிக்னல் ஒவ்வொரு வாகனத்தையும் கட்டுப்படுத்தி வரிசை ப்படுத்தி அனுப்பும்முக்கிய காரணியாக அமைகிறது.

    கோவை பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் குனியமுத்தூர் அடுத்த புட்டுவிக்கி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று பொள்ளாச்சி ரோட்டில் இருந்து உக்கடம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் கரும்புக்கடை வழியாக செல்லாமல் புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் சென்றடையும் வண்ணம் திருப்பி விடப்பட்டுள்ளது.

    உக்கடம் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் கடந்த பல ஆண்டுகளாக இத்தகைய புட்டுவிக்கி சாலை மிகவும் ஒரு பிரதான சாலையாக உருவாகியுள்ளது.

    ஏராளமான நான்கு சக்கர வாகனங்களும், பஸ்களும், கனரக வாகனங்களும் எந்த நேரமும் சாலையில் பயணிக்கும் வண்ணம் உள்ளது. இருசக்கர வாகனத்தில் டவுன் பகுதிக்கு செல்பவர்கள் கூட ஆத்துப்பாலம் கரும்புக்கடை வழியாகச் சென்று நெரிசலில் சிக்க வேண்டாம் என்று பெரும்பாலும் இச்சாலை வழியாக தான் பயணிக்கின்றனர்.

    இந்தநிலையில் குனியமுத்தூரில் இருந்து புட்டுவிக்கி சாலை திரும்பும் இடத்தில் சிக்னல் இல்லாத காரணத்தால் அவ்வப்போது வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது. பெரிய கனரக வாகனங்கள் இந்த இடத்தில் திரும்பும்போது எதிரே வரும் வாகனம் காரணமாக திரும்ப முடியாமல் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

    ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் முந்தி க்கொண்டு பாய்வ தால் சிறுசிறு விபத்து களும் ஏற்படுகிறது. என்ன தான் போக்குவரத்து காவலர்கள் நின்றாலும் சிக்னல் இல்லாத காரணத்தால் வாகனங்களுக்கு போக்குவரத்து தடை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சில சமயங்களில் புட்டுவிக்கி சாலைக்கு திரும்ப முடியாமல் நீண்ட வரிசையில் நான்கு சக்கர வாகனங்களும், லாரிகளும், பஸ்களும் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே இந்த இடத்தில் சிக்னல் உருவாக்கினால் போக்குவரத்து மிகவும் சீராகும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது.

    குனியமுத்தூர்:

    பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூரில் ஜங்ஷன் உள்ளது. இங்கு 4 புறமும் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வாகனங்களும் மற்றும் பாலக்காடு, மதுக்கரை, கோவைபுதூர் போன்ற பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களும் இப்பகுதியை கடந்து தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இப்படி போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது. இதனால் மீண்டும் வாகன தடுமாற்றமும், வாகன போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையின் இருபுறங்களிலும் செல்லும் குறுக்கு சாலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அதிகமாக இப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கும்.

    ஆனால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக ஓடுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பழுது இல்லாத சிக்னல் இப்பகுதியில் தேவை என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வீரபாண்டி பிரிவு வழியாக வாகனங்கள் வருகின்றன.
    • வீரபாண்டிபிரிவு சிக்னல் நேரம் முதலில் 60நொடிகளாக இருந்தது தற்பொழுது ‌‌45நொடிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    கோவை, பொள்ளாச்சி , உடுமலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு வீரபாண்டி பிரிவு வழியாக வருகின்றன.இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.அதில் வீரபாண்டிபிரிவு சிக்னல் நேரம் முதலில் 60நொடிகளாக இருந்தது.தற்பொழுது ‌‌ 45நொடிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நொச்சிப்பாளையம் பிரிவு வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.மேலும்‌ அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் இந்த வழியாகத்தான் செல்கிறது. பல நேரங்களில் இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிவிடுகின்றன.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த‌‌ சிக்னலின் நேரத்தை முதலில் இருந்த 60நொடிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×