search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை குனியமுத்தூர் பகுதியில் அடிக்கடி பழுதாகும் சிக்னல்
    X

    கோவை குனியமுத்தூர் பகுதியில் அடிக்கடி பழுதாகும் சிக்னல்

    • போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது.

    குனியமுத்தூர்:

    பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூரில் ஜங்ஷன் உள்ளது. இங்கு 4 புறமும் வாகனங்கள் அடிக்கடி சென்று கொண்டிருக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வாகனங்களும் மற்றும் பாலக்காடு, மதுக்கரை, கோவைபுதூர் போன்ற பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களும் இப்பகுதியை கடந்து தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இப்படி போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் டிராபிக் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சிக்னல் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அடிக்கடி அந்த சிக்னல் பழுதாகி வருகிறது. இதனால் மீண்டும் வாகன தடுமாற்றமும், வாகன போக்குவரத்து தடை ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையின் இருபுறங்களிலும் செல்லும் குறுக்கு சாலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அதிகமாக இப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கும்.

    ஆனால் சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக ஓடுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பழுது இல்லாத சிக்னல் இப்பகுதியில் தேவை என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×