search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shikhar Dhawan"

    • இந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் கடைசி வரை அவுட் ஆகவில்லை.
    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நடந்தது. முதல் போட்டிகளில் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் அணி, முதல் 2 போட்டிகளிலும் ஜெயித்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

    முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற அனைவருமே மோசமாக பேட்டிங் ஆடினர். பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்சை முடித்து கொடுத்தார்.

    கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தும் ஒரு ரன் கூடுதலாக அடிக்க முடியாததால் அவரால் சதமடிக்க முடியவில்லை. தவானை தவிரவேறு யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணி அடித்தது. 144 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த ஸ்கோரில் அதிகமான சதவிகித ரன்னை அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அடித்த ஸ்கோரில் (143), 69.23 சதவிகித ரன்னை தவான் ஒருவரேஅடித்தார்.

    இந்த பட்டியலில் பிரண்டன் மெக்கல்லம் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் அடித்த 222 ரன்களில் 158 ரன்கள்(71.17%) மெக்கல்லம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது.
    • பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர்.

    ஐபிஎல் 2023 சீசனில் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 197 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வெற்றிக்கு அருகில் சென்ற எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.

    முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் விளையாடியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    அவர் 7-வது ஓவரை வீசியபோது திடீரென பாதியிலேயே நின்று ஸ்டம்ப்பை திரும்பிப் பார்த்தார். அப்போது நான்-ஸ்டிரைக்கராக நின்றுகொண்டிருந்த ஷிகர் தவன் கோட்டுக் வெளியே இருந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட தவன், சட்டென்று கோட்டில் பேட்டை வைத்தார். இருவரும் பரஸ்பரம் புன்னகை செய்தனர்.

    முன்பு ஒருமுறை ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது.

    தற்போது பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றைய தினம் ஷிகர் தவனை அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தபோது பீல்டிங் செய்துகொண்டிருந்த பட்லர் முகத்தை கேமிராமேன் ஃபோகஸ் செய்தார். இதனால் ரசிகர்களும் ஆர்ப்பரிக்க தொடங்கினர்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • விராட் கோலி 216 இன்னிங்சில்தான் 50-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்தார்.
    • ஆனால் தவான் 207 இன்னிங்சிலேயே இதை எடுத்து சாதனை புரிந்தார்.

    கவுகாத்தி:

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 86 ரன் எடுத்தார். அவர் ஐ.பி.எல். போட்டியில் 50-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்தார். தவான் 2 சதமும், 48 அரை சதமும், விராட் கோலி 5 சதமும், 45 அரை சதமும் அடித்துள்ளனர்.

    விராட் கோலி 216 இன்னிங்சில்தான் 50-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்தார். ஆனால் தவான் 207 இன்னிங்சிலேயே இதை எடுத்து சாதனை புரிந்தார்.

    டேவிட் வார்னர் 60 தடவை (14 சதம், 56 அரை சதம்) 50 ரன்னுக்கு மேல் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தவான், கோலி உள்ளனர்.

    • பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி 90 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    கவுகாத்தி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடி 90 ரன் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்சே ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

    இதையடுத்து ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ரன்னிலும், ஷாருக் கான் 11 ரன்னிலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.
    • எனக்கு 14-15 வயது இருக்கும் போது மணாலிக்குச் சென்றேன்.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது தீவிரமாக தயாரகி வருகின்றனர். இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் 14-15 வயதில் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு 14-15 வயது இருக்கும் போது, மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் முதுகில் பச்சை குத்தியிருந்தேன். நான் அதை சிறிது காலம் மறைத்து வைத்திருந்தேன். சுமார் 3-4 மாதங்களுக்கு பின்னர் என் தந்தைக்கு நான் பச்சை குத்தியது தெரிந்துவிட்டது. அவர் என்னை அடித்தார்.

     

    டாட்டூவைக் குத்திய பிறகு நான் கொஞ்சம் பயந்தேன். எனக்கு டாட்டு குத்திய ஊசியை வைத்து எத்தனை பேருக்கு குத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை. எனவே நான் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டேன். அது இன்று வரை எதிர்மறையாக (நெகட்டிவ்) உள்ளது.

    நான் குத்திய முதல் டாட்டு ஸ்கார்பியோ (தேள்) என்னுடைய முதுகில் குத்தினேன். ஏனென்றால் அந்த நேரத்தில், அது என் எண்ணமாக இருந்தது. பிறகு நான் அதை ஒரு டிசைன் செய்தேன். என் கையிலும் சிவபெருமான் பச்சை குத்தினேன். அர்ஜூனன் பச்சையும் குத்தி உள்ளேன். ஏனென்றால் அவர் வில் எய்வதில் மிகச்சிறந்தவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவான் தனது கவனத்தை தொலைக்காட்சி பக்கமாக திருப்பியுள்ளார்.
    • ஷிகர் தவான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் அறிமுகமானார். தனது 100-வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 6793 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 143 ரன்கள் குவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார்.


    இதுவே அவரது கடைசி ஒரு நாள் போட்டி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    இந்த நிலையில் இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவான் தனது கவனத்தை தொலைக்காட்சி பக்கமாக திருப்பியுள்ளார். இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள தொலைக்காட்சி தொடர் குந்தலி பாக்யா (Kundali Bhagya). கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி முதல் ஜீ ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஷிகர் தவான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரில் தனது காட்சியை முடித்துக் கொடுத்த நடிகை அஞ்சும் ஃபஹீ , தொடர்ந்து இயக்குநர் அபிஷேக் கவுர் மற்றும் ஷிகர் தவானுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.


    இந்தப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், ஷிகர் தவானின் போலீஸ் கெட்டப் நன்றாக இருப்பதாகவும், இன்னும் சிலர் இப்படி நடிப்பதை விட்டு விட்டு மீண்டும் அணியில் இடம் பிடிப்பதில் கவனம் செல்த்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

    ஷிவர் தவான் போலீஸ் கெட்டப் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


    ஷிகர் தவான் இதற்கு முன்னதாக டபுள் எக்ஸ் எல் என்ற படத்தில் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனது வாழ்க்கை சீரழிக்கும் வகையில் மனைவி ஆஷா முகர்ஜி அவதூறாக பேசி மிரட்டி வருகிறார்.
    • அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதையும் பேசக்கூடாது என்று கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இவர் ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

    இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து பெற்றதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் தன்னை விட்டு பிரிந்த முகர்ஜி தனது வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் மிரட்டுவதாக கூறி டெல்லி ஐகோர்ட்டில் தவான் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரது தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எனது வாழ்க்கை சீரழிக்கும் வகையில் மனைவி ஆஷா முகர்ஜி அவதூறாக பேசி மிரட்டி வருகிறார். ஐ.பி.எல். டெல்லி கேபிட்டல்ஸ் அணி உரிமையாளரான தீரஜ் மல்கோத்ராவுக்கு அவதூறான செய்திகளையும் அனுப்பினார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு ஷிகர் தவான் குறித்து அவதூறாக பேச தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தவானுக்கு எதிராக அவதூறாக எதையும் சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது. அல்லது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதையும் பேசக்கூடாது என்று கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.

    • 2019 ஐபிஎல் கிரிக்கெட்டின் போது டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷிப் பண்ட் இடம்பெற்றிருந்தனர்.
    • பேட்டியின் போது எனக்கு ஏதேனும் அறிவுரை நீங்கள் கூற விரும்பினால் கூறுங்கள் என்று ஷிகர் தவானிடம் ரிஷப் பண்ட் கேட்கிறார்.

    டெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.

    நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து ஏற்பட்ட உடன் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரிஷப் பண்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 2019-ம் ஆண்டே எச்சரித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    2019 ஐபிஎல் கிரிக்கெட்டின் போது டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷிப் பண்ட் இடம்பெற்றிருந்தனர். அப்போது, ஒரு பேட்டியின் போது எனக்கு ஏதேனும் அறிவுரை நீங்கள் கூற விரும்பினால் கூறுங்கள் என்று ஷிகர் தவானிடம் ரிஷப் பண்ட் கேட்கிறார். அதற்கு, நீ வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும்' என்று ஷிகர் தவான் அறிவுரை வழங்கினார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
    • அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

    டாக்கா:

    வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் 2 அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். அதேவேளை மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 3 ரன்களில் வெளியேறினார்.

    இந்நிலையில், ஷிகர் தவானின் மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானின் நிலை என்ன?. இஷான் கிஷனை அணியில் சேர்க்காமல் இருப்பார்களா? என்பதை மிகவும் ஆச்சரியம். சுப்மன் கில்லும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். காயத்தில் இருந்து ரோகித் சர்மா மீண்டுவிட்டால் யாராவது அணியில் இடம்பெறாத சூழ்நிலை ஏற்படும்.

    அது ஷிகர் தவானாக தான் இருக்கக்கூடும். இது மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையின் சோகமான முடிவாக அமையும். ஆனால் புதிய தேர்வாளர்களுக்கு சில கேள்விகள் பதிலளிக்க வேண்டும். சுவாரசியம் என்னவென்றால், சுப்மன் கில் அணியில் இடம்பெற்றால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார்.

    ஏனென்றால் அவர் தேவை ஏற்படும் நேரத்தில் சிறப்பாக செயல்படுகிறார். இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர்.
    • வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.

    இந்தியா- நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்த போட்டி மழை காரணமாக ரத்தானது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. ஆடம் மில்னே, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    220 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் பின் ஆலன் 54 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து டிவோன் கான்வே 38 (51), கேன் வில்லியம்சன் 0 (3) இருவரும் விளையாடி வரும் நிலையில், மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இப்போட்டி முடிந்தப் பிறகு இந்திய அணிக் கேப்டன் ஷிகர் தவன் பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:-

    மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர். அத்தொடரில் சிறப்பாக செயல்படுவது மிக முக்கியம்.

    இந்திய காலநிலைதான் அங்கும் இருக்கும். இதனால், அங்கு சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார்.
    • சாஹர் இரு திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதில் திறமையானவர் என்பதால் அவரை அணிக்குள் எடுத்தோம்.

    ஹாமில்டன்:

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக அந்த மழை போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் வரும் 30ஆம் தேதி நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும்.

    இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேப்டன் தவானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நாங்கள் 6வது பந்துவீச்சாளர் வேண்டும் என விரும்பினோம். அதனால் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டார். ஹூடா அணிக்குள் வந்தார். மேலும், சாஹர் இரு திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதில் திறமையானவர் என்பதால் அவரை அணிக்குள் எடுத்தோம் என்றார்.

    • ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் தவான் ஒருநாள் அணி கேப்டனாக பணியாற்றியுள்ளார்
    • கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் தவானிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது

    இந்திய அணியின் தொடக்க இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படும்போது ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார்.

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜிம்பாப்வே தொடருக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

    ஜிம்பாப்வே தொடர் தொடங்கும் நிலையில் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதால் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே தொடரின்போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    நீங்கள் நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இந்த நிலையில் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேப்டன் பதவியும், அதன் சவால் பற்றியும் நான் சிறப்பாக உணர்கிறேன். இளம் வீரர்களை கொண்ட அணியுடன் நாம் சில சிறந்த தொடர்களை வென்றுள்ளோம்.

    ஜிம்பாப்வே தொடரின்போது, மெயின் அணியின் துணைக் கேப்டனான கே.எல். ராகுல் மீண்டும் விளையாட வரும்போது, அவர் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறார் என்ற உண்மையை நான் கவனத்தில் கொண்டேன். ஆசிய கோப்பையின்போது ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட கேட்டுக் கொள்ளப்படுவார். ஆகவே, ஜிம்பாப்வே தொடர் அவருக்கு சிறந்த பயிற்சியாக இருந்திருக்கும்..

    அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. எது நடந்தாலும், அது சிறப்பானவைக்காக நிகழும் என நினைப்பேன். தென்ஆப்பிரிக்கா தொடருக்கான கேப்டனை தேர்வு செய்யும்போது, எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். நான் ஒருபோதும் மோசமானதாக உணர்ந்தது இல்லை'' என்றார்.

    ×