search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இஷான் கிஷனின் இரட்டை சதத்தால் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகமான முடிவுக்கு வரலாம் - தினேஷ் கார்த்திக்
    X

    இஷான் கிஷனின் இரட்டை சதத்தால் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகமான முடிவுக்கு வரலாம் - தினேஷ் கார்த்திக்

    • இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
    • அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

    டாக்கா:

    வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் 2 அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். அதேவேளை மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 3 ரன்களில் வெளியேறினார்.

    இந்நிலையில், ஷிகர் தவானின் மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானின் நிலை என்ன?. இஷான் கிஷனை அணியில் சேர்க்காமல் இருப்பார்களா? என்பதை மிகவும் ஆச்சரியம். சுப்மன் கில்லும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். காயத்தில் இருந்து ரோகித் சர்மா மீண்டுவிட்டால் யாராவது அணியில் இடம்பெறாத சூழ்நிலை ஏற்படும்.

    அது ஷிகர் தவானாக தான் இருக்கக்கூடும். இது மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையின் சோகமான முடிவாக அமையும். ஆனால் புதிய தேர்வாளர்களுக்கு சில கேள்விகள் பதிலளிக்க வேண்டும். சுவாரசியம் என்னவென்றால், சுப்மன் கில் அணியில் இடம்பெற்றால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார்.

    ஏனென்றால் அவர் தேவை ஏற்படும் நேரத்தில் சிறப்பாக செயல்படுகிறார். இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இடது கை, வலது கை பேட்ஸ்மென்கள் என்ற கணக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அது ஷிகர் தவானுக்கு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×