search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvIND"

    • 101 ரன்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார்.
    • தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிராஜ் 5 ரன்னில் அவுட் ஆனார். சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கேஎல் ராகுலுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பிரசித் கிருஷ்ணா அவுட் ஆனால் கேஎல் ராகுல் சதத்தை தவறவிடுவார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா சந்தித்த 2-வது பந்து கீப்பரிடம் சென்றது. உடனே ராகுல் 1 ரன் எடுத்தார். அதே ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பி தனது அசத்தலான சதத்தை பதிவு செய்தார்.

    சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும்.
    • சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும்.

    தென் ஆப்பிரிக்கா -இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

    ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 200 ரன்களை கடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்த கேஎல் ராகுல் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 70* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.

    இந்நிலையில் கடினமான பிட்ச்சில் அடித்த இந்த 70 ரன்கள் சதத்திற்கு சமம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும். சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். ஆனால் சததத்திற்கு அவர் தகுதியானவர். ஒருவேளை அதை அடிக்காமல் போனாலும் என்னை பொறுத்த வரை இந்த ரன்கள் சதத்திற்கு சமமாகும்.

    முதல் பந்திலிருந்தே அவருடைய பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய தலை நேராக இருப்பதால் பந்தை எளிதாக விட முடிகிறது. தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி அவரால் பவுன்சரை அடிக்க முடிகிறது. தம்முடைய பேலன்ஸை பயன்படுத்தி அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடுவது அபாரமாக இருக்கிறது.

    அவருடைய திறமையை நாம் நீண்ட காலமாக அறிவோம். இருப்பினும் 8 - 9 மாதங்கள் காயத்தால் அவர் தடுமாற்றமாக செயல்பட்டார். தற்போது வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம். இத்தனை நாட்களாக நாம் பார்க்க ஆசைப்பட்ட ராகுலை தற்போது பார்ப்பது அருமையாக உள்ளது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும்.
    • தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்டில் 258, ஒருநாள் போட்டியில் 157, டி20-யில் 58 என ஆக மொத்தம் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்நிலையில் அதிகமான போட்டிகளில் விளையாடினால் ரபாடா பல சாதனைகளை படைப்பார் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து நிதினி கூறியதாவது:-

    ரபடா மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவரால் 400 விக்கெட்டை தாண்டி சாதனைகளை படைக்க முடியும். ஆனால் வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும். தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்க வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்தவர் ஸ்டெய்ன். அவர் 439 விக்கெட் எடுத்துள்ளார். பொல்லாக் 421 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், நிதினி 390 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார். ரபடா 285 விக்கெட்டுடன் 7-வது இடத்தில் உள்ளார். அவர் குறைவான டெஸ்ட்களில் விளையாடி உள்ளார்.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
    • இந்த போட்டியில் விராட்கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த போட்டியில் விராட்கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை கோலி முந்தினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 1252 ரன் (21 போட்டி) எடுத்து 3-வது இந்திய வீரராக இருந்தார். தற்போது விராட்கோலி 1274 ரன் எடுத்து அவரை முந்தி 3-வது இடத்தை பிடித்தார். அவர் 3 சதம், 4 அரைசதத்துடன் இந்த ரன்னை எடுத்தார்.

    இன்னும் 33 ரன்கள் எடுத்தால் சேவாக்கை பின்னு தள்ளி 2-வது இடத்தை கோலி பிடிப்பார். டெண்டுல்கர் 1741 ரன்னுடன் முதல் இடத்திலும், ஷேவாக் 1306 ரன்னுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்க வீரர்களில் காலிஸ் 1734 ரன்னும், ஹசிம் அம்லா 1528 ரன்னும், டிவில்லியர்ஸ் 1334 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் இந்திய அணி 208 ரன்கள் எடுத்துள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார்.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை (18496) பின்னுக்கு தள்ளி டேவிட் வார்னர் (18515) 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் 27368 ரன்கள் எடுத்து யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளார்.

    • ஜெய்ஸ்வால் தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 266 ரன்கள் குவித்தார்.
    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அவர் 25 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது இந்திய அணிக்கு வலு சேர்க்க உதவும்.

    கடந்த 2001-ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றது.

    தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி சேவாக்கின் முதல் டெஸ்ட். இந்த டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சேவாக், 173 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இதே போன்று சச்சின் டெண்டுல்கர் மிடில் ஆர்டரில் களமிறங்கி 184 பந்துகளில் 155 ரன்கள் குவித்தார். சச்சின் மற்றும் சேவாக் இருவரும் சதம் அடித்த போதிலும் இந்திய அணியால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.

    முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி டிரா செய்யப்படவே இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    தற்போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று ஜெய்ஸ்வால் தனது அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறானது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்காவில் மார்கோ ஜான்சென், லுங்கி நிகிடி, கஜிசோ ரபாடா, நாந்த்ரே பர்கர் ஆகியோர் பந்து வீசும் போது பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இது அவருக்கு கடினமானதாக இருக்கும். அதோடு, வித்தியாசமானதாக கூட இருக்கும்.

    இந்த அனுபவத்தின் மூலமாக அவர் சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன். ஒரு இளம் வீரர் வந்து சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்க வேண்டும்.

    இந்த பாக்ஷிங் டே டெஸ்ட் போட்டியானது ஜெய்ஸ்வாலுக்கு 3-வது போட்டி. ஜெய்ஸ்வால் தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 266 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அவர் 25 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது இந்திய அணிக்கு வலு சேர்க்க உதவும்.

    என்று கம்பீர் கூறியுள்ளார்.

    • இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான்.
    • 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகி உள்ளார். இந்தியாவிற்காக டெஸ்ட்டில் அறிமுகமாகும் 309-வது வீரர் இவர் ஆவார்.

    இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான். 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை. மேலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

    7 முறை தொடரை பறிகொடுத்திருக்கும் இந்திய அணி 2010-11-ம் ஆண்டில் மட்டும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், டோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களால் முடியாத அந்த 31 ஆண்டு கால ஏக்கத்தை ரோகித் சர்மா படை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்குர், அஸ்வின், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

    தென்ஆப்பிரிக்கா:

    டீன் எல்கர், மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெரைன், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜீ, ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட்கோலி 14 போட்டியில் விளையாடி 1236 ன்கள் எடுத்துள்ளார்.
    • இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் டோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    செஞ்சூரியன்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுசூரியன் நகரில் இன்று மதியம் தொடங்குகிறது. 2 ஆட்டம் கொண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட்கோலி, புதிய மைக்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட்கோலி 14 போட்டியில் விளையாடி 1236 ன்கள் எடுத்துள்ளார். இதில் முதலிடத்தில் டெண்டுல்கர் 1741 ரன்களுடன் (25 போட்டி) உள்ளார்.

    2-வது இடத்தில் சேவாக் (1306 ரன், 15 டெஸ்ட்) 3-வது இடத்தில் ராகுல் டிராவிட் (1252 ரன், 21 டெஸ்ட்) உள்ளார். இதில் டிராவிட், சேவாக்கை முந்த கோலிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2-வது இடத்தில் உள்ள சேவாக்கை முந்த கோலிக்கு 71 ரன்கள் தேவை. டிராவிட்டை முந்த 17 ரன்கள் தேவை. அவர் இந்த ரன்களை எடுத்து டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிகாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்து இந்திய வீரர்களில் 2-வது இடத்தை பிடிக்கிறார்.

    இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் டோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 144 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 78 சிக்சர்களை விளாசியுள்ளார். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 88 இன்னிங்ஸ்களில் 77 சிக்சர்களை அடித்துள்ளார்.

    தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மேலும் 2 சிக்சர்களை அடித்தால் டோனியை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடிப்பார். சேவாக் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்சர்களை விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

    இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இன்று செஞ்சூரியன் நகரில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.
    • இது 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஆடும் முதல் போட்டி இதுவாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் அவர்கள் ஆடவில்லை. உலகக் கோப்பை தோல்வியை மறந்து டெஸ்ட் களத்தில் சாதிக்கும் முனைப்புடன் தங்களை ஆயத்தப்படுத்தியுள்ளனர்.

    இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான். 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை. 7 முறை தொடரை பறிகொடுத்திருக்கும் இந்திய அணி 2010-11-ம் ஆண்டில் மட்டும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அசாருதீன், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், டோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களால் முடியாத அந்த 31 ஆண்டு கால ஏக்கத்தை ரோகித் சர்மா படை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் என்று தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இங்குள்ள உயிரோட்டமான ஆடுகளத்தில் தாக்குப்பிடித்து ஆடுவது அவ்வளவு சுலபமல்ல. பந்தை நன்கு தீர்க்கமாக கணித்து ஆட வேண்டியது அவசியமாகும்.

    செஞ்சூரியன் ஆடுகளத்தில் பந்து அதிவேகத்துடன் வெவ்வேறு விதமாக எகிறி பாயும். அதுவும் திறந்த வெளி மைதானம் என்பதால் குளிர்ச்சியான காற்றின் தாக்கமும் உண்டு. எல்லாமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் பேட்ஸ்மேன்கள் எப்படி தங்களை நிலை நிறுத்தி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். முதல் இன்னிங்சில் 300-க்கு மேல் ரன் எடுத்தாலே நம்பிக்கை வந்து விடும்.

    அனுபவம் வாய்ந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி பெரிதும் நம்பி இருக்கிறது. ஆப்-ஸ்டம்புக்கு மிகவும் வெளியே செல்லும் பந்துகளை தேவையில்லாமல் தொடுவதை தவிர்ப்பதில் கோலி எந்த அளவுக்கு பொறுமை காட்டுகிறார், அவசர கதியில் புல்ஷாட்டுகள் அடிப்பதை ரோகித் சர்மா எந்த அளவுக்கு குறைக்கிறார் என்பதில் தான் அவர்களின் பேட்டிங் ஆயுசும் அடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில் இவர்கள் கூடுதல் கவனமுடன் இருந்தாலே கணிசமாக ரன் சேர்த்து விடலாம். இந்திய மண்ணில் ரன் மழை பொழியும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு இந்த போட்டி அவர்களது உண்மையான திறமையை சோதித்து பார்க்கும் களமாக இருக்கும். விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனிக்க உள்ளார். எதிரணி ரபடா, இங்கிடி, யான்சென், கோட்ஜீ என்று 4 முனை சூறாவளி தாக்குதலை தொடுக்க காத்திருக்கிறது. அதற்கு ஏற்ப இந்திய பேட்ஸ்மேன்களும் வியூகம் தீட்டுகிறார்கள்.

    உலகக் கோப்பையில் 24 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் விலகியது சற்று பாதிப்பு தான். இருப்பினும் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா வலுசேர்க்கிறார்கள். இது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் என்பதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அனேகமாக அஸ்வின் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை சொந்த மண்ணில் எப்போதும் பலமிக்கவர்களாக விளங்குவார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். கேப்டன் பவுமா, மார்க்ரம், முன்னாள் கேப்டன் டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், டோனி டி ஜோர்ஜி ரன் வேட்டை நடத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் ரபடா, இங்கிடி, யான்சென் மிரட்டுவார்கள்.

    இங்கு முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதனால் எப்போது போட்டி தொடங்கினாலும் வேகப்பந்து வீச்சாளர்களின் கையே சற்று ஓங்கும் நிற்கும்.

    மொத்தத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முட்டுக்கட்டை போடுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இது 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

    தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன் அல்லது டேவிட் பெடிங்ஹாம், கைல் வெரைன், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ஜெரால்டு கோட்ஜீ, ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும்.
    • ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடிக்க முடியும்.

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா ஆகிய இரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் தலைமையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வென்று புதிய சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அதே போல செயல்படாமல் இத்தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் விளையாடுவதற்கு தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் உங்களுடைய மன நிலையை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வருவதே முதல் சவாலாக இருக்கும். இதுவரை விளையாடிய ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 10 ஓவர்களில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அணிக்காக எந்தளவுக்கு ரன்கள் குவிக்க முடியுமோ அந்தளவுக்கு எடுக்க வேண்டும் என முடிவெடுத்து அட்டாக் செய்து அதிரடியாக விளையாடினார்.

    இருப்பினும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் அவர் தம்முடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும். ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடித்து 180 அல்லது 190 ரன்களை விளாசி அவுட்டாகாமல் வெளியே வர முடியும். அந்த வகையில் அவர் விளையாடினால் இந்தியா எளிதாக ஒரு நாளில் 300 ரன்கள் அடித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று கூறினார்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
    • ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார்.

    இதில் அவர் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். அதற்கு அடுத்ததாக 3 முதல் 6 வரை சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை கம்பீர் தேர்வு செய்துள்ளார்.

    கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்தியாவின் பிளேயிங் லெவன்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா / ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    ×