என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சேவாக் சதம் அடிச்ச மாதிரி ஜெய்ஸ்வாலால் அடிக்க முடியாது- கவுதம் காம்பீர்
- ஜெய்ஸ்வால் தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 266 ரன்கள் குவித்தார்.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அவர் 25 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது இந்திய அணிக்கு வலு சேர்க்க உதவும்.
கடந்த 2001-ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி சேவாக்கின் முதல் டெஸ்ட். இந்த டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சேவாக், 173 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இதே போன்று சச்சின் டெண்டுல்கர் மிடில் ஆர்டரில் களமிறங்கி 184 பந்துகளில் 155 ரன்கள் குவித்தார். சச்சின் மற்றும் சேவாக் இருவரும் சதம் அடித்த போதிலும் இந்திய அணியால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி டிரா செய்யப்படவே இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
தற்போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று ஜெய்ஸ்வால் தனது அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறானது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவில் மார்கோ ஜான்சென், லுங்கி நிகிடி, கஜிசோ ரபாடா, நாந்த்ரே பர்கர் ஆகியோர் பந்து வீசும் போது பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இது அவருக்கு கடினமானதாக இருக்கும். அதோடு, வித்தியாசமானதாக கூட இருக்கும்.
இந்த அனுபவத்தின் மூலமாக அவர் சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன். ஒரு இளம் வீரர் வந்து சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்க வேண்டும்.
இந்த பாக்ஷிங் டே டெஸ்ட் போட்டியானது ஜெய்ஸ்வாலுக்கு 3-வது போட்டி. ஜெய்ஸ்வால் தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 266 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அவர் 25 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது இந்திய அணிக்கு வலு சேர்க்க உதவும்.
என்று கம்பீர் கூறியுள்ளார்.






