search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    காயத்திற்கு பிறகு வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம்- சுனில் கவாஸ்கர்
    X

    காயத்திற்கு பிறகு வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம்- சுனில் கவாஸ்கர்

    • கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும்.
    • சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும்.

    தென் ஆப்பிரிக்கா -இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

    ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 200 ரன்களை கடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்த கேஎல் ராகுல் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 70* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.

    இந்நிலையில் கடினமான பிட்ச்சில் அடித்த இந்த 70 ரன்கள் சதத்திற்கு சமம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும். சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். ஆனால் சததத்திற்கு அவர் தகுதியானவர். ஒருவேளை அதை அடிக்காமல் போனாலும் என்னை பொறுத்த வரை இந்த ரன்கள் சதத்திற்கு சமமாகும்.

    முதல் பந்திலிருந்தே அவருடைய பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய தலை நேராக இருப்பதால் பந்தை எளிதாக விட முடிகிறது. தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி அவரால் பவுன்சரை அடிக்க முடிகிறது. தம்முடைய பேலன்ஸை பயன்படுத்தி அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடுவது அபாரமாக இருக்கிறது.

    அவருடைய திறமையை நாம் நீண்ட காலமாக அறிவோம். இருப்பினும் 8 - 9 மாதங்கள் காயத்தால் அவர் தடுமாற்றமாக செயல்பட்டார். தற்போது வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம். இத்தனை நாட்களாக நாம் பார்க்க ஆசைப்பட்ட ராகுலை தற்போது பார்ப்பது அருமையாக உள்ளது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    Next Story
    ×