என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி- அடுத்த இலக்கு சேவாக்
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
- இந்த போட்டியில் விராட்கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த போட்டியில் விராட்கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை கோலி முந்தினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 1252 ரன் (21 போட்டி) எடுத்து 3-வது இந்திய வீரராக இருந்தார். தற்போது விராட்கோலி 1274 ரன் எடுத்து அவரை முந்தி 3-வது இடத்தை பிடித்தார். அவர் 3 சதம், 4 அரைசதத்துடன் இந்த ரன்னை எடுத்தார்.
இன்னும் 33 ரன்கள் எடுத்தால் சேவாக்கை பின்னு தள்ளி 2-வது இடத்தை கோலி பிடிப்பார். டெண்டுல்கர் 1741 ரன்னுடன் முதல் இடத்திலும், ஷேவாக் 1306 ரன்னுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்க வீரர்களில் காலிஸ் 1734 ரன்னும், ஹசிம் அம்லா 1528 ரன்னும், டிவில்லியர்ஸ் 1334 ரன்னும் எடுத்துள்ளனர்.






