search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem District News"

    • சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
    • ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது இவரது வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது.

    அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை டெலிகிராம் மூலம் அந்த வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார். அதை நம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய யு.பி.ஐ.-ஐ.டி.க்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 9 லட்சத்து 33 ஆயிரத்து 710 ரூபாயை அனுப்பினார்.

    பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபர் தொடர்பை துண்டித்து விட்டார். பல முறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை வைத்து பணம் யாரிடம் சென்றுள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    காக்காபாளையம்:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியை எதிர்த்து களம் கண்ட இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15-க்கு 11 என்ற புள்ளியில் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.

    அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சேலம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடிய இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடம் பிடித்தது.

    14 வயதுக்கு உட்பட்டோருக்கான பூப்பந்து போட்டியில் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மாதிரி பள்ளியை எதிர்த்து விளையாடி இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
    • சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

    சேலம்:

    சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலெக்டர் பேசியதாவது:-

    சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விழிப்புணர்வினை உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    சேலம் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான ஒப்புதல்கள், தடையின்மைச்சான்றுகள், புதுப்பித்தல் போன்றவற்றை எளிதாகப் பெற ஒரு ஒற்றைச் சாளர தீர்வுக்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பி டப்பட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    இதனைக் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில்முனைவோர் சேலம் மாவட்டத்தில் மென்மேலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் 4,334 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 124 தொழில் முனைவோர்கள் ரூ.1,638.91 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சிவகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், இந்திய தொழில் கூட்டமைப்பு (மாநில எம்.எஸ்.எம்.இ கொள்கை) சுதாகர், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க பொதுச் செயலாளர் செந்தில்முருகன், உற்பத்தி திறன் குழுத் தலைவர் இளங்கோவன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் நாகராஜன் மற்றும் தொழில் வணிக சங்கப் பிரதிநிதிகள், தொழில திபர்கள், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், ராசிபுரம், ஈரோடு, குன்னூர், திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில் பாஸ்போர்ட் வழங்கும் பணியை தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றன.

    கோவை மேற்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர். அதன்படி கடந்த 6 ஆண்டுகளில் சேவை மையத்தின் மூலம் இதுவரையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

    ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவுடன் நேர்காணலுக்கான தேதி விண்ணப்ப தாரருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வயது தொடர்பான சான்றுக்காக பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். இந்த நேர்காணல் முடிந்ததும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களின் முழு தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    பின்னர் பாஸ்போர்ட் தபால் மூலம் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற முடிவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • அரசுப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார அரசுப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகவதி மற்றும் கருத்தாளர் ஆசிரியர் ராஜீவ்காந்தி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். பள்ளியை மேம்படுத்துதல், இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தல், அரசு மற்றும் பொதுமக்களோடு இணைந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தல், கற்றல் கற்பித்தல் செயல்களை ஊக்குவித்தல் குறித்தும், பள்ளி மேலாண்மை குழுக்கான பிரத்தியேக மொபைல் செயலி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    • அன்பழகன் (47). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
    • நேற்றிரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.5,200 பணம் மற்றும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்றார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (47). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். நேற்றிரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.5,200 பணம் மற்றும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது கையும் களவுமாக அவரை மடக்கி பிடித்த அன்பழகன் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் அப்ரித் என்பது தெரியவந்தது. இவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மல்லூர் வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் அங்கு காய்கறி கடை நடத்தி வந்தார்.
    • இதனிடையே பனமரத்துப்பட்டி பிரிவில் அவரது வண்டி தனியாக நின்றது. அருகில் சாலையோரம் கார்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் அங்கு காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று பனமரத்துப்பட்டி சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். அதன்பின்னர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனிடையே பனமரத்துப்பட்டி பிரிவில் அவரது வண்டி தனியாக நின்றது. அருகில் சாலையோரம் கார்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து மல்லூர் போலீசார் கார்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் கார்த்தி சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிவித்து கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அதிக மது குடித்து உள்ளார். இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அனைவரும் பங்கு பெறும் அளவிலான வாள் சண்டை தேர்வு போட்டி வருகிற 30-ந் தேதி களரம்படியில் நடைபெறுகிறது.
    • இந்த போட்டியில் எப்பி, சேபர், பாயில் போன்ற 3 விதமாக போட்டிகள் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அனைவரும் பங்கு பெறும் அளவிலான வாள் சண்டை தேர்வு போட்டி வருகிற 30-ந் தேதி களரம்படியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்பி, சேபர், பாயில் போன்ற 3 விதமாக போட்டிகள் நடைபெறும்.

    இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் 6-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்த போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் 1-1-2007-க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.

    இதற்கு தகுந்த பள்ளி சான்றிதழ் அல்லது ஆதார் கார்டு, பிறந்த தேதி சான்றிதழ் இருக்க வேண்டும். மாவட்ட தேர்வில் பங்கு பெற இருக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு வர வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவலை வாள்சண்டை சங்கத் தலைவர் கோசலம், செயலாளர் வக்கீல் வஸ்தாத் கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு வேலூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு வேலூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை நாகராஜ் (46) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சை வீராணத்தை அடுத்த வலசையூர் பகுதியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனை பார்த்த டிரைவர் நாகராஜ் மற்றும் கண்டக்டர் அவரைப் பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அவர் தப்பி விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பஸ் மீது கல் வீசினார் என்று தெரியவில்லை. இது குறித்து நாகராஜ் வீராணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் மீது கல் வீசிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
    • பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களையும் www.tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறையின் இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.

    கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, குழந்தைகளின் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி வாங்குதல், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்றவற்றுக்கு உதவித்தொகையும், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய நிதியுதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறலாம். பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன்பெறலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
    • சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடை கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் முளைத்துள்ளன.

    மேலும் தினமும் வெளி யூர், வெளிமாநி லங்களில் இருந்து 2.50 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாக சேலம் மாநகராட்சி விளங்கி வருகிறது.

    சேலம் மாநகரின் முக்கிய புறவழிச்சாலைகளில் ஒன்றாக உள்ள சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை தினமும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர, 4 சக்கர, கன ரக வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. பெங்களூரு, கோவையில் இருந்து சென்னை, திருச்சி, மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து தான் சென்றாக வேண்டும்.

    இதுபோன்ற சூழலில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ள னர்.

    கடும் போக்குவரத்து நெரிசல்

    சேலம் நகர பகுதியில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, மல்லூர், ராசிபுரம், நாமக்கல், திருச்சி பகுதிகளுக்கும், ஈரோடு, கோவை மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து சென்று வருகின்றன. சேலம் மாநகர வாகனங்களும், வெளிமாவட்டம் சென்று வரும் வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. மேலும் சேலம் மாநகரில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலையில் அதிகளவு இயக்கப்படுகிறது.

    இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சீல நாயக்கன்பட்டி ரவுண்டாவை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதே நிலை அடிக்கடி நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் தாதகாப்பட்டி சாலையி லிருந்து நாமக்கல் பிரதான சாலை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் சேலம் மாநகரம் முழுவதும் அதிகப்படியான பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் மிகவும் தேவைப்படக்கூடிய இந்த ரவுண்டானா பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கான கூடுதலாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக ரவுண்டானா பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியாற்றி நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • 4-ஜி மற்றும் 5- ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும்.
    • மனித சங்கிலி போராட்டம் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    சேலம்:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக செயல்படும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4-ஜி மற்றும் 5- ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும். ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். எம்பிளாய் யூனியன் மாவட்ட தலைவர் ஹரிஹரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர் கோபால்,ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×