search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்போர்ட் வழங்கும் பணி"

    • சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், ராசிபுரம், ஈரோடு, குன்னூர், திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில் பாஸ்போர்ட் வழங்கும் பணியை தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றன.

    கோவை மேற்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சேலம் தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில் தினமும் 100 முதல் 150 பேருக்கு நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்கி வருகின்றனர். அதன்படி கடந்த 6 ஆண்டுகளில் சேவை மையத்தின் மூலம் இதுவரையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 530 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

    ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவுடன் நேர்காணலுக்கான தேதி விண்ணப்ப தாரருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வயது தொடர்பான சான்றுக்காக பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். இந்த நேர்காணல் முடிந்ததும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களின் முழு தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    பின்னர் பாஸ்போர்ட் தபால் மூலம் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இளைஞர்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற முடிவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×