search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Register"

    • வீட்டு வேலை செய்யும் தொழிாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.
    • அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கட்டுமானத்தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்பு நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் இதுவரை பதிவுசெய்யாத வீட்டுப்பணியாளர்கள் தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட இணைய–தளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க இயலாத வீட்டு பணியாளர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பள்ளி மாற்று சான்றிதழ் ஆகிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், கடம்பூர் ஆசனூர் அந்தியூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சத்தியமங்கலம் கடம்பூர் வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சில கிராமங்களில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு ள்ளன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று காலை 5 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    பள்ளிக்கு சென்ற மாணவர்கள், பணிக்கு சென்ற பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம்,நம்பியூர் , மொடக்குறிச்சி, வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், சென்னிமலை, கவுந்தப்பாடி போன்ற பகுதிகளிலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-48, பெருந்துறை – -6, கோபி-2, தாளவாடி-11, சத்தியமங்கலம்-6, பவானிசாகர் - 4.8, நம்பியூர்-48, சென்னிமலை-17, மொடக்குறிச்சி-28, கவுந்தப்பாடி-8, எலந்தக்குட்டை மேடு-19.6, அம்மாபேட்டை-1.2, கொடிவேரி-4.2, குண்டேரிப்பள்ளம்-22.2, வறட்டுப்பள்ளம்-4.2 மாவட்டத்தின் மொத்த மழையளவு 222.2 மி.மீ.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #SabarimalaTemple #WomenDevotees
    திருவனந்தபுரம்:

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி இங்கு தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.



    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 2 முறை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த இளம்பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அய்யப்பன் கோவில் வளாகத்தில் முதல் முறையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கோவிலுக்கு வரும் இளம்பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

    17-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும். 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். முன்னதாக ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி கேரளா மட்டும் அல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள். அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்காக அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் மண்டல, மகர விளக்கு பூஜையில் கலந்துகொள்ள ஏராளமான இளம்பெண்கள் வர வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே கேரள போலீஸ் துறை சார்பில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. அப்படி முன்பதிவு செய்யும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த முன்பதிவு தரிசனத்திற்கு பக்தர்கள் இடையே அமோக வரவேற்பு உள்ளது. எனவே முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள இதுவரை 3½ லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதிலும் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ள நிலையில் இதுவரை 539 இளம்பெண்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த பெண்கள் அனைவரும் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மண்டல, மகரவிளக்கு பூஜையின் போதும் இளம்பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    எனவே கேரள அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது. 
    சென்னையில் உள்ள தனியார் பெண்கள் விடுதிகள் அனைத்தையும் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram
    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் பணி காரணமாக விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் எனவும், பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram
    திருக்கோவிலூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூரை அடுத்துள்ள மணலூர் பேட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்கள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட எல்லையாக இருப்பதால் இங்கிருந்து மணல் கடத்தல் நடைபெற்று வந்தது.   

    இதனை தடுக்க மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் இரவு பகலாக வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜம்படை கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 29), தணிகைவேல் (37) ஆகியோர் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரனை கண்டித்து ஜம்படை பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் போஸ்டர் ஒட்டினார்கள். 

    இது குறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஜம்படை கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போஸ்டர் ஒட்டிய தட்சிணாமூர்த்தி மற்றும் தணிகைவேல் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வீட்டுமனையை பதிவு செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், காஞ்சீபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சங்கரன்(வயது 55) என்பவர் சார்பதிவாளராக உள்ளார்.

    காஞ்சீபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நித்யா என்ற பெண் நேற்று மதியம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். காஞ்சீபுரம் அருகே கூரம் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் வீடுகட்ட வீட்டுமனையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார்பதிவாளர் சங்கரனிடம் விண்ணப்பித்தார்.

    அதற்கு அவர், ரூ.1,000 லஞ்சமாக கொடுத்தால்தான் வீட்டுமனை பதிவு செய்யப்படும் என்று நித்யாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நித்யா, இதுபற்றி காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நித்யாவிடம் கொடுத்து அதை லஞ்சமாக சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

    பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், காஞ்சீபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று மறைந்து இருந்தனர்.

    நித்யா, சார்பதிவாளர் சங்கரனிடம் லஞ்சமாக ரூ.1,000 பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அவர், அருகில் இருந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற பார்த்திபன்(30) என்பவரிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, சார் பதிவாளர் சங்கரனையும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பார்த்திபனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருக்கிறதா? எனவும், அங்குள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். 
    ×