search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகபட்சமாக"

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் 2.30 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
    • சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் 2.30 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மதியம் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது. சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பின்னர் தொடர்ந்து மாலை வரை சாரல் மழை பெய்து.

    இதுபோல் கொடுமுடி மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 27.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதே போல் சென்னிமலை, பெருந்துறை, கொடிவேரி, குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கோபி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அவல்பூந்துறை, அரச்சலூர், 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியது.

    வெண்டிபாளையம், சாவடிப்பாளையம், கேட்புதூர் உள்ளிட்ட ரெயில்வே நுழைவுப் பாலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடுமுடி - 27.60, சென்னிமலை - 22, ஈரோடு - 14, பெருந்துறை - 12, மொடக்குறிச்சி - 10.20, கொடிவேரி - 9.20, குண்டேரி பள்ளம் - 9, கோபி - 6.20, பவானிசாகர் - 4.20, வரட்டு பள்ளம் - 3.60, கவுந்தப்பாடி - 2, பவானி -1.60

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், கடம்பூர் ஆசனூர் அந்தியூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சத்தியமங்கலம் கடம்பூர் வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சில கிராமங்களில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு ள்ளன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று காலை 5 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    பள்ளிக்கு சென்ற மாணவர்கள், பணிக்கு சென்ற பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம்,நம்பியூர் , மொடக்குறிச்சி, வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், சென்னிமலை, கவுந்தப்பாடி போன்ற பகுதிகளிலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-48, பெருந்துறை – -6, கோபி-2, தாளவாடி-11, சத்தியமங்கலம்-6, பவானிசாகர் - 4.8, நம்பியூர்-48, சென்னிமலை-17, மொடக்குறிச்சி-28, கவுந்தப்பாடி-8, எலந்தக்குட்டை மேடு-19.6, அம்மாபேட்டை-1.2, கொடிவேரி-4.2, குண்டேரிப்பள்ளம்-22.2, வறட்டுப்பள்ளம்-4.2 மாவட்டத்தின் மொத்த மழையளவு 222.2 மி.மீ.

    ×