search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain in Numbure"

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், கடம்பூர் ஆசனூர் அந்தியூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சத்தியமங்கலம் கடம்பூர் வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சில கிராமங்களில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு ள்ளன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று காலை 5 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    பள்ளிக்கு சென்ற மாணவர்கள், பணிக்கு சென்ற பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம்,நம்பியூர் , மொடக்குறிச்சி, வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், சென்னிமலை, கவுந்தப்பாடி போன்ற பகுதிகளிலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்ட த்தில் அதிகபட்சமாக நம்பியூர் ஈரோட்டில் 48 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-48, பெருந்துறை – -6, கோபி-2, தாளவாடி-11, சத்தியமங்கலம்-6, பவானிசாகர் - 4.8, நம்பியூர்-48, சென்னிமலை-17, மொடக்குறிச்சி-28, கவுந்தப்பாடி-8, எலந்தக்குட்டை மேடு-19.6, அம்மாபேட்டை-1.2, கொடிவேரி-4.2, குண்டேரிப்பள்ளம்-22.2, வறட்டுப்பள்ளம்-4.2 மாவட்டத்தின் மொத்த மழையளவு 222.2 மி.மீ.

    ×