search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raja mla"

    • ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.

    ஆடித்தபசு திருவிழா

    இங்கு அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் சங்கர நாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

    இந்த நிகழ்ச்சியை காண இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன் கோவி லுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 21-நதேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    சங்கரநாராயணராக காட்சி

    இந்த ஆடித்தபசு திருநாள் 12 நாட்கள் விமர்சையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான கோமதி அம்மனுக்கு சிவ பெருமான் சங்கரநாரா யணராக காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 31-தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை யினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    பாதுகாப்புத்துறை சான்றிதழ்

    கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோ வில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகரா ட்சி கமிஷனர் சபா நாயகம், கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேர்மன் உமா மகேஸ்வரி பேசிய தாவது:-

    ஆடித்தபசு அன்று குடிநீர் பந்தல் அமைக்கும் தொண்டு அமைப்புகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு பொருட்களை மூடி வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    லட்சக்கணக்கான பக்தர்கள்

    தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ஆடித்தபசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதில் முக்கியமாக தடையில்லா மின்சாரம், தடையில்லா குடிநீர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சமாகும். எனவே மின்வாரிய அதிகாரிகள், காவல்துறை யினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைவரும் நகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆடித்தபசு திருவிழாவை அனைத்து அரசு துறையினர் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும்.

    மேலும் தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் அன்னதானங்கள் நடக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உணவுகள் தரமான முறை யில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பொது மக்களுக்கும், வியாபாரி களுக்கு, பக்தர்களு க்கும் எந்தவித பாதிப்பும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்த ர்கள் ஆடித் தபசுக்கு வந்து சிறப்பாக தரிசனம் செய்து விட்டு செல்ல அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் அவசரக்கால ஊர்திகள் தயார் நிலையில் வைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் சுழலும் சி.சி.டி.வி. காமிரா க்கள் அமைத்து அதற்கான கட்டுப்பாட்டு அறையை அமைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகராட்சி துணை சேர்மன் கண்ணன், இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, நெடுஞ்சாலைதுறை திருமலைச்சாமி, பலவேசம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கணேச ராம கிருஷ்ணன், தங்க மாரிமுத்து, தீயணைப்பு துறை சார்பில் சரவணன் மற்றும் போக்கு வரத்து காவல்துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
    • திறன் மேம்பாடு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்ளின் மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் கல்வியாண்டில் மேல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்றார். இதில் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து தென்காசி துணை கலெக்டர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் நடராஜன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். திறன் மேம்பாடு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்ளின் மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்து பேசினார். சங்கரன்கோவில் ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் அமலி ஜென்சி வங்கி கடன் குறித்து விளக்க உரையாற்றினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி சம்பந்தமான தகவல்கள் அடங்கிய புதுமைப் பெண் புத்தகம் , நான் முதல்வன் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    • முகாமில், 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மைக்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கோ.மருதப்புரம் ஊராட்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் கால்நடை பராமரி ப்புத் துறை, பால்வளத்துறை மற்றும் ஆராய்ச்சிநிலையம் இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை கோட்ட உதவி இயக்குநர் கலையரசி மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஸ்வரி ஆகியோர் வரவேற்று பேசினர். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, எட்வின் மற்றும் ஆவின் சிறப்பு மேலாளர் சுந்தரம் வாழ்த்துரை வழங்கி னா ர்கள்.கோ.மருதப்புரம் ஊராட்சி மன்றத்தலைவர் வீரம்மாள் கடற்கரை முன்னி லை வகித்தார்.முகாமில் கால்நடை மருத்து வர்கள் ரமேஷ், நாகராஜன், சுருளிராஜ், அந்தோணி, செல்வக்குத்தா லிங்கம், சந்திரலேகா, வசந்தா, ராமசெல்வம், சர்மதி, கார்த்திக், கவிநிலவன், மாரியப்பன், ஆவின் கால்நடை மருத்துவர்கள் காயத்திரி, சுனில், கால்நடை ஆயவா ளர்கள் ரமேஷ், ஹரி கிருஷ்ணன், கோபால் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துமாடத்தி, செல்வமணி, முத்து மாரியப்பன், கருப்ப சாமி, அனிதா, நம்பியார், வெங்க டேஷ், சுடலை ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், சிகிச்சை, ஆண்மைநீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சினை பார்த்தல், ஸ்கேன் செய்தல், ரத்தத்தில் எடுத்தல் போன்ற மருத்துவ பணிகள் நடைபெற்றன. நெல்லை மண்டல நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜான்சுபாஷ், சங்கர ன்கோவில் உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, நடமாடும் கால்நடை மருத்துவபிரிவு மரு.சந்திரசேகரன் ஆகியோர் தொழில்நுட்ப அறிவுரை வழங்கினர். சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மை க்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள், கோ-4 ரக புல்த ரைகள் மற்றும் தாதுஉப்பு கலவை விவசாயி களுக்கு வழ ங்கப்பட்டது.சிறந்த நாட்டின நாய் வளர்ப்போ ர்க்கான பரிசுகள் வழங்க ப்பட்டது.

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள், பொது மக்கள் முகாமில் அமைக்கப்பட்ட பல்வேறு உப கரணங்கள், நவீன தொழில் நுட்பங்களை விளக்கும் அரங்குகளை பார்வை யிட்டு பயன்பெற்ற னர். விழா ஏற்பாடுகளை குருக்கள்பட்டி கால்நடை மருத்துவர் நாகராஜன் செய்திருந்தனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் நேற்று வெளியானது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் மற்றும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் நேற்று வெளியானது. சங்கரன்கோவில் கீதாலாயா திரையரங்கில் மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படம் வெளியானதை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் மற்றும் டிக்கெட்டுகள் வழங்கபட்டது.

    இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆர்.தலைவர், செயலாளர் சாமுவேல் முத்தையா, மாவட்ட இளைஞரணி சரவணன், நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், முன்னாள் பொது குழு உறுப்பினர் ராஜா என்ற ராசையா, கவுன்சிலர்கள் அலமேலு, செல்வராஜ், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், தங்கவேல், வீரா, வீரமணி, சிவா, கோமதிநாயகம், மாணவரணி கார்த்தி, சிவாஜி, ஜெயக்குமார், பிரகாஷ், வக்கீல் சதிஷ், பால் குட்டி, வீமராஜ், பசுபதி பாண்டியன், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெங்கநாதபுரம் துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • சங்கரன்கோவில் -சுரண்டை வழித்தடத்தில் 36 டீ என்ற புதிய பஸ் வழித்தடம் உருவாக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் குலசேகரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, ரெங்கநாதபுரம் கிராமத்தில் அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் -சுரண்டை வழித்தடத்தில் குலசேகரமங்கலம், ரெங்கநாதபுரம் துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    புதியவழித்தடத்தில் இயக்கம்

    அதனை தொடர்ந்து அந்த வழித்தடங்களில் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    தற்போது சங்கரன்கோவில் முதல் சுரண்டை வழித்தடத்தில் இந்த கிராமங்களை இணைத்து 36 டீ என்ற புதிய பஸ் வழித்தடம் உருவாக்கப்பட்டு அந்த வழித்தடத்தில் பஸ் சேவை தொடங்கப்பட்டது.

    அதனை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடி அசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது தங்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சங்கரன்கோ வில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியதுரை ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரிவினோ, வினுசக்கரவர்த்தி, ஊராட்சி தலைவர் வெள்ளத்துரை, தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருள்ராஜ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளையரசனேந்தலில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பில் இளையரசனேந்தலில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்வேல், கடற்கரை, கனகராஜ், மாயகிருஷ்ணன் முத்தையா, மனோகரன், பொன்சீனி, முத்துசாமி, கணேசன், முத்துலட்சுமி, செல்வி, மணிமாலா, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.,தென்காசி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித மக்கள் முன்னேற்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது இந்தியாவை வியக்கும் வகையில் ஆட்சி நடத்திவரும் நமது முதல்- அமைச்சரின் சீரிய ஆட்சியில் 2 ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.

    சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை 32 ஆண்டுகள் அ.தி.மு.க. வசம் இருந்தும், அதில் சுமார் 16 ஆண்டுகள் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தும் முன்னேற்றம் என்பது ஒரு துளி கூட நடைபெறவில்லை.

    கலைஞர் ஆட்சியில் தான் இந்த பகுதி மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் தான் இன்று வரை இந்த பகுதி மக்களுக்கு மிகப் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    மேலும் தற்பொழுதும் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாமிரபரணி திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்- அமைச்சரின் சீரிய ஆட்சியில் தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது என்பது உண்மை என்றார்.

    தொடர்ந்து நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைத்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர் பராசக்தி, நகர செயலாளர் புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியம் ,கிளை செயலாளர்கள் ராமச்சந்திரன், பாலமுருகன், ராமசாமி, ஞானசெல்லப்பா, ராமமூர்த்தி, வேலுச்சாமி, கருப்பசாமி, ஆண்ட்ரூஸ், தங்கராஜ், முருகன், ராஜேந்திரன், கந்தவேல், கருப்பசாமி, சீதாராமன், மாரிசாமி, மாயகிருஷ்ணன் மற்றும் சூரப்பா, சகாயராஜ், பரமசிவன், சிகாமணி, ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நக்க முத்தலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் செய்திருந்தார். முடிவில் அருண் நன்றி கூறினார்.

    • நகரில் உள்ள அனைத்து பொது, சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • நகரில் பெரும்பான்மையான வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன.

    சங்கரன்கோவில்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 3.6.2022 முதல் ஒவ்வொரு மாதமும் சங்கரன்கோவில் நகராட்சியில் 2 மற்றும் 4-வது வாரங்களில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. இது தொடங்கப்பட்டு தற்போது ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.

    நகராட்சி பகுதிகள்

    இத்திட்டத்தின்படி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், தன்னார்வ லர்கள், தொண்டு நிறுவனம், வியாபாரிகள், சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் போன்றவர்களை பெரும் அளவில் மக்கள் இயக்ககமாக பங்கேற்க செய்து நகரின் பொது இடங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அப்பகுதியில் குப்பைகள் போடாத வண்ணம் அப்பகுதியினை மரம், அழகு செடிகள் நட்டு பராமரித்தல், பொது இடங்களில் உள்ள சுவர்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டாத வண்ணம் அப்புறப்படுத்தி சுவர்களில் மக்களை கவரும் வண்ணம் விழிப்புணர்வு ஓவியம் வரைதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடு ளை அப்புறப்படுத்தி அதே பகுதியில் மீண்டும் கொட்டா வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சுவரொட்டிகள் அகற்றம்

    நகரில் உள்ள அனைத்து பொது, சமுதாய கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்கள். பொதுமக்கள், வணிகர்கள், தொண்டு நிறுவனம் ஆகியோரை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம், சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டனர்.

    மேலும் ஒவ்வொரு வார்டிலும் தன்னார்வ லர்களுக்கு குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இதனால் தற்போது நகரில் பெரும்பான்மையான வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. பொது இடங்களில் பெருமளவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது நகரப்பகுதிகள் அழகுற ஜொலிக்கின்றன. பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக தற்போது நகரில் குப்பைகள் தேங்காத வண்ணம் சுத்தமாக காணப்படுகிறது.

    இப்பணியில் தினந்தோறும் ஈடுபடும் நகராட்சி மற்றும் தனியார் தூய்மை சுகாதார பணியாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினர். இப்பணியில் நகராட்சியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் தொடர்ந்து பொதுமக்கள் இயக்கமாக இத்திட்டத்தினை மாற்றி நகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    பணிகளை நகராட்சி கமிஷனர் சபாநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் மாரிசாமி, வெங்கட்ராமன், மாரிமுத்து மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • திட்டமின்றி கட்டப்பட்ட வாறுகாலால் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • வாறுகாலை மறைத்து கட்டப்பட்டுள்ள ஸ்லாப்புகளை அகற்ற வேண்டுமென பொது மக்களிடம், ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி 3-வது வார்டு முல்லை நகர் பகுதியில் முறையான திட்டமின்றி கட்டப்பட்ட வாறுகால் சரியாக செல்லாமல் வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி கமிஷனர் சபாநாயகத்தை வரவழைத்து வாறுகால் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். மேலும் தற்போது தேங்கியுள்ள கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    தொடர்ந்து பொது மக்களிடம் வாறுகாலை மறைத்து கட்டப்பட்டுள்ள வாசலில் உள்ள அகலமான ஸ்லாப்புகளை அகற்ற வேண்டுமென தெரிவித்தார்.

    ஆய்வின் போது மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், வார்டு கவுன்சிலர் உமா சங்கர், வீராசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு சங்கரன்கோவில் மார்க்கங்களிலும் நிறுத்தம் வழங்கி தென்னக ரெயில்வே உத்தரவு பிறப்பித்தது.
    • இன்று முதன் முறையாக சங்கரன்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்த தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை - தாம்பரம், தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06003/06004) சங்கரன்கோவில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், ரெயில்வே ஆலோசனைகுழு உறுப்பி னரும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வுமான ராஜா மற்றும் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா ஆகியோர் சங்கரன்கோவிலில் நெல்லை - தாம்பரம் சிறப்பு ரெயில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு சங்கரன்கோவிலில் இது மார்க்கங்களிலும் நிறுத்தம் வழங்கி தென்னக ரெயில்வே உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்று முதன் முறையாக சங்கரன்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்த தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ெரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்ரமணியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்கரன்கோ வில் வந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சசி முருகன், தி.மு.க. நகர அவை தலைவர் முப்புடாதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், நகர பொருளாளர் வக்கீல்கள் கண்ணன், அன்புச்செல்வன், முத்துராமலிங்கம், சதீஷ், இளைஞர் அணி சரவணன், வார்டு செயலாளர்கள் ராமலிங்கம், வீரமணி, வீரா, சிவா ராமலிங்கம், வைரவேல், தங்கவேல் மற்றும் அஜய் மகேஷ்குமார் பசுபதி பாண்டியன் வீமராஜ், ரகுமான், கவுன்சிலர் புஷ்பம், மாணவரணி அப்பாஸ் அலி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 26 இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
    • வேறு குடிநீர் ஆதாரங்கள் இல்லாததால் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகு திக்குட்பட்ட சங்கரன்கோவில் ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம், குருவிகுளம் ஒன்றியம், மானூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 26 இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விநியோகம் சீராக செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். மேலும் சங்கரன்கோவில் நகரத்தை பொறுத்தவரை புதிய குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதனையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    மேலும் சங்கரன்கோவில் தொகுதி என்பது 100 சதவீத நிலத்தடி நீர் இல்லாத பகுதி என அரசாணை எண் 155-ல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேறு குடிநீர் ஆதாரங்கள் இல்லாததால் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

    இது குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உடனடியாக உடைப்புகள் சரி செய்யப்பட்டு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தி.முக. சார்பாக நகரம், கிராமத்தில் மாவட்ட இளைஞரணி முகேஷ் ஏற்பாட்டில் கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் விதமாக நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் சந்திரமோகன், தொழிற்சங்கம் சந்திரன், கிளை செயலாளர் ஆனந்த், முள்ளிக்குளம் கிளை செயலாளர் கணேசன், தங்கபாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞரணி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வசதி பெற்றிட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • பணியினை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் வடக்கு பனவடலிசத்திரம் கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வசதி பெற்றிட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியினை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வடக்குபனவடலி ஊராட்சி மன்ற தலைவர் முத்து லட்சுமி, அவைத்தலைவர் பரமையா, மாவட்ட பிரதி நிதி சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், கிளை செயலாளர்கள் முத்துராம லிங்கம், நவமணி, முருகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி காசிப்பாண்டியன், வக்கீல் சதீஷ்குமார் இளைஞர் அணி மனோஜ், ஜெயக்குமார், திலீப், மகேந்திரன், வர்த்தக அணி கார்த்திக், திலீப்குமார், விளையாட்டு அணி கவாஸ்கர், வண்ணம் பொட்டல் பால்ராஜ், ஒப்பந்த தாரர் தாமஸ் பாண்டியன், கலை இலக்கிய அணி வெள்ளத்துரை, தொண்டரணி பழனிவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×