வடக்கு பனவடலியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வசதி பெற்றிட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணியினை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ.  பேசிய போது எடுத்தபடம்.
நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ.  பேசிய போது எடுத்தபடம்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் வடக்கு பனவடலிசத்திரம் கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வசதி பெற்றிட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியினை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வடக்குபனவடலி ஊராட்சி மன்ற தலைவர் முத்து லட்சுமி, அவைத்தலைவர் பரமையா, மாவட்ட பிரதி நிதி சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், கிளை செயலாளர்கள் முத்துராம லிங்கம், நவமணி, முருகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி காசிப்பாண்டியன், வக்கீல் சதீஷ்குமார் இளைஞர் அணி மனோஜ், ஜெயக்குமார், திலீப், மகேந்திரன், வர்த்தக அணி கார்த்திக், திலீப்குமார், விளையாட்டு அணி கவாஸ்கர், வண்ணம் பொட்டல் பால்ராஜ், ஒப்பந்த தாரர் தாமஸ் பாண்டியன், கலை இலக்கிய அணி வெள்ளத்துரை, தொண்டரணி பழனிவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com