search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Struggle"

    வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம், சீத்தப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊருக்கு அருகே உள்ள குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பூதிப்புரம், சீத்தப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

    இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.

    இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமானநிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    அருப்புக்கோட்டை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #publicstruggle

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி, கட்ட கஞ்சம்பட்டி குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து லாரிகளில் விற்பனை செய்வதை தடுக்க கோரி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். புகார் மனுவை பெற்ற மேலாளர் பத்மினி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான தீர்வு காணப்படும் என்பதன் பேரில் கலைந்து சென்றனர்.

    அருப்புக்கோட்டை ஓன்றியம் ஆத்திபட்டி ஊராட்சி கட்ட கஞ்சம்பட்டி கிராமத்தில் ஜெயம்கார்டன், நாராயணபுரம், ரங்காநகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களுக்கு தேவையான குடிநீரை ஆழ்துளை கிணற்றின் மூலமே பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் சில நாட்களாக ராஜீவ்நகரை சேர்ந்த ஒருவர் எங்களது குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை குழாய் அமைத்து குடிநீரை பல லட்சம் லிட்டர் அளவிற்கு எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

    இதேபோன்ற நிலை நீடித்தால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வீட்டு உபயோகத்திற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் போய் விடும். இதனை தடுத்து எங்கள் பகுதியில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியில் பல்பை எரிய விட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். #lightbulb #publicstruggle

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் சிவன்கோவில் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த தெருவில் செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. பொதுமக்களின் கைகளுக்கு எட்டக்கூடிய அளவில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின்கம்பியை சரிசெய்ய கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் திருத்துறைப்பூண்டி மின்வாரியத்திடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தாழ்வாக செல்லும் கம்பியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆவேசமடைந்த சிவன் கோவில் தெருமக்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் நேற்று இரவு பல்புகளை தொங்கவிட்டு எரிய விட்டனர்.

    தெருக்களில் திடீரென பல்புகளை எரிய விட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    எங்களது தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரிசெய்ய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் சரி செய்யவில்லை. அதன் காரணமாகவே பல்புகளை தொங்கவிட்டு போராட்டம் நடத்தினோம். தெரிவித்துள்ளோம். இதன்பிறகும் சரிசெய்யவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #lightbulb #publicstruggle

    திருத்தங்கல் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பொது மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Train

    விருதுநகர்:

    விருதுநகர், சிவகாசி வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், திருத்தங்கல்-சங்கரலிங்காபுரம் பகுதியில் சென்றது. அங்கு பாலம் வேலை நடப்பதால், ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு தண்டவாளத்திற்கு வந்து ரெயிலை மறித்தனர். இதனை கண்டதும் ரெயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தினார். கோரம்பட்டி ஆள் இல்லாத ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருத்தங்கல் போலீசாரும், ரெயில்வே அதிகாரிகளும் விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை பற்றி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்க வேண்டும். ரெயிலை மறிக்க கூடாது என அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக சுமார் 30 நிமிடம் ரெயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. #Train

    இலையூர் மேலவெளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மேலவெளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சென்ற கல்வியாண்டில் 5 மாணவர்களை மட்டுமே வைத்து பள்ளி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பெற்றோர்கள் மற்றும் அரசு பள்ளி மீட்புக்குழு இயக்கத்தினர் முயற்சியில் கிராமத்தில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி முதல் கட்டமாக 13 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளனர்.



    மேலும் சென்ற ஆண்டு பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியை சரோஜா என்பவர் ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாததால், கோரியம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியை வளர்மதி இலையூர் மேலவெளி கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியையாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கோரியம்பட்டி பள்ளியில் சென்ற கல்வியாண்டில் இரண்டு 5-ம் வகுப்பு மாணவர்களை மட்டும் வைத்து 2 ஆசிரியர்களுடன் பணி புரிந்து வந்தார். தற்போது இந்த ஆண்டு அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால், இலையூர் மேலவெளி பள்ளிக்கு தலைமை ஆசிரியை பணிக்கு வளர்மதி விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

    இதனை அறிந்த இலையூர் மேலவெளி பொதுமக்கள், பெற்றோர்கள் எங்கள் ஊர் பள்ளிக்கு பெண் தலைமையாசிரியை வளர்மதி வேண்டாம் என கூறி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து வளர்மதி இலையூர் மேலவெளி பள்ளிக்கு செல்வதற்காக அதிகாரிகளை சந்திக்க சென்றதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளியின் கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டு பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், பொதுமக்களிடம் உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தரும் படி கூறினார். அதன்படி, பொதுமக்கள் மனு எழுதி கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட கிராம நிர்வாக அதிகாரி, இதுகுறித்து கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இருப்பினும் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், ஆண்டிமடம் உதவி தொடக்க கல்வி அதிகாரி மதியழகன், வருவாய் ஆய்வாளர் திலகவதி ஆகியோர் அரசு பள்ளி மீட்புக் குழு இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில், எங்களது ஊரில் உள்ள பள்ளிக்கு ஒரு ஆண் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். தற்பொழுது பணியாற்றி கொண்டிருக்கின்ற ஆசிரியை மட்டுமே போதும் எனவும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    ராமேசுவரம் அருகே லாரிகளில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காதில் பூ சுற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ளது பேய்க்கரும்பு, செம்மடம், அய்யாண் குண்டு கிராமங்கள். இங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து டேங்கர் லாரிகளில் வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    எனவே டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் நுகர்வோர் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறிப்பிட்ட அளவுதான் தண்ணீர் எடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் தமிழக மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமையில் கிராம மக்கள் காதில் பூ சுற்றி ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி தாசில்தார் சந்திரனிடம் மனு கொடுத்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 11-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteplant #protest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது எனவும், ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் கிராமத்தில் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தை தொடங்கினர்.

    அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பி ஆரப்பாட்டம் செய்து வ‌ந்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக அ.குமரெட்டியாபுரம் மக்களை சந்தித்து அவர்களோடு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் இறங்கியதால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது. இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது.

    இதையடுத்து போராட்டக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த‌னர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் போராட்டக்குழுவினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒரு தரப்பினர் கலந்துகொண்டார்கள். இதையடுத்து கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2 இடங்களில் போராட்டம் நடைபெறும் நிலை ஏற்பட்டு உள்ளதால் பரபரப்பான சூழல் உருவானது.

    இதையடுத்து தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் வெங்கடேஷ் நேற்று மாலை அறிவித்தார். இந்த தடை உத்தரவு நேற்றிரவு 10 மணி முதல் நாளை (23-ந்தேதி) காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தூத்துக்குடி நகரின் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.



    கலவரம் ஏற்பட்டால் தடுக்க கூடிய வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை அருகே போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 15 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைத்து வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    மேலும் முற்றுகை போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தக்கூடியதாக கருதப்படும் சுமார் 70 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதேபோன்று போராட்டத்தில் தீவிரம் காட்டி வருபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீளவிட்டான் பகுதியில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர்.

    அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போலீஸ் தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள். அதேவேளையில் மற்றொருதரப்பினர் தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டனர்.

    தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.வினர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அண்ணாநகரில் இருந்து ஊர்வலமாக சென்றனர். அ.ம.மு.க.வினர் மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமையிலும் ஊர்வலமாக புறப்பட்டார்கள்.

    இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது. #sterliteplant #protest #BanSterlite #TalkAboutSterlite
    ×