search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    அருப்புக்கோட்டை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    அருப்புக்கோட்டை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #publicstruggle

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி, கட்ட கஞ்சம்பட்டி குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து லாரிகளில் விற்பனை செய்வதை தடுக்க கோரி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். புகார் மனுவை பெற்ற மேலாளர் பத்மினி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான தீர்வு காணப்படும் என்பதன் பேரில் கலைந்து சென்றனர்.

    அருப்புக்கோட்டை ஓன்றியம் ஆத்திபட்டி ஊராட்சி கட்ட கஞ்சம்பட்டி கிராமத்தில் ஜெயம்கார்டன், நாராயணபுரம், ரங்காநகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களுக்கு தேவையான குடிநீரை ஆழ்துளை கிணற்றின் மூலமே பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் சில நாட்களாக ராஜீவ்நகரை சேர்ந்த ஒருவர் எங்களது குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை குழாய் அமைத்து குடிநீரை பல லட்சம் லிட்டர் அளவிற்கு எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

    இதேபோன்ற நிலை நீடித்தால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வீட்டு உபயோகத்திற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் போய் விடும். இதனை தடுத்து எங்கள் பகுதியில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    Next Story
    ×