search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police complaint"

    • இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள சி. தண்டேஸ் வரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள்ஆர்த்தி (வயது17). இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை. இவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்து ஆர்த்தியின் தாய்ரேவதி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
    • இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில் ஒரு சிட்பண்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் ஆசையை தூண்டி தீபாவளி மற்றும் நகை சிட்பண்ட் நடத்தி வந்தது.

    இதனை நம்பிய பொதுமக்கள் கட்டிய தொகைக்கு அதிகமாக வழங்கிய மளிகை பொருட்கள் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த முகவர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்து கட்டினர்.

    அந்த சிட்பண்ட் நிறுவனம் அறிவித்தபடி தீபாவளி பரிசு பொருட்கள், நகைகள் அளிக்க முடியாததால் அந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட, ஏமாந்த முகவர்களும் பணம் கட்டிய வாடிக்கையாளர்களும் போராட்டம் நடத்தினர். அந்த நிறுவனம் கடந்த 10-ந்தேதிக்குள் பணம் கொடுப்பதாக உறுதி அளித்தது.

    ஆனால் கூறியபடி பணம் கொடுக்கவில்லை. இதனை அறிந்த ஏமாந்த முகவர்களும், பணம் கட்டியவர்களும் 10-ம்தேதி, 11-ம் தேதி போராட்டம் செய்தனர். செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த நிறுவனம் மோசடி செய்து மதிப்பு ரூ.43 கோடியாகும். தொடர்ந்து தினமும் புகார் கொடுத்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இது போன்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டு தொடங்கும் பொழுதே அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
    • கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்து வந்துள்ளது.
    • சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கஸ்தூரி (வயது 30) இவர்களுக்குதிருமணம் ஆகி11ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்துவந்துள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் 8ம்தேதி இரவு குடித்துவிட்டுஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கஸ்தூரிசண்டை போட்டுவிட்டு படுத்து தூங்கிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார்.
    • நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமம் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). கோவில் பூசாரி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவி 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தொரவி ஏரி நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடல்களை மீட்டு பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் காணாமல் போன கண்ணன் மற்றும் அவரது மனைவி பிரேமா என தெரியவந்தது. விசாரணையில் ஏரியில் தாமரைப்பூ பறிக்க சென்ற பொழுது ஆழமான பகுதி தெரியாமல் இறங்கியதில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கண்ணனுக்கு பிரதிக்க்ஷா (8) என்ற மகள் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். சுமார் 2 மணி நேரம் கழித்து போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.

    இதனை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி பள்ளி அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா புகைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து டீ கடைக்கு சென்ற மாணவியின் தாய் மகளுக்கு எதற்காக கஞ்சா விற்பனை செய்தாய் என தட்டிக்கேட்டார்.

    அதற்கு அவர் உங்களுடைய மகள் தினமும் ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா அடித்துவிட்டு செல்வதாகவும், பணம் கொடுப்பதால் கஞ்சா கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இதற்கு சந்திரகிரி எம்.எல்.ஏ சிவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் இன்றி கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்சியை குறை கூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஜெயராமன் (வயது 22). என்ஜினியர். இவரும் 23 வயது செவிலியரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக செவிலியர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்று ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஜெயராமன் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, மகள் ஜெய ஸ்ரீ ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார்.
    • சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் செல்லும் சாலையில் காணை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 39). இவர் தனது வீட்டின் முன்பாக சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வியா பாரம் முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். அப்போது நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம நபர் கடையின் மேற்கூரையை பிரித்து கடைக்குள் புகுந்தார்.

    இதனை அடுத்து கடையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார். இன்று காலை வழக்கம் போல் புவனேஸ்வரி கடையை திறக்கும் போது கடையில் திருடு போயிருப்பது தெரி யவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி இது குறித்து காணை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. கார்த்திகேயன் தினந்தோறும் மது அருந்திவிட்டு மனைவி போதுமணியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த. கார்த்திகேயனுக்கும் அவரது மனைவி போதுமணிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், கீழ்சாத்தம்பூர் அருகே உள்ள கே.ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). லாரி டிரை வர். இவரது மனைவி போதுமணி(38). இவர்க ளுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. கார்த்திகேயன் தினந்தோறும் மது அருந்திவிட்டு மனைவி போதுமணியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த. கார்த்திகேயனுக்கும் அவரது மனைவி போதுமணிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திகேயன், போது மணியை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். அதை தடுக்க வந்த போதுமணியின் தந்தை செல்லப்பனையும் (70) தாக்கி யுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

    இருவரையும் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செல்லப்பன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மது போதையில் மனைவி மற்றும் மாமனாரை தாக்கிய கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • காளிச்சரன் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார்.
    • நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு கைலாசநாதர் நகரைச்சேர்ந்தவர் காளிச்சரன். இவர் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 16.8.22 அன்று, தனது நண்பர் கணேஷ் என்பவர், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என அவரது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை கடன் கேட்டுள்ளார். காளிச்சரனும் மோட்டார் சைக்கிளை கடன் கொடுத்துள்ளார்.

    மறுநாள் கணேசிடம் மோட்டார் சைக்கிளை கேட்டபோது, தனது தாயுடன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். கணேஷ் தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளுடன் சென்று இருப்பார் என காளிச்சரன் இருந்துவிட்டார். சில நாட்கள் கழித்து, கணேஷ்க்கு போன் போட்டு கேட்டபோது, தான் இன்னும் காரைக்கால் வரவில்லை என கூறியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் காரைக்கால் வந்த கணேஷ், காளிச்சரனை பார்த்து, 16.8.22 அன்று காரைக்கால் பிரகார வீதியில் உள்ள தனியார் கிளினிக் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தஞ்சாவூர் சென்றதாகவும், வேலை பலுவில் அதை மறந்துவிட்டதாகவும், இன்று வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை என கூறியுள்ளார். 

    தொடர்ந்து, நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்பதால், காரைக்கால் நகர காவல்நிலையத்தில் காளிச்சரன் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகார வீதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன், மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • சம்பவத்தன்று விவசாய கூலி வேலைக்காக சண்முகம் வீட்டிலிருந்து சென்றார்.
    • சண்முகம் மனைவி மஞ்சுளாவை உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் மஞ்சுளா கிடைக்கவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆம்பூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 27) இவர்கள் இருவருக்கும் 8 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு மகன் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று விவசாய கூலி வேலைக்காக சண்முகம் வீட்டிலிருந்து சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த மனைவி மஞ்சுளாவை காணவில்லை.

    உடனே சண்முகம் மனைவி மஞ்சுளாவை உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் மஞ்சுளா கிடைக்கவில்லை. இது குறித்து சண்முகம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மஞ்சுளா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமுதா என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டார்.
    • வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினன்குடி பகுதியை சேர்ந்த அமுதா (45)என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வீரமணி என்பவர் 55 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார். அதன் பேரில் ஆவினன்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    ×