search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police case"

    • மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • மதுக்கடை ஊழியர்களை தாக்கிய காயப்படுத்திய விநாயகம் என்ற சங்கர் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோவில் அருகே புதிதாக ரேஸ்டோபார் பப்பு நடனத்துடன் கூடிய பார் திறக்க புதுவை கலால்துறை அனுமதி வழங்கி இருந்தது.

    இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுபாரை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் வந்ததும் அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மதுக்கடை உடைத்து அங்கிருந்த பொருட்களை உருட்டு கட்டையால் அடித்து உடைத்து நொறுக்கினர்.

    இதனை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடுரோட்டில் அமர்ந்து நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனும் போராட்டத்தில் பங்கேற்றார்.

    இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனிடமும், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதிய மதுக்கடை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மதுக்கடை ஊழியர்களை தாக்கிய காயப்படுத்திய விநாயகம் என்ற சங்கர் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜலட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 57). விவசாயி. இவரது மனைவி சத்யவதி (50).

    இவர்களது மகள் சந்தியா (27). ரகுபதி கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தற்போது அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

    இந்நிலையில் இவர்கள் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சந்தியாவிற்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு முதலூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

    அரிகரசுதன் சென்னை போரூரில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கு வியாபாரம் சரியாக இல்லாமல் நஷ்டம் அடைந்ததால் அரிகரசுதனும், சந்தியாவும் ஊருக்கு வந்து விட்டனர். பின்னர் அரிகரசுதன் உடன்குடி அனல்மின் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜலட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர். மேலும் அரிகரசுதன், சந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை சந்தியா தனது தந்தை ரகுபதியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தந்தை, தாய் மற்றும் சந்தியா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அரிகரசுதன், சத்தியசீலன், ராஜலெட்சுமி, ஜீவஆனந்த் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார்.
    • இதுகுறித்து மாணவியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்–பேட்டை சித்தர் கோவில் மெயின் ரோடு அருகே உள்ள பகுதிைய சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து மாணவியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர்.
    • அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே புதுப்பா–ளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலாட்சி இவரது அக்கா குப்பம்மாள். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குப்ப–ம்மாளின் மகளான அனிதா (வயது 29) என்பவர் தனது சித்தி அஞ்சலாச்சியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர். இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அஞ்சலாட்சி அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அஞ்சலாட்சி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடு–த்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அனிதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற–னர்.

    • வேலைக்கு சென்ற தூய்மை பணியாளர் காளிமுத்து வீட்டுக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.
    • அவரது மனைவி கணபதி சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்- கழுகுமலை ரோடு, முனிசிபல் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற காளிமுத்து வீட்டுக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.

    காளிமுத்து வீட்டுக்கு வராததால் அவரது மனைவி கணபதி உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். அதன்பிறகும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான காளிமுத்துவை தேடி வருகின்றனர்.

    • ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார்
    • போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது68). மாற்று திறனாளி. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    இதனால் ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார். மேலும் ஒரு இடத்தை தனது பெயருக்கு வைத்துக் கொண்டார்.

    இந்நிலையில் அவரது மகன் நம்பிராஜன் (38) ஆறுமுகம் பெயரில் உள்ள இடத்தை அளக்க ஏற்பாடுகள் செய்தார்.

    இதற்கு ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன் அரிவாளை எடுத்து வந்து ஆறுமுகத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    அத்துடன் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.

    இதுபற்றி ஆறுமுகம் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கணக்கில் காட்டப்படாத ரூ.52,500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் துணை மேலாளர் மீது வழக்குபதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தனியார் ஓட்டல்களுக்கு மது வினியோகம் செய்வதற்கு அதிக பணம் வசூல் செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சால்வன்துரை, பெஞ்சமின், ரேமா மற்றும் போலீசார் செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் குடோன் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணிக்கு சென்றனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரிகளையும், ஊழியர்களையும், தங்களது இருக்கையில் அமருமாறு கூறினர். அவர்களது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது மேலாளர் சுந்தரவள்ளி, துணை மேலாளர் சம்பத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அலுவலகத்தில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.52,500 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதிகாரிகளால் சரியான பதில் கூறமுடியவில்லை.

    மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றினார்கள்.



    பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக டாஸ்மாக் துணை மேலாளர் சம்பத் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. #tamilnews
    உ.பி.யில் பாலம் இடிந்த விபத்தில் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #VaranasiFlyoverCollapse
    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் ஒன்று நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 30 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரிகள் 18 பேர் பலியானதாக தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், வாரணாசிக்கு நேற்று சென்றார். பால விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை ஆஸ்பத்திரியில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அப்போது அவர் இந்த விபத்தில் 15 பேர் பலியானதாக தெரிவித்தார்.

    இதற்கு இடையே பாலம் இடிந்து விழுந்ததில், அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ள நிலையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கி உள்ளது.  #VaranasiFlyoverCollapse 
    ×