களக்காடு அருகே தந்தைக்கு கொலை மிரட்டல்; மகனுக்கு வலைவீச்சு

ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார்போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
களக்காடு அருகே தந்தைக்கு கொலை மிரட்டல்; மகனுக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது68). மாற்று திறனாளி. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

இதனால் ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார். மேலும் ஒரு இடத்தை தனது பெயருக்கு வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அவரது மகன் நம்பிராஜன் (38) ஆறுமுகம் பெயரில் உள்ள இடத்தை அளக்க ஏற்பாடுகள் செய்தார்.

இதற்கு ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன் அரிவாளை எடுத்து வந்து ஆறுமுகத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

அத்துடன் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.

இதுபற்றி ஆறுமுகம் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com