search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatened kill"

    • கொடியரசிக்கும் அதே பகுதியை 2 பேருக்கும் முன்விரோதம் இருந்தது.
    • இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    நாகப்பட்டினம்;-

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவரது மனைவி கொடியரசி (வயது 28).

    இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (23), ரஞ்சித் (22) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தமும், ரஞ்சித்தும் சேர்ந்து கொடியரசி வீட்டின் அருகே சென்றுள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த கொடியரசியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கொடியரசி வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எனக்கு தமிழ் தெரியாததால் இங்குள்ளவர்களிடம் எனது நிலையை விளக்கி கூற முடியவில்லை.
    • திடீரென என்னை திருமணம் செய்ய மறுத்து அந்த வாலிபர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வண்ணார்பேட்டை பகுதியில் சாலையில் சுற்றி திரிந்து வந்தார்.

    தமிழ் தெரியாத அந்த இளம்பெண் இந்தி மற்றும் தெலுங்கில் பேசினார். அவரது கையில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.

    இதனை பார்த்த அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது பெயர் அகிலா, சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதாப்பூர் ஆகும். நானும் எங்கள் பகுதியில் ஒரு வாலிபரும் காதலித்து வந்தோம்.

    திடீரென என்னை திருமணம் செய்ய மறுத்து அந்த வாலிபர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் வருகிற 15-ந் தேதி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

    இதனை தடுக்க வலியுறுத்தி ஐதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் நான் புகார் செய்தேன். இதனை அறிந்து கொண்ட வாலிபரின் குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அச்சத்தில் இருந்த நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். இதற்காக ஐதராபாத்தில் இருந்து ஒரு ரெயிலில் ஏறி பயணம் செய்தேன். பின்னர் நெல்லை வந்து சேர்ந்தேன்.

    எனக்கு தமிழ் தெரியாததால் இங்குள்ளவர்களிடம் எனது நிலையை விளக்கி கூற முடியவில்லை. வருகிற 15-ந் தேதி திட்டமிட்டபடி என்னை காதலித்த வாலிபர் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது என்னிடம் சொந்த ஊர் செல்வதற்கான போதுமான பணம் கையிருப்பில் இல்லை.

    அவரை தடுத்து நிறுத்தவில்லை என்றால் எனது வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிடும். எனவே எனக்கு பண உதவி வழங்கி என்னை ஐதராபாத் செல்ல உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காதல் பிரச்சினை தொடர்பாக அந்த இளம்பெண் ஐதராபாத்தில் வைத்து தனது கைகளை கத்தியால் தானே வெட்டிக்கொண்டதும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார்
    • போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது68). மாற்று திறனாளி. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    இதனால் ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார். மேலும் ஒரு இடத்தை தனது பெயருக்கு வைத்துக் கொண்டார்.

    இந்நிலையில் அவரது மகன் நம்பிராஜன் (38) ஆறுமுகம் பெயரில் உள்ள இடத்தை அளக்க ஏற்பாடுகள் செய்தார்.

    இதற்கு ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன் அரிவாளை எடுத்து வந்து ஆறுமுகத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    அத்துடன் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.

    இதுபற்றி ஆறுமுகம் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    காதலியை 2-வது திருமணம் செய்து மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு கார்கில் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுமிதா (வயது30). இவர்களுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்து.

    திருமணத்தின் போது சுமிதாவுக்கு 35 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாலமுருகனுக்கு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக சுமிதாவின் குடும்பத்தினர் கொடுத்தனர்.

    திருமணம் முடிந்து சில நாட்களிலேயே பாலமுருகன் விருந்து என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து விட்டு சுமிதாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

    மேலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் ஊதாரிதனமாக செலவு செய்து வந்துள்ளார்.

    இதுபற்றி சுமிதா தனது மாமனார் அய்யாவு, மாமியர் ஆண்டாள் மற்றும் நாத்தனார்கள் வள்ளி, சரளா ஆகியோரிடம் முறையிட்ட போது அவர்கள் பாலமுருகனுக்கு ஆதரவாக பேசி வந்தனர். 

    மேலும் தீபாவளி சீர்வரிசையாக கார் வாங்கி வரவேண்டும் என்று அவர்கள் சுமிதாவை சொந்தரவு செய்து வந்தனர். அப்படி கார் வாங்கி வரவில்லை என்றால் பாலமுருகன் அவரது முன்னாள் காதலியான கூட்டேரிப்பட்டை சேர்ந்த தமிழ்செல்வி என்ற சந்தியாவை 2-வது திருமணம் செய்து கொள்வார் என்று சுமிதாவை மிரட்டி வந்தனர்.

    மேலும் சுமிதாவுக்கு தெரியாமல் பாலமுருகனுக்கு தமிழ்செல்வியை 2-வது திருமணம் செய்து வைத்தனர். இதுபற்றி  அறிந்த சுமிதா தனது கணவர்-மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்கள் மற்றும் பாலமுருகனின் 2-வது மனைவி  சந்தியாவிடம் போனில் தட்டிக்கேட்ட போது அவர்கள் சுமிதாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    அதோடு சுமிதாவுக்கு அவரது பெற்றோர் கொடுத்த சீர்வரிசை பொருட்கள் சிலவற்றையும் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதுபற்றி புதுவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சுமிதா புகார் கொடுத்த போது அவர்கள் புகாரை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து சுமிதா இதுபற்றி புதுவை கோர்ட்டில் முறையிட்டார். நீதிபதி சுமிதாவின் புகாரை ஏற்று அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார்கள் மற்றும் பாலமுருகனின் 2-வது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் புதுவை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×