இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

கொடியரசிக்கும் அதே பகுதியை 2 பேருக்கும் முன்விரோதம் இருந்தது. இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது
Published on

நாகப்பட்டினம்;-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்.

இவரது மனைவி கொடியரசி (வயது 28).

இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (23), ரஞ்சித் (22) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தமும், ரஞ்சித்தும் சேர்ந்து கொடியரசி வீட்டின் அருகே சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த கொடியரசியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கொடியரசி வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com