search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perumal"

    • குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

    அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

    மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    • வைணவத்தலங்களில் வழிபாடு முடிந்ததும் தீர்த்தம் பெற்று, துளசி பெற்று சடாரி ஆசியோடு திரும்ப வேண்டும்.
    • தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபான் அருளினாலே என்பர்.

    வைணவத்தலங்களில் வழிபாடு முடிந்ததும் தீர்த்தம் பெற்று, துளசி பெற்று சடாரி ஆசியோடு திரும்ப வேண்டும்.

    அப்போதுதான் திருக்கோவில் வழிபாடு நிறைவடைகிறது.

    பாதுகையாகிய சடாரியைச் சடகோபராகக் கொள்ளும் மரபும் உண்டு.

    சடகோபன் என்ற சடாரி மூலமேதான் திருமகள் கேழ்வனான பகவான் திருவடிகளில் நம் தலையைச் சமர்ப்பிப்பது சாத்யம் என்பர்.

    சடத்துக்கு அஞ்ஞானத்துக்கு பகை என்ற பொருளிலேயே சடாரி என ஆழ்வாரை வழங்குவர்.

    தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபான் அருளினாலே என்பர்.

    அதாவது இறைவனது பாதார விந்தம், நம்மிடமுள்ள காமம், கோபம் போன்ற தீய குணங்களுக்கு எதிராக நின்று நம்மை உய்விக்க வல்லது.

    • ஹரிசாம சங்கீர்த்தனம் செய்தல்
    • துளசி தளத்தை சூடிக்கொண்டு பகவான் நாமாவைச் சொல்லல்

    கலியுகத்தில் பெருமாள் அருளை எளிதில் பெறலாம்.

    அதற்கான வழிமுறைகளில் சில.....

    1.ஹரிசாம சங்கீர்த்தனம் செய்தல்

    2.ஏகாதசி தினத்தில் உபவாசமிருந்து நாராயணனை வழி படல்

    3.எப்பொழுதும் நாராயணனை மனதில் நிறுத்தி வழிபடல்

    4.பகவத் கீதையைப் படித்து பாராயணம் செய்தல்

    5.கோபி சந்தனத்தை நெற்றியில் தரித்துப் பகவத் சிந்தனையுடன் இருத்தல்

    6.முடிந்தவர்கள் தினமும் சாளக்ராம பூஜை செய்தல்

    7.துளசி தளத்தை சூடிக்கொண்டு பகவான் நாமாவைச் சொல்லல்

    8.கங்கா நதியில் நீராடி அந்த தீர்த்தத்தை அருந்தல்

    9.காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் மூன்று வேளையும் ஜபித்தல்

    • ஆந்திராவில் சில சக்தி தலங்களுக்கும் இருமுடி கட்டி செல்கிறார்கள்.
    • அப்படி வரும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இருமுடி என்றதும் நமக்கு சபரிமலை அய்யப்பன் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.

    கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் அந்த யாத்திரை மிக வித்தியாசமானது.

    ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலை செல்வது தமிழக ஆன்மிக அன்பர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    அதேபோன்று ஆந்திராவில் பல்வேறு ஆலயங்களில் இருமுடி கட்டி யாத்திரை செல்லும் வழக்கம் இருக்கிறது.

    அங்குள்ள காணிப்பாக்கம் வினாயகர் ஆலயத்துக்கு கூட பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள்.

    ஆந்திராவில் சில சக்தி தலங்களுக்கும் இருமுடி கட்டி செல்கிறார்கள்.

    அந்த வகையில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்துக்கு பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள்.

    அப்படி வரும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லூர், ஓங்கோல், காவாலி, துர்க்கை பட்டிணம் ஆகிய நகரங்களில் வாழும் மீனவர்கள் ஆண்டுதோறும் இந்த தலத்துக்கு இருமுடி கட்டி வருகிறார்கள்.

    அதற்கு முன்னதாக இந்த மீனவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் மாலை அணிந்து தீவிரமாக விரதம் இருப்பது உண்டு.

    அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து கடைப்பிடிக்கும் அத்தனை நெறிமுறைகளையும் இந்த பக்தர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.

    ஏப்ரல் மாதம் மச்ச ஜெயந்தி தினத்துக்கு முன்பு அவர்கள் தங்கள் ஊர்களில் இருந்து யாத்திரை புறப்படுவார்கள்.

    மிகச்சரியாக மச்ச ஜெயந்தி தினத்துக்கு ஒரு நாளைக்கு முன்பு நாகலாபுரம் வந்து சேர்வார்கள்.

    அவர்கள் தங்கள் இருமுடிகளில் ஹோமத்துக்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு வந்திருப்பார்கள்.

    மச்ச ஜெயந்தி தினத்தன்று அதிகாலையில் நாகலாபுரம் ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான ஹோமம் நடத்தப்படும்.

    அதில் இருமுடி கட்டி வரும் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    தங்கள் வீட்டில் இருந்து இரு முடிக்குள் கட்டி கொண்டு வந்த ஹோம பொருட்களை ஹோமத்தில் சமர்ப்பிப்பார்கள்.

    பிறகு ஆலயத்தில் வழிபாடு செய்து தங்களது இருமுடி யாத்திரையை நிறைவு செய்வார்கள்.

    இப்படி இருமுடி சுமந்து வந்து வழிபடுவதன் மூலம் தங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது நிறைய மீன்கள் கிடைக்க மீன் அவதாரம் எடுத்த வேதநாராயண சுவாமி அருள் புரிவதாக நம்புகிறார்கள்.

    அதுமட்டுமின்றி கடலில் மீன்பிடிக்க செல்லும் போது உரிய பாதுகாப்பு கிடைப்பதற்கும் வேதநாராயணர் துணை இருப்பதாக சொல்கிறார்கள்.

    ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்துக்கு இருமுடி கட்டி வரும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    தமிழகத்தில் இருந்தும் இந்த ஆலயத்துக்கு இரு முடி கட்டி செல்லும் பக்தர்கள் இருக்கிறார்கள்.

    பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமானோர் இருமுடி கட்டி மச்ச ஜெயந்தி தினத்தன்று இந்த ஆலயத்துக்கு சென்று வருகிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சித்தூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமே பக்தர்கள் இருமுடி கட்டி வந்தனர்.

    சமீப காலமாக இந்த வழிபாடு அதிகரித்தப்படி உள்ளது.

    • மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் தசாவதாரம் எடுத்திருப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்
    • இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் தசாவதாரம் எடுத்திருப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்.

    ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.

    அதை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற வைணவ தலங்கள் உள்ளன.

    அந்த வைணவ தலங்களில் மிகச் சிறப்பானவற்றை 108 திவ்ய தேசங்களாக நமது முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

    இந்த திவ்ய தேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு கொண்டவை.

    அந்த வகையில் தசாவதாரம் நிகழ்ந்த இடங்களாக கருதப்படும் புண்ணிய தலங்கள் உயர்ந்த இறை ஆற்றல் கொண்டவை.

    இதில் மகா விஷ்ணுவின் முதல் அவதாரம் நிகழ்ந்த இடம் நாகலாபுரம் ஆகும்.

    தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மிக அருகில் நாகலாபுரம் உள்ளது.

    இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    இந்த தலத்தில்தான் தசாவதாரத்தின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

    பெருமாள் மீன் வடிவமெடுத்து கடலுக்குள் சென்று வேதங்களை மீட்டு வந்ததன் பின்னணியில் இந்த அவதார கதை அமைந்துள்ளது.

    ஆனால் நாகலாபுரம் பகுதியில் கடல் எதுவும் கிடையாது.

    அங்கிருந்து பழவேற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    எனவே இந்த அவதாரம் நிகழ்ந்த போது நாகலாபுரம் பகுதி கடலாக இருந்திருக்கலாம் என்றும்,

    நாளடைவில் கடல் பின்வாங்கியதால் ஊர்கள் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    நாகலாபுரத்தில் அமைந்துள்ள வேதநாராயண சுவாமி ஆலயம் முதல் அவதாரம் நிகழ்ந்த தலம் மட்டுமின்றி மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

    ஆகம அடிப்படையில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஆலய அமைப்பு பக்தர்களுக்கு புதிய தகவல்களை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

    சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு மிக எளிதாக சென்று வரலாம்.

    இந்த ஆலயம் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    • பொதுவாக ஆலயங்களில் மூலவருக்கு இடது பக்கத்தில் நின்றுதான் அர்ச்சகர்கள் பூஜையை செய்வார்கள்.
    • சுவாமிக்கு இடது பக்கம், அதாவது வலது பக்கத்தில் நின்று அர்ச்சகர்கள் பூஜை செய்கிறார்கள்.

    பொதுவாக ஆலயங்களில் மூலவருக்கு இடது பக்கத்தில் நின்றுதான் அர்ச்சகர்கள் பூஜையை செய்வார்கள்.

    இடது பக்கத்தில் நின்று தீபாராதனை காட்டும்போதுதான் பக்தர்கள் வழிபடுவதற்கு மிக எளிதாக இருக்கும்.

    ஆனால் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தில் கருவறையில் இடது பக்கத்தில் நின்று அர்ச்சகர்கள் பூஜை செய்வதில்லை.

    சுவாமிக்கு இடது பக்கம், அதாவது வலது பக்கத்தில் நின்று அர்ச்சகர்கள் பூஜை செய்கிறார்கள்.

    இதன் பின்னணியில் ஒரு புராண கதை கூறப்படுகிறது.

    பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து அசுரனிடம் இருந்து வேதங்களை மீட்டு வந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    அப்படி அவர் அசுரனை வதம் செய்ய தனது சக்கரத்தை பிரயோகம் செய்தார்.

    அந்த சக்கரத்தை வீசும் நிலையிலேயே கருவறையில் வேதநாராயண சுவாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    வேதநாராயணசுவாமி சக்கர பிரயோக கோலத்தில் காட்சி அளிப்பதால் அதன் அருகில் அர்ச்சகர்கள் நிற்பதில்லை.

    இதன் காரணமாகவே சுவாமியின் இடது பக்கத்துக்கு சென்று பூஜைகளை செய்கிறார்கள்.

    • அந்த சிலை அருகிலேயே ஆழ்வார்கள் சிலையும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது.
    • மற்ற நாட்களில் அந்த சிலைகள் தனி அறையில் பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படுகின்றன.

    இந்த ஆலயத்தின் கருவறை முன் பகுதி மண்படத்தின் இடது பக்கத்தில் உற்சவர் சிலையை மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    அந்த சிலை அருகிலேயே ஆழ்வார்கள் சிலையும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது.

    நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரின் உற்சவ மேனிகள் அங்கு உள்ளன.

    கருடாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், தொண்டர்பொடியாழ்வார் ஆகியோரது சிலைகளும் அங்கு இருக்கின்றன.

    முக்கிய திருவிழா நாட்களில் மட்டும் இந்த சிலைகளை அந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து பயன்படுத்துகிறார்கள்.

    மற்ற நாட்களில் அந்த சிலைகள் தனி அறையில் பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படுகின்றன.

    • இந்த திசையில் அமையும் தாயார் சன்னதிக்கு சக்தி அதிகம் என்று ஆகம நூலில் வரையறுக்கப்பட்டுள்ளது.
    • திருமண வரம் தரும் தாயாராக இவர் கருதப்படுகிறார்.

    இந்த ஆலயத்தில் ஆகம விதிப்படி அனைத்து கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தாயார் சன்னதி நிருதி திசையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திசையில் அமையும் தாயார் சன்னதிக்கு சக்தி அதிகம் என்று ஆகம நூலில் வரையறுக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த தலத்தில் வேதவல்லி தாயாரிடம் என்ன வேண்டுகோள் விடுத்தாலும் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதை கருத்தில் கொண்டுதான் தாயாருக்கு வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    திருமண வரம் தரும் தாயாராக இவர் கருதப்படுகிறார்.

    • அந்த ஊருக்கு தனது தாயார் பெயரான நாகம்மாள் என்ற பெயரை சூட்டினார்.
    • அந்த பெயர் கால ஓட்டத்தில் மருவி நாகலாபுரம் என்று மாறிவிட்டது.

    நாகலாபுரம் ஆலயத்தை கிருஷ்ணதேவராயர் கட்டுவதற்கு முன்பு அந்த ஊரின் பெயர் அரிகண்டாபுரம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

    அந்த ஊரில் ஆட்சி செய்து வந்த அரிகண்ட பெருமாள் நாயக்கர் என்பவர் பெயரை கொண்டு அந்த ஊர் அழைக்கப்பட்டு வந்தது.

    கிருஷ்ணதேவராயர் நிறைய திருப்பணிகள் செய்து முடித்ததும் அந்த ஊருக்கு தனது தாயார் பெயரான நாகம்மாள் என்ற பெயரை சூட்டினார்.

    அந்த பெயர் கால ஓட்டத்தில் மருவி நாகலாபுரம் என்று மாறிவிட்டது.

    • இந்த ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்களை உள்ளடக்கியது. 5வது பிரகாரமாக அந்த ஊரின் தெரு அமைந்துள்ளது.
    • ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரது ஐம்பொன் திருமேனிகளையும் அங்கு காணலாம்.

    நாகலாபுரம் வேதநாராயணசுவாமி ஆலயம் மிக அழகான ஆலயமாகும். பக்தியோடு சிற்பங்களையும், பிரம்மாண்டமான பிரகாரங்களையும் ரசித்து பார்ப்பவர்களுக்கு இந்த ஆலயத்தில் மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது.

    15, 16ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    ஆனால் அதற்கு முன்பே இந்த பகுதியில் வேத நாராயணசுவாமி மிகச்சிறிய கருங்கல் கருவறையுடன் இருந்ததாக பழமையான நூல்களில் குறிப்புகள் உள்ளன.

    எனவே இதன் தோற்றத்தை கணக்கிட முடியாதபடி உள்ளது.

    கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் அரிகண்ட பெருமாள் நாயக்கர் என்பவர் ஏராளமான திருப்பணிகளை செய்து உள்ளார்.

    அதன் பிறகு பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மன்னர்கள், சிற்றரசர்கள் இந்த ஆலயத்தில் திருப்பணியை செய்து உள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆலயம் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒருமுழுமையான ஆலயமாக திகழ்கிறது.

    இந்த ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்களை உள்ளடக்கியது. 5வது பிரகாரமாக அந்த ஊரின் தெரு அமைந்துள்ளது.

    அங்கு சென்றால் நம்மை 5 நிலை ராஜகோபுரம் வரவேற்கிறது.

    அதன் வழியாக ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் அழகான நந்தவனத்தை காண முடியும்.

    அதன்பிறகு அடுத்தடுத்த பிரகாரங்களை பார்த்துக்கொண்டே ஆலயத்துக்குள் செல்லலாம்.

    கருவறையில் வேதநாராயணசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    வழக்கமாக பெருமாளின் பாதம் அவருக்குரிய பீடத்தில் அமைந்திருக்கும்.

    ஆனால் இந்த தலத்தில் வேதங்களை மீட்க பெருமாள் மீன் அவதாரம் எடுத்தவர் என்பதால் அதை பிரதிபலிக்கும் வகையில் வேதநாராயண சுவாமி கால் பகுதி மீன் போன்ற அமைப்பில் காணப்படுகிறது.

    அவருக்கு இரு புறமும் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

    கருவறை முன்புள்ள மண்டபத்தில் ஆழ்வார் சிலைகளும், உற்சவர் சிலைகளும் அழகாக அணிவகுத்து காணப்படுகின்றன.

    ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரது ஐம்பொன் திருமேனிகளையும் அங்கு காணலாம்.

    அதையடுத்த பிரகாரத்தில் மிக பிரமாண்டமான மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

    அந்த காலத்தில் அந்த மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கலாம்.

    தற்போது அந்த மண்டபங்கள் வெறுமனே உள்ளன.

    ஆனால் மிக சிறப்பாக பராமரிப்பதால் இந்த மண்டபங்கள் அழகாக காட்சி அளிக்கின்றன.

    இந்த மண்டப தூண்களில் கல்வெட்டுகளும், ஏராளமான சிற்பங்களும் காணப்படுகின்றன.

    சிற்பங்களை ஆய்வு செய்பவர்களுக்கு மிகப்பெரிய தகவல் தரும் சுரங்கமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    இந்த பிரகாரத்தில் தாயார் வேதவல்லி தனி சன்னதியில் உள்ளார்.

    பொதுவாக வைணவ தலங்களில் மூலவர் சன்னதிக்கு அருகிலேயே தாயார் சன்னதி அமைந்திருக்கும்.

    இந்த தலத்தில் சற்று தொலைவில் சற்று வித்தியாசமாக பெருமாளை எதிர்திசையில் பார்த்தபடி தாயார் சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.

    மீன் வடிவமெடுத்து கடலுக்குள் சென்ற பெருமாளை தாயார் தேடி வருவதாக ஐதீகம் என்பதால் இப்படி சன்னதி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

    அதற்கு அடுத்த பிரகாரம் முழுமையான நந்தவனமாக காட்சி அளிக்கிறது.

    இந்த ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் பக்தர்கள் நிதானமாக பார்வையிட்டால் பல புதிய உண்மைகளை தெரிந்து கொண்டு வர முடியும்.

    • மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன் மையான அவதாரமாகும்.
    • இங்கு அருளும் பெருமாளின் திருப் பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

    மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன் மையான அவதாரமாகும்.

    கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான்.

    அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.

    நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் தலத்தில் கொடுத்ததன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப் பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

    • இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும்.
    • இத்திருக்கோவில் சிற்பக் கலையிலும் சிறந்து விளங்குகிறது.

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது.

    திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

    'கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்' என்றொரு பழமொழி உண்டு.

    இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும்.

    இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

    இத்திருக்கோவில் சிற்பக் கலையிலும் சிறந்து விளங்குகிறது.

    இத்திருக்கோவிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன.

    இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன.

    இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.

    இத்திருக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது.

    இந்த இசைக்கருவி சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோவிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது

    முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், 'ஆதிநாதன்' என்று அழைக்கப்பட்டார்.

    பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

    ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் 'சேஷ ஷேத்ரம்' எனப்படுகிறது.

    நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார்.

    இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார்.

    ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர்.

    இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார்.

    பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார்.

    இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.

    ×