search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man killed"

    • பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் ஐ.ஆர்.டி.டி. மெயின் ரோடு பகுதியில் பச்சியப்பன் (67) பணி ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் பவானியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு நடராஜபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

    பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, சுகுணாபுரம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது (25) என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் பச்சியப்பன் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவானி போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அப்துல் ஹமீது பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இறந்த பச்சியப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே சாலையை கடக்க முயன்றவர் பலியானார்.
    • எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சோழவந்தான்அருகே உள்ள கண்ணுடையாள் புரத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் சிபிராஜ் (வயது 19). இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சமயநல்லூர் அருகே டபேதார் சந்தை முன்பு சாலையை கடக்க முயன்ற சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (59) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிபிராஜ் படுகாயம் அடைந்தார்.

    அப்போது கோவையில் இருந்து மதுரை நோக்கி மினிலாரி வந்தது. அதை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (40) ஓட்டி வந்தார். அந்த லாரி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் பாண்டி தலைமையில் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் மினிலாரி மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. அடுத்தடுத்து நடந்த விபத்து சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே ஜீப் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது72). இவரது மகன் மகேந்திரன்(28). இவரது மனைவி சங்கீதா(27). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவு கோவையிலிருந்து கிணத்துக்கிடவு நோக்கி காரில் சென்றனர். காரை மகேந்திரன் ஓட்டினார். மற்ற 2 பேர் பின்னால் அமர்ந்திருந்தனர்.

    இவர்களது கார் மதுக்கரை ரோட்டில் சென்ற போது மகேந்திரன் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த ஜீப் மீது மகேந்திரனின் கார் மோதியது. மோதிய வேகத்தில் காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து அபய குரல் எழுப்பினர். 

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவசாமி சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியதில் முத்தியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlightlessBird #Emus
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.

    அந்த வகையில் ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடைகொண்ட பறவை இனங்களில் ஒன்றாகும்.

    இந்த ரக பறவைகள் அதிகபட்சமாக 45 கிலோ எடையில் இருக்கும். பறக்கும் திறனற்ற இந்த பறவையின் கால் நகங்கள் மற்றும் அலகு மிகவும் கூர்மையானதாக இருக்கும்.



    இந்த நிலையில், சம்பவத்தன்று மார்வின் ஹஜோஸ், அந்த பறவைக்கு இரை வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த பறவை தனது நகங்களாலும், அலகாலும் பயங்கரமாக தாக்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார்.  #FlightlessBird #Emus
    படப்பை அருகே சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). இவரது மகன் ரவி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று நாவலூர் குடியிருப்பு பகுதியில் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ரவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மற்றும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஏற்பட்ட மோதலில் பாண்டியனும், அவரது நண்பர்களும் சேர்ந்து ரவியையும், அவரது தந்தை பழனியப்பனையும் சரமாரியாக தாக்கினர்.

    படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். ரவிக்கு மருத்துவ மனையில் தீவிர சிகித்தை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே பன்றி மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்ட போது மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த முதியவர் பலியானார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகலிங்கம் (வயது 80). இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்தது.

    இதற்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கனகலிங்கம் நேற்று காலை தனது பேரன் விஜயகுமாருடன் (21) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அரியூரில் இருந்து கீழூர் செல்லும் ரோட்டில் தனியார் மாத்திரை கம்பெனி அருகே வந்த போது ஒரு பன்றி ரோட்டின் குறுக்கே திடீரென பாய்ந்தது. இதன் மீது மோதாமல் இருக்க விஜயகுமார் திடீர் பிரேக் போட்டார்.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கனகலிங்கம் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கனகலிங்கம் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கனகலிங்கம் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி அருகே மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
    முசிறி:
     
    திருச்சி மாவட்டம்  முசிறியை அடுத் த திண்ணக்கோணத்தை சேர்ந்தவர் சிறுசோழன் (வயது 72), விவசாயி. இவர், திண்ணக்கோணம் பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டு குறித்து அவ்வப்போது போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முசிறி போலீஸ் நிலையத்தில் சிறுசோழன் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், தன்னை சிலர் தாக்கியதோடு, கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும், அந்த கும்பல்  மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் புகார்  குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுசோழன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். நேற்று அவர் வீட்டில் இருந்த போது திடீரென உயிரிழந்தார். 

    மணல் கடத்தல் கும்பல் தாக்கப்பட்டதில் காயமடைந்து சிறுசோழன் உயிரிழந் துள்ளார். எனவே இதற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று  அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சையில் நேற்று இரவு தூங்கிய முதியவர் மீது செங்கல்லை போட்டு படுகொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்பு சாவடி மிஷின் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). கூலித்தொழிலாளியான இவர் தினமும் அப்பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு எதிரே உள்ள கட்டிடத்தில் வந்து தூங்குவாராம்.

    இந்த நிலையில் நேற்று இரவும் சுப்பிரமணியன் அங்கு வந்து படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் சுப்பிரமணியன் படுத்து தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள செங்கற்களால் அவர் முகம் மற்றும் கால்களில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இதைத் தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக செல்பவர்கள் சுப்பிரமணியன் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? குடிபோதையில் நடந்த சம்பவமா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மானம்புச் சாவடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40). என்பவர் தான் சுப்பிரமணியனை செங்கலால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    ராஜ்குமார் மீது ஏற்கனவே மேற்கு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.  இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்கு ஒரு வழக்கிற்கு ஆஜராக வந்த அவர் இரவு தூங்குவதற்காக  வருவாய் ஆய்வாளர் விடுதி அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணியன் தூங்கி கொண்டிருந்தார். உடனே ராஜ்குமார் சுப்பிரமணியனை வேறு இடத்தில் சென்று படுக்குமாறு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த  ராஜ்குமார் அருகில் இருந்த செங்கலை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×