search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man dies"

    • இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

    சென்னிமலை

    சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரிவலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (68). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி யில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஈங்கூர் ரோட்டில் வந்த போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணப்பாறையை சேர்ந்த கிருஷ்ணனை பிடித்து விசாரித்து வரு கிறனர்.

    • திருக்கனூரில் முதியவர் தவறி விழுந்து இறந்து போனார். திருக்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவருக்கு பூரணி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
    • அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூரில் முதியவர் தவறி விழுந்து இறந்து போனார்.

    திருக்கனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 83). இவருக்கு பூரணி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். விஜயராகவன் அப்பகுதியில் உள்ள அங்கன் வாடிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் காலில் அணிந்திருந்த காலணி வழுக்கியதால் தடுமாறி கிழே விழுந்தார்.

    உடனே அவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது மருமகன் மற்றும் உறவினர்கள் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலநின்றி விஜயராகவன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது மருமகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்
    • வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது

    பெருந்துறை,

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் கீழேரி பாளையம் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி ( 72). இவர் தனது மனைவி கருணை அம்மாள், மகன் பூபதி, மகள் விஜயலட்சுமி ஆகியோருடன் குடியிருந்து வருகிறார்.

    இவரது மனைவி கருணைஅம்மாள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்து வருகிறார். கந்தசாமி கொளப்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்க ளாக இவருக்கு குடல் பிரச்சனை மற்றும் அல்சர் நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

    அவர் மனைவி மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படி கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டில் வந்து பார்த்தபோது அவரது கணவர் கந்தசாமி வீட்டில் இல்லை.

    உடனடியாக மகன் மற்றும் மகள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்து வந்ததாகவும் அதனை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த தாகவும் இவர்களுக்கு தகவல் கிடைத்தது.

    கருணை அம்மாளும் அவரது மகனும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசோதா பேகம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

    • கேபிகரடு பகுதியில், சில தினங்களுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, கேபிகரடு பகுதியில், சில தினங்க ளுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரி தாபமாக உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவ ரங்கள் ஏதும் தெரியவி ல்லை. இது குறித்து அன்ன தானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலு மீது அந்த வழியாக வந்த கார் ேமாதியது.
    • சிகிச்சை பலனளிக்காமல் வேலு பரிதாபமாக இறந்தார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் வேலு (வயது 76). சம்பவத்தன்று இவர் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் முதியவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதியவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வேலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரெயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் இறந்தார்.
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கோவை,

    கோவை ரெயில் நிலையத்தில் எப்போதும் போன்று பரபரப்பாக காணப்பட்டது.

    அப்போது 5-வது பிளாட்பாரத்தில் 60 வயது முதியவர் ஒருவர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவை பீளமேடு அருகே உள்ள நாரயணசாமிலே அவுட் பகுதியில் சம்பவத்தன்று இரவு தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த ஆணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் காவி வேஷ்டி அணிந்து இருந்தார்.

    மேலும் இடது கையில் எம்.என். என்று ஆங்கில எழுத்தில் பச்சை குத்தியிருந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எந்த ஊரை சேர்ந்தவர், யார் அவர்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் மோதி முதியவர் பலியானார்.
    • சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் இவர் ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த மணிகொல்லை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 80). இவர் கடந்த 5-ந் தேதியன்று இரவு புதுச்சத்திரத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடிவேல் மகன் தனசேகர் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிவு இருந்தது. இதனை அறியாத அவர் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இதில் வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது.

    கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றி தீக்காயமடைந்த பாபநாசத்தை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நங்கவள்ளி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நங்கவள்ளி:

    ஜலகண்டாபுரம் அருகே உள்ள பனிக்கனூர் காவேரி கவுண்டன்வளைவை சேர்ந்தவர் மாணிக்கம் (64). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கபட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை. இதனால் மணம் உடைந்த மாணிக்கம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். 

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×