கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாப சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாப சாவு
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிவு இருந்தது. இதனை அறியாத அவர் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இதில் வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது.

கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றி தீக்காயமடைந்த பாபநாசத்தை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com