search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after falling"

    • புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாலுகா ஈங்கூர் அடுத்த நல்லகவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (59). இவரது மனைவி பூங்கொடி. தமிழ்நாடு மின்சார வாரிய த்தில் உதவி மின் பொறி யாளர் அலுவ லகத்தில் போர்மேனாக பெரியசாமி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பெரியசாமி வீட்டின் முன்புறமுள்ள புளிய மரத்தில் ஏறி வீட்டிற்கு வரும் மின்சார லைனை ஒதுக்கி கொண்டி ருந்தார்.

    அப்போது அவரது மனைவி பூங்கொடி மற்றும் கொழு ந்தனார் சுப்பிரமணியம் அதனை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத வகையில் திடீரென 15 அடி உயரம் உள்ள புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார். இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் சுப்பிரமணி இருவரும் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பெரிய சாமியை சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோபி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் அந்த மில்லில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன் (74). இவரது மனைவி ஆகி சர்ஜாத். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் இளைய மகன் சித்திக் அலி (35). இவர் அதே பகுதியில் இருசக்கர மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு வருடமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அனுப்பர்பாளையம் பரிசல் துறையில் உள்ள ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்திக் அலியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சித்திக் அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்திக் அலி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கெட்டி சமுத்திரம் ஏரி கரை பெரு மாள் கோவில் பகுதியில் இருந்து சங்கரா பாளையம் சுமை தாங்கி கல் பகுதி வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதை சரி செய்யும் பணி தொடங்கியது. இதையடுத்து குண்டும் குழியுமான ரோடு பறிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சாலைகளில் ஜல்லி மற்றும் கற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. கடந்த 3 நாட்களாக பறித்து போடப்பட்டு பணிகள் செய்யாமல் இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அந்த கற்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (25) ஐ.டி கம்பெனியில் பணி புரியும் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சங்கரா பாளையத்தில் இருந்து அந்தியூருக்கு வந்து கொண்டி ருந்தார்.

    அப்போது சாலையில் ஆங்காங்கே பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூரில உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. ஆனால் பல இடங்களில் கற்கள் சிதறி கிடப்பதால் சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது.

    எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து விபத்து க்கள் மேலும் நடை பெறாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கி ன்றனர்.

    • எதிர்பாராத விதமாக தவறி தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஆயிகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 48). இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். சுப்பிரமணி தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் தேங்காய் பறிப்பதற்காக பெருந்துறை வாய்க்கால் மேடு, பள்ள க்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்ட த்திற்கு சென்றார்.

    தொடர்ந்து அவர் அங்கு தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப் போது அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மயக்கம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்
    • வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது

    பெருந்துறை,

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் கீழேரி பாளையம் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி ( 72). இவர் தனது மனைவி கருணை அம்மாள், மகன் பூபதி, மகள் விஜயலட்சுமி ஆகியோருடன் குடியிருந்து வருகிறார்.

    இவரது மனைவி கருணைஅம்மாள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்து வருகிறார். கந்தசாமி கொளப்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்க ளாக இவருக்கு குடல் பிரச்சனை மற்றும் அல்சர் நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

    அவர் மனைவி மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படி கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டில் வந்து பார்த்தபோது அவரது கணவர் கந்தசாமி வீட்டில் இல்லை.

    உடனடியாக மகன் மற்றும் மகள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்து வந்ததாகவும் அதனை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த தாகவும் இவர்களுக்கு தகவல் கிடைத்தது.

    கருணை அம்மாளும் அவரது மகனும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசோதா பேகம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

    • விஜய் பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அரச்சலூர்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் விஜய் (வயது 23).

    இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன (21) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு வயதில் ஜாஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமண த்துக்குப் பிறகு இவர்கள் ஈரோடு மாவட்டம் அட்ட வணை அனுமன் பள்ளி அருகே உள்ள முருகந்தொழு வுப்பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மேச்சேரிக்கு குடும்ப த்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தின மனைவி மற்றும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு விஜய் முருகந்தொழுவு வந்தார்.

    தொடர்ந்து அவர் அரச்சலூர் அருகே உள்ள பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள கிணற்றுக்குள் இறங்கி விஜயை மீட்டு அரசு ஆ!ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்திரு க்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடியதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள போதபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது நண்பர் சதீசுடன் சேர்ந்து அவரது தோட்டத்தில் சுரேஷ் மது அருந்தியுள்ளார். போதையில் சதீஷ் தூங்கி விட்டார். இரவு 8 மணியளவில் சதீஷ் தூங்கி எழுந்து பார்த்தபோது சுரேசை காணவில்லை.

    பின்னர் தோட்டம் முழுவதும் தேடி பார்த்தும் சுரேஷ் கிடைக்கவில்லை. ஒருவேளை சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்திரு க்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடியதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டம் உத்சுகி பகுதியை சேர்ந்தவர் சோட்டுபுனியா (30). இவர் ஈேராடு மாவட்டம் பெருந்துறை அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் சுகான்புனியா கொடுத்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈேராடு வி.வி.சி.ஆர். நகர் முதலாவது வீதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (73). இவர் கடந்த 26-ந் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    இந்நிலையில் பழனிக்க–வுண்டன்பா–ளையம் காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் முதியவர் சோமசுந்தரத்தின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பிணமாக மிதந்த முதியவர் சோமசுந்தரம் என்று உறுதி செய்தனர்.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் முதியவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாய்க்கால் கரைக்கு சென்ற போது தவறி விழுந்து இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே சிப்காட் நுழைவாயில் எதிரே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதால் பெரியநாயகி கீழே விழுந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு ஆர்.எம்.புதூர் சூரியம்பாளையம் ஜவுளி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பெரியநாயகி (வயது 48). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் காலை வேலை விஷயமாக விஜயமங்கலம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடு நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    பெருந்துறை அருகே சிப்காட் நுழைவாயில் எதிரே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதால் பெரியநாயகி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியநாயகி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×