மரத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி

புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார்.இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மரத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாலுகா ஈங்கூர் அடுத்த நல்லகவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (59). இவரது மனைவி பூங்கொடி. தமிழ்நாடு மின்சார வாரிய த்தில் உதவி மின் பொறி யாளர் அலுவ லகத்தில் போர்மேனாக பெரியசாமி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவ த்தன்று பெரியசாமி வீட்டின் முன்புறமுள்ள புளிய மரத்தில் ஏறி வீட்டிற்கு வரும் மின்சார லைனை ஒதுக்கி கொண்டி ருந்தார்.

அப்போது அவரது மனைவி பூங்கொடி மற்றும் கொழு ந்தனார் சுப்பிரமணியம் அதனை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத வகையில் திடீரென 15 அடி உயரம் உள்ள புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார். இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் சுப்பிரமணி இருவரும் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பெரிய சாமியை சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com