மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

எதிர்பாராத விதமாக தவறி தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.
மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள ஆயிகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 48). இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். சுப்பிரமணி தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் தேங்காய் பறிப்பதற்காக பெருந்துறை வாய்க்கால் மேடு, பள்ள க்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்ட த்திற்கு சென்றார்.

தொடர்ந்து அவர் அங்கு தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப் போது அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மயக்கம் அடைந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com