தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சாவு

தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சாவு

மணிகண்டன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Published on

கோபி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் அந்த மில்லில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com