ஆற்றில் விழுந்து மெக்கானிக் பலி

ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆற்றில் விழுந்து மெக்கானிக் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன் (74). இவரது மனைவி ஆகி சர்ஜாத். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இதில் இளைய மகன் சித்திக் அலி (35). இவர் அதே பகுதியில் இருசக்கர மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு வருடமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அனுப்பர்பாளையம் பரிசல் துறையில் உள்ள ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்திக் அலியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சித்திக் அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்திக் அலி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com