கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

விஜய் பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறதுபரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

அரச்சலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் விஜய் (வயது 23).

இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன (21) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு வயதில் ஜாஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமண த்துக்குப் பிறகு இவர்கள் ஈரோடு மாவட்டம் அட்ட வணை அனுமன் பள்ளி அருகே உள்ள முருகந்தொழு வுப்பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மேச்சேரிக்கு குடும்ப த்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தின மனைவி மற்றும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு விஜய் முருகந்தொழுவு வந்தார்.

தொடர்ந்து அவர் அரச்சலூர் அருகே உள்ள பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள கிணற்றுக்குள் இறங்கி விஜயை மீட்டு அரசு ஆ!ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com