மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

பெருந்துறை அருகே சிப்காட் நுழைவாயில் எதிரே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதால் பெரியநாயகி கீழே விழுந்தார்.பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
Published on

பெருந்துறை:

ஈரோடு ஆர்.எம்.புதூர் சூரியம்பாளையம் ஜவுளி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பெரியநாயகி (வயது 48). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் காலை வேலை விஷயமாக விஜயமங்கலம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடு நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

பெருந்துறை அருகே சிப்காட் நுழைவாயில் எதிரே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதால் பெரியநாயகி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியநாயகி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com