search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notification"

    • விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதைகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது
    • திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு அறிவுறுத்தல்

    அரியலூர்,

    திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மக்காச் சோளம் மற்றும் பருத்தி அதிகமான பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. இப்பயிர்களை விதைப்பு செய்ய ஆடிப்பட்டம் மிகவும் ஏற்றதாகும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கும்போது தமிழ்நாடு அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு, விதைகளை வாங்கும்போது விதைப் பைகளில் உள்ள விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதியாகும் நாள், குவியல் எண், அவரவர் பகுதிக்கு ஏற்றவையா என்பவற்றை பார்த்து வாங்க வேண்டும்.மேலும், விதைகளை வாங்கும்போது ரசீதில் விதையின் ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.தாங்கள் விற்கும் விதைக்கு ரசீதை தவறாமல் வழங்க வேண்டும். விவசாயிகள் விதைகளை விதைக்கும்போது மண்ணில் போதிய ஈரம் இருக்க வேண்டும். அறுவடை முடியும் வரை அந்த ரசீதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ரசீது இருந்தால் தான் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் உரிய இழப்பீடு கோர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • ஆடிபெருக்கை நாளில் ஆற்றின் ஆழமான பகுதிகளில் குளிக்க கூடாது என்று திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் பட்டியல் வெளியீடு

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று இறங்கவோ, குளிக்கவோ கூடாது. அங்கீகரிக்கப்பட்ட இடங்கள்,

    தொட்டியம் வட்டம்- உன்னியூர், பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி பாளையம், ஸ்ரீராமசமுத்திரம், சீலைப்பிள்ளையார்புத்தூர், காடுவெட்டி, நத்தம், எம். புத்தூர் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு), அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்), சீனிவாசநல்லூர் ( மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர் சத்திரம், மணமேடு, முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை)

    முசிறி வட்டம் - முசிறி மேற்கு – காவேரி பாலம், சந்தபாளையம் பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்) அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம்

    ஸ்ரீரங்கம் வட்டம்- பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை), முக்கொம்பு, கம்பரசம்பேட்டை (தடுப்பணை), முருங்கப்பேட்டை, முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை, பளூர் படித்துறை, அல்லூர் மேலத்தெரு படித்துறை, திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை, அந்தநல்லூர் படித்துறை, திருப்பராய்துறை - துலாஸ்தானம் , மேலூர் அய்யனார்படித்துறை, கீதாபுரம் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை, கருடமண்டபம் படித்துறை, பஞ்சக்கரை படித்துறை, பனையபுரம் படித்துறை, உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை, கிளிக்கூடு படித்துறை

    மண்ணச்சநல்லூர் வட்டம்- கரியமாணிக்கம் மேற்கு கிராமம், வாத்தலை, கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் - சிறுகாம்பூர், திருவாசி கிராமம் - துடையூர் களிங்காயிகோவில், மாதவ பெருமாள் கோவில் கிராமம் - நொச்சியம் மான்பிடி மங்களம், பிச்சாண்டார் கோவில் கிராமம் - அய்யன் வாய்க்கால்

    திருவெறும்பூர் வட்டம்- வேங்கூர் பூச படித்துறை, பனையக்குறிச்சி படித்துறை, கீழ முல்லக்குடி படித்துறை, ஒட்டக்குடி படித்துறை.

    இலால்குடி வட்டம்- கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் - அப்பாத்துரை கிராமம் , கொள்ளிடம் ஆறு - கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி

    மாநகரப்பகுதி - அம்மா மண்டபம், கருடா மண்டபம், கீதாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை - 2, காந்தி படித்துறை, ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, தில்லைநகர் படித்துறை - 2.

    ஆடி -18 மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • கனரக லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு தகவல் பலகை
    • முக்கிய சாலைகளில் 8 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது

    ஜெயங்கொண்டம், 

    ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வராமல் தடுக்கும் விதமாக ஜெயங்கொண்டம் முக்கிய சாலைகளில் 8 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதுஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் வர்த்தகர்கள் பொதுமக்கள் கோரிக்கையின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பெயரில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆய்வாளர் சாஹிரா பானு மற்றும் போக்குவரத்து போலீசார்கள் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் விபத்து தடுக்கும் விதமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்களை இயக்காமல் இருக்கும் வகையில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கும் விதமாக ஜெயங்கொண்டம் முக்கிய சந்திப்பில் 8 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் மிதித்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்தடை அறிவிப்பு குளறுபடியால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களை சிரமப்படுத்துகிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் மின்சார வாரியம் நகர் மற்றும் புறநகர் என இரண்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்புற அலுவல கத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் மின்சார பராம ரிப்புக்காக மின்தடை அறிவிப்பு வெளியிடப்படு கிறது. இந்த அறிவிப்பானது 2 நாட்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.

    ஆனால் ஏதோ ஒரு காரணம் கூறி மின்தடை அறிவிக்கப்பட்ட அன்று காலை இன்று மின்தடை இல்லை என்று திடீரென தகவல் தருகின்றனர். இவ் வாறு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட தொழி லாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள் மற்றும் மின்சாரம் சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்க ளுக்கு சார்ந்த தொழில் நிறுவனங்கள் விடுமுறை விட்டு விடுகின்றனர்.

    ஆனால் அன்று காலை திடீரென மின்சார தடை இல்லை என அறிவிப்பதால் அவர்களுக்கு அன்று ஒரு நாள் வேலை பாதிக்கப்படுகி றது. மேலூர் மின்சார வாரி யம் 4 நாட்களுக்கு பின்னால் மீண்டும் நாளை மின்தடை என்றுஅறிவிப்பை வெளி யிட்டுள்ளனர்.

    இதனால் தொழில்கள் முடங்கவதோடு தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறி விப்பை வெளியிட்டு பொது மக்கள் சிரமத்தை குறைக்க உரிய நடவடிக்கை இனி மேலாவது மேற்கொள் வார்களா? அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கூறுகின்றனர்.

    • பெரம்பலூர் அஞ்சலகங்களில் வங்கி கணக்கு தொடங்க மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • தபால்காரர் மூலமாக தொடங்கி மகளிர் உரிமை தொகையை பெறலாம் என்று அறிவிப்பு

    பெரம்பலூர்,

    ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை பெற தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும். இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டங்களில் தகுதியானவர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால்காரர்களை அணுகி இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியில் இ-கே.ஒய்.சி. என்ற முறையில் கணக்கு தொடங்கி உரிமை தொகையை பெற்று கொள்ளலாம்.

    மேலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் பிரதம மந்திரி விவசாயி நிதி உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இது போன்ற கணக்கு தொடங்கி பயன் பெறலாம். பொதுமக்கள் இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியின் மூலம் மட்டுமே வழங்கப்படும் ரூ.10 லட்சத்திற்கான சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.396, ரூ.399 செலுத்தி இணையலாம். இந்த காப்பீடு திட்டத்தில் இணைய இந்திய அஞ்சல் துறை பட்டுவாடா வங்கியின் சேமிப்பு கணக்கு அவசியம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பான திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.
    • ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேன்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

    விருதுகள் விவரம் வருமாறு:-

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு-முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள் இதற்கு தகுதியடையவர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-தனிநபர்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-நிறுவனம்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்.

    சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை, பரிசு தொகை ரூ.15000. சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் வருமாறு:-

    விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் கடந்த ஆண்டு 01-01-2022 முதல் 31-2-2022 வரை உள்ள தகுதி காலத்திற்குள் தனிநபர் -நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். தனிநபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப்படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையுடன் இணைத்தல் வேண்டும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர் சி நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட 1-1-2022 முதல் 31-12-2022 வரை உள்ள காலகட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச்சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள் , பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும். மேற்கண்ட களப்பணியை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் ,தேர்வுக் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் , நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட நான்கு பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தநபர்கள், நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மேற்கண்ட நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள்,நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.

    சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான தனி விதிகள்:-

    சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம் 2022-ம் ஆண்டு ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022-ம் வரை வெளியான, தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்டோர் இணைந்து உருவாக்கிய, சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரைக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு மடலும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழிலும் / ஆங்கிலத்திலும் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சி கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி ,அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்று விவரம் அளித்தல் வேண்டும்.இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும் / ஆங்கிலத்திலும்), அந்தபுத்தகம் முழுமையாக இணைத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பிரசுரம் செய்திருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.ஆராய்ச்சிக் கட்டுரையின் 6 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

    ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பிக்கும் முறை:-

    விண்ணப்பத்துடன் செயலாக்கத்தினை உறுதிபடுத்தும் வகையில், பிரசுரச்சீட்டுகள், ஊர்வலங்கள் மற்றும் நிழற்படங்கள்,மற்ற அவசிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புகள் நூலால் உறுதியாக தைக்கபட்டிருக்கவேண்டும்.ஸ்டேப்ளர்பின் கொண்டு இணைக்கப்படக்கூடாது.இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநரக வளையதளத்தில் (www.environment.tn.nic.in) இருந்து 15.8.2023பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். வலைதள முகவரி தொலைபேசி எண்-www.environment.tn.nic.in- 2433 6421.

    விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யும் கடைசி நாள் -15.8.2023.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வந்து சேர வேண்டிய கடைசி நாள்-21.8.2023.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 நகல்களில் இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை' (Director, Department of Environment and Climate Change)என்ற பெயரில் ரூ.100 க்கான கேட்புக் காசோலையுடன் 3 புகைப்படங்களையும் இணைத்து அனுப்பவேண்டும்.இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தரைதளம், பனகல்மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு 21.8.2023 அன்று மாலை 5 மணிக்குள்ளாக தபால் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • டாஸ்டாக் கடைகளை அகற்ற கோரி பஞ்சாயத்து தோறும் போராட்டம் நடத்தப்படும் என்று புதுக்கோட்டை பாஜக அறிவித்துள்ளது
    • புதுக்கோட்டை பா.ஜ.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, 9 ஆண்டுகளில் பாஜக மக்களுக்கு செய்துள்ள நல்ல திட்டங்களை மக்களுக்கு புரிய வைக்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் வருகிற 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து, பிரச்சினைகளை முன்வைத்து புதுக்கோட்டையிலும் அனைத்து பஞ்சாயத்துகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு இரட்டடிப்பு செய்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும்அவற்றை நிறுத்தவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் குடும்ப பெண்களுக்கு உரிமை தொமை ரூ.1000 தரப்படும் என அறிவித்துவிட்டு தற்போது அதை நிறைவேற்ற பல்வேறு கண்டிசன்கள் போடப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து வாரியாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே பஞ்சாயத்துகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற முக்கியமாக போராட்டம் நடத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்றிருந்தோம். ஆனால் தற்போதைய நிலையில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராக வருவார்.பாஜக நிர்வாகிகள் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை பொய் வழக்குகளை போட்டு வருகிறது. பிரதமர் அனைவருக்கும் 15 லட்சம் தருகிறேன் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக உதயநிதிஸ்டாலின் கூறிவருகிறார். அவர் நீட் ரகசியம் தெரியும்என்றார் அதை தெரிவித்தாரா? என்று கூறினார். பேட்டியின் போது பழ.செல்வம்குருஸ்ரீராம், கார்த்திகேயன், கோவேந்திரன், சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர் .

    • திருச்சியில் 4ம் தேதி 28 இடங்களில் மின் விநியோகம் இருக்காது
    • செயற்பொறியாளர் முத்துராமன் அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் மின்சாரத்துறை செயற்பொறியாளர் கா.முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி கிழக்கு கோட்டம், திருவெறும்பூர், அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் 4ம் தேதி(செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை, அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டிபுரம், பாலாஜி நகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் இண்டஸ்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
    • குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

     ஊட்டி,

    நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

    இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வருகிற 29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்.
    • ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், காவல் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நரிக்குடி பகுதிக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது வரை வீரசோழனில் தான் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு செல்வதற்கு நரிக்குடிக்கு வந்து தான் பேருந்து மாறி செல்ல வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியிலும் வாரச்சந்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலும் வாரச்சந்தை அமைப்பது குறித்து 7-வது வார்டு கவுன்சிலர் சரளாதேவி போஸ் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நரிக்குடி யூனியன் சேர்மன் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் நரிக்குடி மருதுபாண்டியர் சத்திரம் மற்றும் அழகிய மீனாள் ்கோவில் அருகே வருகிற 29-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று வார சந்தை செயல்படுமென நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் தெரிவித் துள்ளார்.

    இந்த வாய்ப்பினை பொது மக்களும், வியா பாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வ ரனுக்கும், வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தி வந்த கவுன்சிலர் சரளாதேவிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
    • ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 2-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

    மனுக்களை திரும்ப பெற 2-ந்தேதி கடைசி நாள். 3-ந்தேதி இரவு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 14-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தகவலை தேர்தல் ஆணையரும், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான முருகேசன், உதவி தேர்தல் ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.
    • தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழி சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.

    இந்நிலையில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதில் வருகின்ற 28-ந்தேதி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. அதனால் அதற்கு முன்பாகவே தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும் 28-ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேசிய நெடுஞ்சாலையோ, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகள் பொறுப்பல்ல. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×