search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notification"

    • அரியலூரில் கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு

    அரியலூர்,

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி மேற்படி நடைமுறை மூலதனக் கடனை பெற்று பயன்பெறலாம்.கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை , நிலவுடைமை தொடர்பாக 10 (1)}கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகிய ஆவணங்களுடன் கடன் மனு சமர்ப்பிக்க வேண்டும்.கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அவரவர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தினைப் பெற்று ரூ.100 பங்குத்தொகை, ரூ.10 நுழைவுக்கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராகச் சேர்ந்து மேற்கண்டுள்ள ஆவணங்களுடன் நடைமுறை மூலதனக் கடன் மனுவினைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது
    • அன்றைய தினங்கள் மதுபானம் விற்பனை நடைபெறாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வருகிற 28-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளாகும். இதேபோல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தியடிகள் பிறந்தநாள். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், ஓட்டல் பார்கள் வருகிற 28-ந்தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறையாகும். அன்றைய தினங்கள் மதுபானம் விற்பனை நடைபெறாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும் என கலெக்டர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய கடன் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும் என்று அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்
    • 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது,அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 தாலுகா மருத்துவமனைகள், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்க ளாகவே மருந்து கடைக ளுக்கு சென்று மாத்திரை களை வாங்கி சாப்பிடக்கூ டாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் மற்றும் அரசு மருத்து வமனைகளுக்கு சென்று டாக்டரை அணுகி தேவை யான சிகிச்சை பெற்று க்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி, ஏர் கூலர், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒரு முறை பிளீசிங் பவுடரை கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலர வைத்து பிறகு தண்ணீரை நிரப்பி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் சிர ட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்ப டுத்தி, அவைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் விழிப்புணர்வுடன் பாது காத்து கொள்ள வேண்டும்.தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். 

    • போக்குவரத்து வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
    • வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    வருகிற 11-ந்தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது.

    வாடகை, திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாக னங்கள், டிராக்டர், டாடா ஏஸ், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. சொந்த வாக னங்களில் வருபவர்கள் உரிய ஆவணங்களை 8-ந்தேதிக்கு முன்னர் உட்கோட்ட அலுவல கங்களில் அளித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக் கப்படமாட்டாது. பிற மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வருபவர்களும் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். வாக னத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கவோ, ஒலி பெருக்கி கள் பொருத்தியோ செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. பரமக்குடி நகருக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

    ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக் கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணம் செல்லலாம்.

    சொந்த ஊரில் செப்டம்பர் 11-ந் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சி கள் கொண்டாடவும், ஒலி பெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    பரமக்குடி நினைவி டத்தில் செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும். அலங்கார ஊர்தி அணி வகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.பரமக்குடி நினைவி டத்தில் 11-ந்தேதி மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். கட்சிகள், அமைப்புகள் 8-ந்தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிப்ப தற்காக 8300175888 என்ற தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் இந்த தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தினார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 83001 75888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    அவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனுதார ருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.

    மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 1098, பேரிடர் மேலாண்மை சார்பில் 1077, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 181, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வேலாயுதம்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு விடும் முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் ஜெயராமன் அறிவிப்பு

    வேலாயுதம்பாளையம், 

    வேலாயுதம்பாளையம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நொய்யல், குந்தாணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை ,காகித ஆலை,குறுக்கு பாளையம், மூலியமங்கலம், புகழூர், தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், கரப்பாளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களாகிய தாங்கள், தங்களுக்கு சொந்தமான வீடுகளுக்கு புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களை பற்றிய முழு விபரம் தெரிந்தும், அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும். முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    அவர்கள் தங்களது வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு அவர்களை வாடகைக்கு குடிஅமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தகவல்கள் தெரிவிக்க, 9498100797 என்ற வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய செல்போன் எண்ணிற்கு அழைக்கலாம்என்று அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளனர். 

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் புதுக்கோட்டையில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்
    • விண்ணப்பங்கள் குறித்து சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும் என தகவல்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி ஆகிய வட்டங்களில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை முகாம் நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் கட்டமாக திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய வட்டங்களில் கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த 2 கட்டமாக நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகிற 19, 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்-04322-295022, வாட்ஸ்-அப் எண்- 94450 45622 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகள் போன்றவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது
    • பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் வேண்டுகோள்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், குவாரி குழிகள் மற்றும் செயலிழந்த இடங்களை கண்டறிதல், ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காண மாவட்டத்திற்குள் விரிவான கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதன் மூலமாக கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த போர்வெல்கள். விரிவாகப் பராமரிக்கவும் அவற்றின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவற்றை குளிப்பதற்கு பயன்படுத்தவதை தடுத்திடும் வகையில் கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உடனடியாக வேலி அமைத்திட அதன் உரிமையாளர் மற்றும் குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவும் தங்கள் குழந்தைகளை அப்பகுதிக்கு விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும், தங்கள் பகுதியில் உள்ள செயலற்ற நிலையில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. .இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொடர்புடைய உரிமையாளர்கள்/ குத்தகைதாரர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்
    • ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர்

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வர்த்தகர் பிரிவு மாநில தலைவரும் எம்.பி.யுமான விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவின் மாநில துணைத் தலைவராக ராயல் வி.தர்மதுரை இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை சோனியா காந்தி இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தமிழகத்தின் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி அமைந்திட அனைவரும் மாநிலத் துணைத் தலைவர் ராயல் வி.தர்மதுரையுடன் இணைந்து உழைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • இலவச நல உதவிகள்-காலை சிற்றுண்டி திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
    • இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    மதுரை

    மதுரை மங்கலபுரம் பகு–தியில் உள்ள கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 188-வது விளை–யாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பி–னரும், கிறிஸ்தவ நல் லெண்ண இயக்க தலைவ–ருமான இனிகோ இருதய–ராஜ் எம்.எம்.எல்.ஏ., தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவா உலக திருச்சபை மாமன்ற உறுப்பினர் வழக்க–றிஞர் பெர்னாண்டஸ் ரத் தினராஜா மற்றும் மதுரை ராமநாதபுரம் திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த–னர்.

    இதில் சிறப்பு விருந்தின–ராக கலந்து கொண்ட தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தின–ராஜா பேசுகையில், தமிழகத் தில் முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்.

    அரசு பள்ளிகளில் பயி–லும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாண–வர்களுக்கும் வழங்க வேண் டும்.

    அதுபோல அரசு பள்ளி–களில் பயிலும் மாணவர்க–ளுக்கு வழங்கப்படும் இல–வச நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி ஆகியவையும் அரசு உதவி பெறும் சிறு–பான்மை பள்ளிகளான கிறிஸ்தவ பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து விரை–வில் இதனை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து தலைமை உரையாற்றிய இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டா–லின், சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, நான் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இலவச நலத்திட்டங்கள் மற்றும் காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களை சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசி இருக்கிறேன். எனவே முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் இந்த கோரிக்கை–களை விரைவில் நிறை–வேற்றி அதற்கான அறி–விப்பை வெளியிடுவார் என்று உறுதியாக நம்புகி–றேன்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    இதைத்தொடர்ந்து பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார். விழாவில் பல்வேறு போட்டி–களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பார்ச் சூன் பொன்மலர் ராணி வரவேற்று பேசினார்.

    முடிவில் பள்ளி தாளா–ளர் அருள் தாஸ் நன்றி கூறினார். இந்த விழாவில் மதுரை ராமநாதபுரம் திரு–மண்டல முதன்மை பணியா–ளர்கள் மற்றும் போதகர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுய உதவி குழுவுக்கு சுழல் நிதிக்கடன் வழங்கப்படும்
    • கரூர் மாவட்டம் கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்து உள்ளார்

    கரூர், 

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கரூர் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட் சிகளில் வசிக்கும் 18 வயது நிரம்பிய ஏழை குடும்பங்களை சேர்ந்த மகளிரை கொண்டு புதிதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட உள்ளது. புதிதாக துவங்கப்படும் குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூ.10ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.2லட்சம் முதல் 20 லட்சம் வரை வங்கி கடன் பெற்றுத் தரப்படும். இந்த கடனிற்கு 7 சதவீதத்திற்கு மேல் வட்டி மானியமும் வழங்கப்படும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநக ராட்சி, பள்ளப்பட்டி, புகளூர், குளித்தலை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் உள்ள இதுவரை மகளிர் குழுவில் இணையாத பெண்கள் உடனடியாக மகளிர் குழுவில் இணைந்து அனைத்து பயன்களையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×