search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு
    X

    போக்குவரத்து வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு

    • போக்குவரத்து வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
    • வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    வருகிற 11-ந்தேதி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது.

    வாடகை, திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாக னங்கள், டிராக்டர், டாடா ஏஸ், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. சொந்த வாக னங்களில் வருபவர்கள் உரிய ஆவணங்களை 8-ந்தேதிக்கு முன்னர் உட்கோட்ட அலுவல கங்களில் அளித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக் கப்படமாட்டாது. பிற மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வருபவர்களும் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். வாக னத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கவோ, ஒலி பெருக்கி கள் பொருத்தியோ செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. பரமக்குடி நகருக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

    ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக் கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணம் செல்லலாம்.

    சொந்த ஊரில் செப்டம்பர் 11-ந் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சி கள் கொண்டாடவும், ஒலி பெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    பரமக்குடி நினைவி டத்தில் செப்டம்பர் 11-ந் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும். அலங்கார ஊர்தி அணி வகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.பரமக்குடி நினைவி டத்தில் 11-ந்தேதி மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். கட்சிகள், அமைப்புகள் 8-ந்தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×