search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு வாடகைக்கு விடும் முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும்
    X

    வீடு வாடகைக்கு விடும் முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும்

    • வேலாயுதம்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு விடும் முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் ஜெயராமன் அறிவிப்பு

    வேலாயுதம்பாளையம்,

    வேலாயுதம்பாளையம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நொய்யல், குந்தாணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை ,காகித ஆலை,குறுக்கு பாளையம், மூலியமங்கலம், புகழூர், தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், கரப்பாளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களாகிய தாங்கள், தங்களுக்கு சொந்தமான வீடுகளுக்கு புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களை பற்றிய முழு விபரம் தெரிந்தும், அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும். முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    அவர்கள் தங்களது வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு அவர்களை வாடகைக்கு குடிஅமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தகவல்கள் தெரிவிக்க, 9498100797 என்ற வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய செல்போன் எண்ணிற்கு அழைக்கலாம்என்று அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×