search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குவாரி குழிகளில் பாதுகாப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்
    X

    குவாரி குழிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்

    • அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகள் போன்றவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது
    • பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் வேண்டுகோள்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், குவாரி குழிகள் மற்றும் செயலிழந்த இடங்களை கண்டறிதல், ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காண மாவட்டத்திற்குள் விரிவான கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதன் மூலமாக கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த போர்வெல்கள். விரிவாகப் பராமரிக்கவும் அவற்றின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவற்றை குளிப்பதற்கு பயன்படுத்தவதை தடுத்திடும் வகையில் கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உடனடியாக வேலி அமைத்திட அதன் உரிமையாளர் மற்றும் குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவும் தங்கள் குழந்தைகளை அப்பகுதிக்கு விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும், தங்கள் பகுதியில் உள்ள செயலற்ற நிலையில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. .இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொடர்புடைய உரிமையாளர்கள்/ குத்தகைதாரர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×