search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்
    X

    29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்

    • வருகிற 29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்.
    • ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், காவல் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நரிக்குடி பகுதிக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது வரை வீரசோழனில் தான் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு செல்வதற்கு நரிக்குடிக்கு வந்து தான் பேருந்து மாறி செல்ல வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியிலும் வாரச்சந்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலும் வாரச்சந்தை அமைப்பது குறித்து 7-வது வார்டு கவுன்சிலர் சரளாதேவி போஸ் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நரிக்குடி யூனியன் சேர்மன் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் நரிக்குடி மருதுபாண்டியர் சத்திரம் மற்றும் அழகிய மீனாள் ்கோவில் அருகே வருகிற 29-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று வார சந்தை செயல்படுமென நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் தெரிவித் துள்ளார்.

    இந்த வாய்ப்பினை பொது மக்களும், வியா பாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வ ரனுக்கும், வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தி வந்த கவுன்சிலர் சரளாதேவிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×