search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "newzealand"

    நியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரை நிர்மாணிக்கும் மூன்றாவது டெஸ்ட் துபாயில் தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களும், வாட்லிங் 77 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய அசார் அலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஆசாத் ஷபிக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 201 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஆசாத் ஷபிக்கும் சதமடித்தார்.  அவர் 104 ரன்னில் வெளியேறினார். இவர்களை தவிர மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.



    இதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 348  ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து தரப்பில் வில்லியம் சாமர்வில்லி 4 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து,  74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 14 ரன்னுடனும், வில்லியம் சாமர்வில்லி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #PAKvNZ
    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvNZ #CaneWilliamson
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜித் ராவலும், டாம் லத்தாமும் களமிறங்கினர்.

    டாம் லத்தாம் 4 ரன்னிலும், ஜித் ராவல் 45 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார்.

    மற்றவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் வெளியேறினார்.



    ராஸ் டெய்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து, ஹென்ரி நிகோல்ஸ் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 20 ரன்னிலும், டிம் சவுத்தி 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  நியூசிலாந்து அணி 90 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 42 ரன்னும், வில்லியம் சாமர்வில்லி 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், பிலால் ஆசிப் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். #PAKvNZ #CaneWilliamson
    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #PAKvNZ #Pakistan #NewZealand
    துபாய்:
     
    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.

    அதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, யாசிர் ஷா பந்து வீச்சில் சிக்கி 90 ரன்னில் சுருண்டது. யாசிர் ஷா 8 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

    பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்று 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாம் லாதம் அரை சதமடித்து வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹென்றி நிகோலஸ் டெய்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ராஸ் டெய்லர் 82 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 77 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 



    இறுதியில், நியூசிலாந்து அணி 112.5 ஓவரில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளும், ஹசன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய யாசிர் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் இரு அணிகளும் தலாஒரு வெற்றியை பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. #PAKvNZ #Pakistan #NewZealand
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. #TestCricket #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    அதன்பின், ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 83.2 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாபர் அசாம் மட்டும் தாக்குப் பிடித்து 62 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜீத் ராவல் 46 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 37 ரன்னிலும் அவுட்டானார்.



    அடுத்து இறங்கிய ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களும், வாட்லிங் 59 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 100.4 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

    மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் உள்ள நிலையில், 139 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டி இருப்பதால் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. #TestCricket #PAKvNZ
    துபாயில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது. #PAKvNZ
    துபாய்:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. முதல் டி 20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 28 பந்துகளில் 44 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன்37 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.  

    கோரி ஆண்டர்சன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷகின் அப்ரிதி 3 விக்கெட் எடுத்தார்.



    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 40 ரன்களிலும், அசிப் அலி 38 ரன்களிலும், பகர் சமான் 24 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஆட்டத்தின் இறுதியில், மொகமது ஹபீஸ் நிலைத்து நின்று ஆடி 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்துஅவுட்டாகாமல் பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஆட்ட நாயகனாக ஷகின் அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது. #PAKvNZ
    அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மொகமது ஹபீஸ் 45 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 34 ரன்னும் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.



    இதைத்தொடர்ந்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. காலின் மன்ரோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ராஸ் டெய்லர் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஒருபுறம் ராஸ் டெய்லர் நின்றாலும், அந்த ஓவரில் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

    இதையடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #PAKvNZ
    பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake
    வெலிங்டன்:

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  #Earthquake
    நியூசிலாந்தின் டவுரங்கா நகரில் லாரியும் காரும் மோதிய விபத்தில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #Accident
    மெல்போர்ன்:

    நியூசிலாந்து நாட்டின் ஒஹால்டி பகுதியில் வசித்து வந்தவர் பர்மிந்தர் ஜபால் (27). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் நேற்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    டவுரங்கா நகரில் நெடுஞ்சாலை எண் 36ல் கார் சென்றபோது லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பர்மிந்தர் ஜபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விபத்து பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் கடலில் எழுந்த 78 அடி உயர ராட்சத அலைகள் மிகப்பெரிய ராட்சத அலைகள் என்ற சாதனையை படைத்துள்ளது.
    வெலிங்டன்:

    நியூசிலாந்து நாட்டின் கேம்பல் தீவு அருகே கடந்த 8-ந்தேதி கடலில் கடும் புயல் காற்று வீசியது. அப்போது அங்கு 23.8 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.

    அதாவது 78 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்துள்ளன. அவை 8 மாடி அளவு உயரத்துக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. கடல் அலைகளின் உயரத்தை ஆய்வு செய்யும் ‘பை’ எனும் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

    இது உலகின் தென் துருவத்தில் கடலில் எழுந்த மிகப்பெரிய ராட்சத அலை என வர்ணிக்கப்படுகிறது. இதற்கு முன்பு தென் துருவ கடல் பகுதியில் 2012-ம் ஆண்டில் 22.03 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. அதுவே மிகப்பெரிய ராட்சத அலை என்ற சாதனையை படைத்தது.


    இந்த நிலையில் சமீபத்தில் எழுந்த ராட்சத அலைகள் அந்த சாதனையை முறியடித்ததாக கடல் ஆராய்ச்சி மூத்த நிபுணர் டாம் துரந்த் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் கடந்த 1958-ம் ஆண்டில் கலாஸ் காவில் லிகுயா வளைகுடாவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. அப்போது 30.5 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    ×