search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiappar Temple"

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடந்தது.
    • தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.

    4-ம் திருவிழாவில் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வீதியுலா நடந்தது. 9-ம் திருநாளான நேற்று முன்தினம் செப்புத்தேரில் அலங்கரிக்கப்பட்ட காந்திமதி அம்பாள் வீதியுலா புறப்பட்டு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

    10-ம் திருநாளான நேற்று மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசைகளுடன் ஆடிப்பூர முளைக்கட்டும் திருவிழா நடந்தது. விழாவில் அம்பாளின் மடியில் முளைக்கட்டிய தானியங்கள், பலகாரங்களை நிரப்பி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • இன்று காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசையுடன் முளைக்கட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 12-ந்தேதி முதல் ஆடிப்பூர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-வது நாளில் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

    9-வது நாள் திருவிழாவான நேற்று காலை காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட செப்பு தேரில் எழுந்தருளினார். பின்னர் 4 ரதவீதிகளில் தேர் வலம் வந்தது. இந்த தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசையுடன் முளைக்கட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பக்தர்கள், ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • வளைகாப்பு திருவிழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு மங்கல நாண் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், பூம்பருப்பு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் வளைகாப்பு திருவிழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு மங்கல நாண், வளையல்கள் 4, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு அடங்கிய தொகுப்பினையும், அனைத்து பக்தர்களுக்கும் அம்பாளின் திருவருட்பிரசாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் பூம்பருப்பு ஆகியவற்றை பொது மக்களுக்கு மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.

    இதில் முசம்மில் அகமது, கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், ரவிந்தர், மாரியப்பன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நெல்லை பகுதி கழக முன்னாள் செயலாளரும், மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலருமான உலகநாதன் செய்திருந்தார்.

    • ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மன் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் வளையல்களை வாங்கினர். வளைகாப்பு வைபவத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.

    மதியம் 12.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.

    விழாவில் வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணிமற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

    • ஆடி பூரத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வளையல் மாலைகள் பக்தா்களின் கரகோஷங் களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பா் -காந்திமதி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.

    ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இங்கு ஆடி மாதத்தில் காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வரும் திருவிழா வின் 4-ம் நாளான இன்று காந்திமதி அம்பா ளுக்கு வளைகாப்பு உற்சவம் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடை பெற்றது.

    இதற்காக செப்பு கேட யத்தில் காந்திமதி அம்பாள் வெண்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் சுவாமி கோவில் சென்றார்.

    பின்னர் அங்கு தன் வளைகாப்பிற்கு ஆசி வேண்ட சந்திரசேகரரும், காந்திமதி அம்பாளும் நோ் ஏதிரே காட்சி கொடுத்து ஆசீா்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் சீா்வசைகளுடன் வர ஊா்வலமாக காந்திமதி அம்பாளை ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனா். மண்டபத்தில் எழுந்தரு ளிய உற்சவா் காந்திமதி அம்பாளுக்கு பல்வேறு சீா்வரிசைகள், விதவிதமான வளையல்கள் அம்பாளின் முன் வைக்க ப்பட்டிருந்தன. அம்பாளுக்கு நீராட்டு நிகழ்ச்சியும், கூந்தல் கண்ணாடியில் பாா்த்து சாிசெய்யும் வைபவம் நடைபெற்றது.

    வளையல் மாலைகள் பக்தா்களின் கரகோஷங் களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்ட தும் வந்திருந்த அனைத்து பக்தா்களுக்கும் வளையல், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகள் வீதி உலா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

    • கோவிலில் உள்ள கொடி வகைகள், வாகனங்கள் யாவும் பழமை சிறப்புடையனவாகும்.
    • கல்வெட்டுகளும் பிரதி எடுத்துப் போற்றப்பட வேண்டியவை.

    நெல்லை நகரின் மத்தியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் நெல்லையப்பர் வரங்களை வாரி வழங்கி பக்தர்களை காக்கிறார். இக்கோவில் மொத்தத்தில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட எல்லையுள் அமைந்துள்ளது. அம்மன் கோவிலும் சுவாமி கோவிலும் புராணப்படி முதலில் முழுதுகண்ட ராமபாண்டியனாலும், பின் கி.பி. 7-ம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டனவாம்.

    ஆலயங்கள் இரண்டும் தனித்தனியாக விளங்கியதால் இடைவெளியை அழகுபடுத்த எடுத்த முயற்சியின் விளைவாக கி.பி. 1647ல் வடமலையப்பப்பிள்ளை இரு கோவிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை அமைத்தார்.

    இதில் பச்சை வடிவாள், காசி விசுவநாதர், சாஸ்தா, பீமன் ஆகியோரது சிலைகள் உள்ளன. சங்கிலி மண்டபத்தின் மேற்கே சுப்பிரமணியசுவாமி கோவிலும், மேற்புறம் நந்தவனமும் இதன் நடுவில் நூறு கால்களுடன் அமைந்துள்ள வசந்த மண்டபமும் அமைந்துள்ளன. இங்கு சமயச் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, சுவாமி அம்மனுக்கு வசந்த விழா ஆகியவை நடைபெறுகின்றன.

    சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவற்றின் அமைப்பு பண்டைக்காலத் தமிழர் சிற்பக்கலை சின்னங்களாகும். ஒரே கல்லில் வடித்த மயில்வாகனத்தில் ஆறுமுகனார், வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்திருப்பது மற்றொரு எடுத்துக்காட்டாகும். இக்கோவில் முன் மண்டபமாகிய இரண்டு அம்பலங்களும் அலங்கார வேலைப்பாடு மிகுந்தவை. சுவாமி சந்நிதியில் இடது மண்டபத்திற்குத் தெற்கே கற்றூண்களில் இசையாளர்கள், வீரர்கள் உருவங்கள் பார்த்து மகிழத்தக்கவை.

    கொடிமரத்திற்கு மேற்கே கோவில் முகப்பு மண்டலத்தில் தூண்களில் வீரபத்திரர் முதலிய சிலைகள் சிற்பியின் கைத்திறனைக் காட்டுகிறது. ஈசானத்தில் விளங்கும் பெரிய நடராசப் பெருமானின் விக்ரகம் உண்மையில் ஒருவர் ஆடுவதைப் போல் அழகுடன் மனதைக் கொள்ளை கொள்கிறது.

    தெற்குப் பிரகாரத்தில் கல்லால் அமைந்துள்ள பொல்லாப் பிள்ளையார், மேல் பகுதியில் கல்லினால் அமைக்கப்பட்டுள்ள நடன மண்டபம், தாமிரசபை, அதிலிருக்கும் மரச்சிற்பங்கள், தாமிரசபைக்கு வடபுறம் உள்ள நடராசர் சிலை ஆகியன அரிய வேலைப்பாடு கொண்டவை.

    கோவிலில் உள்ள கொடி வகைகள், வாகனங்கள் யாவும் பழமை சிறப்புடையனவாகும். கல்வெட்டுகளும் பிரதி எடுத்துப் போற்றப்பட வேண்டியவை. கோவிலின் சப்தஸ்வரக் கற்றூண்கள் அரியவையும், வியக்கச் செய்பவையும் ஆகும்.

    கணபதி, முருகனை வழிபட்டு உள்ளே நுழைந்தால் ஊஞ்சல் மண்டபம். இதில் 96 கற்றூண்கள் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளன. ஐப்பசி மாதம் அம்மன் திருக்கல்யாணம் முடிந்து மூன்று நாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.

    கோவிலில் நூல்நிலையம், தேவாரப் பாடசாலை உள்ளன. இதையடுத்துப் பசுமடம், திருக்கல்யாண மண்டபம் உள்ளன. 520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரச் செங்கோல் விழா, அம்மன் திருமண விழாயாவும் நடைபெறுகின்றன. அடுத்து வடபுறம் பொற்றாமரை என்னும் புண்ய தீர்த்தம் உள்ளது. இதில் மாசி மாதம் தெப்பவிழா நடைபெறுகிறது. தடாகத்தின் மேல்புறம் பொற்றாமரைப் பிள்ளையார், வாணி, தட்சிணாமூர்த்தி, பால்வண்ணநாதர் சன்னதிகள் உள்ளன.

    • 15-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கிறது.
    • 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 5.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் 4-ம் திருநாளான வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • இன்று அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • வளைகாப்பு உற்சவம் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு பூஜை

    இந்த திருவிழாவிற்காக காந்திமதி அம்பாள்-சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதன்பின் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்திமதி அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி திருவிழாவின் 10 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் வருகிற 15-ந்தேதியும், முளை கட்டும் உற்சவம் வருகிற 21-ந் தேதியும் நடைபெறுகிறது.

    • 15-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
    • 21-ந் தேதி ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    4-ம் திருவிழாவான 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது.

    21-ந் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அன்று அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்பட்டு வயிற்றில் முளைகட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

    இதில் கலந்து கொண்டு அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைகட்டிய பாசிப்பயிரை வாங்கி சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

    • 5 சிவ சபைகளில் தாமிரசபை நெல்லையப்பர் கோவிலில் உள்ளது.
    • கோவிலின் 2-வது திருச்சுற்றில் தெற்கு பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் இறைவன் ஈசன் நடராஜர் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான 5 சிவ சபைகளில் தாமிரசபை நெல்லையப்பர் கோவிலிலும், சித்திரை சபை குற்றாலத்திலும் உள்ளது.

    இந்த தாமிரசபையினில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலின் 2-வது திருச்சுற்றில் தெற்கு பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.

    கல்லாலான பீடத்தின் மீது, மரத்தாலான மண்டபத்தை நிறுத்தப்பட்டு, இதனின் மேற்கூரையில் தாமிர தகடுகளால் பதிக்கப்பட்டு உள்ளன. இவை பிரமிடுபோல் கூம்பு வடிவத்தில் தோற்றம் கொண்டவையாகும். தாமிரசபையின் பின்புறமாக சந்தன சபாபதி சன்னதி அமைந்துள்ளது.

    இங்கே மூலவராக நடன திருக்கோலத்தில் சந்தன சபாபதி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    சந்தன சபாபதி கண்களுக்கு பூசப்படும் சந்தனமானது, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி, மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தி ஆகிய 6 சந்தர்பங்களில் களையப்பட்டு புதியதாக மீண்டும் பார்க்கப்படுகிறது. தாமிரசபையில் எழுந்தருளியிருக்கும் சந்தன சபாபதிக்கு 6 அபிஷேகங்கள் நடக்கின்றன.

    தாமிரசபையின் முன்புறமான இல்லாததான் ஒரு மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் மேற்கூரையானது வளைவான ஆர்ச் வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டுமான ெபாருட்கள் எவையும் பயன்படுத்தபடாமல் முட்டுக்கொடுத்து நிறுவிஇருக்கிறார்கள்.

    இந்த மண்டபத்தில் தூண்களின் கீழ்புறம் அமைந்துள்ள யானை சிற்பங்கள்தான் இந்த மண்டபத்தை தாங்கி நிற்கிறது. மார்கழி திருவாதிரை திருநாளில் தாமிரசபைக்கு எழுந்தருளும் உற்சவரான தாமிர சபாபதியின் திருநடனம் இந்த மண்டபத்தில் வைத்துதான் நடைபெறுகிறது.

    இந்த திருநடன காட்சியினை மகாவிஷ்னு மத்தளம் வாசிப்பது போலவும், மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி முதலான இறைவர்களோடு சேர்ந்து பதஞ்சலி, வியாக்கியானம் ஆகிய முனிவர்களும் தரிசிப்பதை போன்று புடைப்பு சிற்பங்களாக இந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களில் உளிகொண்டு உயிரூட்டம் கொடுத்தனர்.

    இந்த திருநடன காட்சி ஒவ்வொரு ஆண்டும் தாமிரசபையில் மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் வெகு விமரிசையாக நடைெபற்று வருகிறது.

    நடராஜ பெருமாளின் ஐந்தொழிலையும் தனித்தனியாக செய்யும் தாண்டவங்களையும், அவற்றை அவர் இயற்றிய இடம் பற்றியும் திருப்பதூர் புராணத்தில் நீங்கள் அறியப்படலாம்.

    தாமிரசபையின் மேற்கூரையில் மரத்தாலான எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன. தாமிரசபையில் நடுநாயகமாக அமைத்துள்ள கல் பீடத்தில் வைத்து நடத்தப்படுகிறது. ஆடல் வல்லானின் திருநடன காட்சியினை கூரையின் முதல் அடுக்கில் இறைவனின் திருமூர்த்தங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

    2-வது அடக்கில் முனிவர்கள் நிறையவர்கள் பார்த்து ரசிப்பது போல் இருக்கின்றன. இந்த மரச்சிற்பங்களில் இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் உருவாக்கி இருக்கிறார்கள்.

    • மகாவிஷ்ணு ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.
    • இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் வகையில் பல மண்டபங்கள் உள்ளன.

    அவைகளின் விவரங்கள்:-

    ஆயிரம் கால் மண்டபம்

    இந்த மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

    ஊஞ்சல் மண்டபம்

    96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களை உடையது இந்த மண்டபம். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும், ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இந்த மண்டபத்தில் தான் நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    சோமவார மண்டபம்

    இந்த மண்டபம் சுவாமி கோவிலில் வட பக்கத்தில் அமைந்துள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கு இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. இந்த மண்டபம் 78 தூண்களை உடைய பெரிய மண்டபம் ஆகும்.

    சங்கிலி மண்டபம்

    சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் இந்த மண்டபம் சங்கிலி மண்டபம் என பெயர் பெற்றுள்ளது. 1647-ம் ஆண்டு வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிலைகள் கண்ணை கவரும்.

    மணிமண்டபம்

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் மணிமண்டபம் என்று பெயர் பெற்றது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இந்த மண்டபம். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணை தட்டினாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். சுவரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான சுவரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசை தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    வசந்த மண்டபம்

    100 தூண்களை உடைய இந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756-ம் ஆண்டு திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

    சிறப்பு பெற்ற சிற்ப தூண்கள்

    நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு மறுபக்கம் தன் பெரிய பிள்ளைக்கு சோறு ஊட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்து செல்லும் அக்கால கணவன்-மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம் தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனை கொல்ல வந்து கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன் போன்ற ஒரு சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைபாடுகள் காண்போரின் மனதை கொள்ளை கொள்ள செய்யும்.

    இந்த சிற்பங்களில் எலும்பு, நரம்பு, நகம் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால், முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

    • சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர்.
    • வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடை பெற்றது.

    காலை 8.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கிய நிலையில் பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வானம் அதிர கோஷங்களிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிது நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகமானது.

    ஒரு கட்டத்தில் 4 ரத வீதிகளிலும் தார் சாலையை பார்க்க முடியவில்லை. திரும்பி பார்க்கும் இட மெல்லாம் பக்தர்கள் தலைகள் தான் தென்பட்டது. சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர். வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் தேரோட்ட விழாவில் மிக அதிக அளவில் பங்கேற்றனர். அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக டவுன் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சொக்கப்பனை முக்கு வரையிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதே போல் டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் வழியாக மவுண்ட் சாலையில் கணேஷ் தியேட்டர் வரையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    ×